ஒரு ஆண் கூட நெருங்கிப் பழக வேண்டும் என்றால் அவன் அழகாக இருந்தால் மாத்திரம் போதாது. அவனை நெருங்கும் அளவுக்கு அவனது உடல் வாடை உங்களுக்குப் பிடித்திருக்க வேண்டும். அவன் வாசத்தை முகரும் போது நீங்கள் கிளர்ச்சியடைய வேண்டும், மாறாக மயங்கி விழக் கூடாது. மண்,பெண், மலர் செண்டு வாசனையை விட ஆண் வாசனை யாருக்கெல்லாம் பிடிக்கும்? ஒரு ஆணின் உடல் வாடையில்(Body Odor) அவனது பரம்பரை அலகுகள்(Genetics), அவனது உணவு பழக்கம், அவன் கடைப்பிடிக்கும் உடல் சுகாதார பழக்கங்கள், அவனது தோலில் உள்ள சில Bacteria வகைகள், அவனது உடலில் உள்ள முடிகள்(Body Hair), அவனது ஆண்மை வாடை/ஆண் வாசம், அதாவது அவனது உடலில் சுரக்கும் Testosterone ஹார்மோனின் அளவும், அதனால் தூண்டப்படும் வியர்வை, அதனால் உருவாகும் வாசம், அவன் பயன்படுத்தும் Deodorant/Scent போன்ற பல விடையங்கள் செல்வாக்குச் செலுத்தினாலும் அவனது இனம், தோலின் நிறம் போன்றன செல்வாக்குச் செலுத்தாது.
Tamilaangal, a Men Fashion and Lifestyle blog for Tamil Men. Dive into our engaging content that covers everything from selecting the perfect underwear to embracing traditional wear like veshti and lungi. We also explore fitness tips to help you stay in shape, along with guidance on navigating puberty with confidence and grace. Whether you're looking to upgrade your wardrobe or enhance your lifestyle, our blog is your go-to source for all things fashion and well-being.