ஆண்களுக்கான வேட்டிகளை அவற்றின் அளவுகளை வைத்து நான்கு முழம்(Single Veshti), எட்டு முழம் வேட்டி(Double Veshti) என வகைப்படுத்தலாம். அது போல வேட்டியின் நிறம், அதன் துணியின் வகையை வைத்துக் கூட வெள்ளை வேட்டி(White Veshti), கலர் வேட்டி(Color Veshti), பட்டு வேட்டி, பருத்தி வெட்டி, பருத்தியுடன் பட்டு கலந்த வேட்டி(Cotton Blend), பட்டுப் போன்ற செயற்கை வேட்டி(Art Silk - Artificial Silk) என வகைப்படுத்தலாம். அதே போன்று அந்த வேட்டிகளை மேலும் அவற்றின் கரையின் வடிவம், அளவை வைத்து சின்ன கரை(Small Border Veshti), பெரிய கரை(Big Border Veshti), பட்டுக் கரை/ஜரிகை வேட்டி(Jari Veshti), Hand-Block Prints/கைவேலைப்பாடுகள் நிறைந்த கரைகள் வைத்த வேட்டி, வித்தியாசமான/ஆடம்பரமான வேட்டி கரைகள்(Fancy Border Veshti) என மேலும் வகைப்படுத்தலாம்.
வயது வந்த ஆண்கள் பொது இடங்களில் வைத்து எண்ணெய் தேய்த்து குளிப்பது சற்று சிரமமான விடையமாகும், ஆனால் நிச்சயம் ஆண்களால் அந்தரங்கப் பகுதி தவிர்ந்த ஏனைய பகுதிகளுக்கு பொது இடங்களில் வைத்து எண்ணெய் தேய்த்து குளிக்க முடியும். Pehlwani/குஸ்தி பயிற்சி எடுக்கும் ஆண்கள் அவ்வாறு பொது இடங்களில் ஒருவருக்கொருவர் எண்ணெய் தேய்த்து, எண்ணெய்க் குளியல் போடுவதை வழமையாகக் கொண்டுள்ளனர். இடுப்பில் கட்டிக் குளிக்கும் இரண்டு முழ துண்டு - Bathing Towel இரண்டு முழத் துண்டை(Desi Men Bathing Towel) இடுப்பில் கட்டிக் கொண்டு, உடல் முழுக்க நல்லெண்ணெய்யைத் தேய்த்துக் கொண்டு, அருவிக்கு கீழே மணப்பெண் மாதிரி தலையைக் கவிழ்ந்து நின்று குளிக்கும்போது ஏற்படும் சுகமே தனி. தலையில் கல்லைத் தூக்கிப் போடுவது போலத்தான் தெரியும். ஆனாலும் அதில் உள்ள சுகம் இருக்கே! அது சொன்னால் தெரியாது; குளித்து அனுபவித்தால் தான் புரியும். பொது இடங்களில் உள்ள நீர் நிலைகளில், உதாரணமாக ஆறு, குளம், நீர்வீழ்ச்சி/அருவி, கடல் போன்ற இடங்களில் ஆண்கள் எண்ணெய் தேய்த்துக் குளிக்கும் போது அவர்களின் முழங்கால்களுக்குக் கீழ் எண்ணெய் தேய்ப்பதைத் தவிர்க்க வேண்டும். அ...