ஆண்களுக்கோ, பெண்களுக்கோ குண்டிகள் பெரிதாக, உருண்டையாக இருந்தால் அவர்களால் தளர்வான ஆடைகள் அணிய முடியாது. அப்படி அணிந்தால் மேலதிக துணி அவர்களின் பீரோவுக்குள் புகுந்து விடும். புரியலயா? குண்டிகளுக்கு நடுவே உள்ள பிளவை(Butt Crack) தான் பொதுவாக பீரோ(Bureau/Furniture) என்பார்கள்.
உட்கார்ந்து எழுந்திருக்கும் போது எல்லாம் உள்ளே புகுந்து இருப்பதை இழுத்து விடுவதே இவர்களுக்கு பெரும் தொல்லையாக இருக்கும். சில காலத்துக்கு பிறகு அப்படி உள்ளே புகுந்த ஆடை, உள்ளாடைகளின் துணிகளை இழுத்து விடும் பழக்கமே இவர்களிடம் இல்லாமல் போயிடும். அந்தளவுக்கு அதனை அவர்கள் இயல்பான விடையமாக ஏற்றுக் கொள்ள ஆரம்பித்து விடுவார்கள்.
ஆண்களுக்கும் பெண்களுக்கும் குண்டிகள் என்பது கவர்ச்சியான ஒரு உடல் பகுதியாகும். ஆகவே இப்படி துணி மாட்டிக் கிட்டு இருப்பதை நகைப்புக்கு உரிய விடையமாக பலர் பார்ப்பது உங்களை அசெளகரியத்திற்கு உள்ளாக்கலாம். இதுக்கு ஒரு End இல்லையா சார்? என்று நீங்கள் கேட்பது புரிகிறது. இதனை முழுமையாக தவிர்க்க முடியாவிட்டாலும் கூட, இதனை கட்டுப்படுத்தலாம்.
1. நீங்கள் அணியும் ஜட்டி தளர்வாக இருக்கக் கூடாது. Low Rise Underwear களைத் தெரிவு செய்து அணிவது சிறந்தது.
2. Jockstrap Underwear போன்ற குண்டிகளை(Butt Cheek) ஒன்றுடன் ஒன்று இறுக்கக் கூடிய ஜட்டிகளை அணியலாம். அதே நேரம் Compression Shorts, Compression Pant/Sports Tights அணிந்து ஆடைகளை அணிவதன் மூலம் சூத்து பிளவுகளுக்குள் துணி மாட்டிக் கொள்வதை தவிர்க்கலாம்.
3. தளர்வான Pant, வேட்டி/லுங்கி, Sweatpants அணியும் போது உள்ளே Boxer Shorts அணியலாம். அதன் மூலம் உங்கள் குண்டி பிளவுகளுக்கு நடுவே அதிகளவில் துணி மாட்டிக் கொள்வதை தவிர்க்கலாம்.
4. இடுப்பில்(Waist) கீழ் ஆடைகளை அணிவதற்குப் பதிலாக, இடுப்புக்குக் கீழே இறக்கி இடையில்(Hip) தங்கும் வகையில் கீழ் ஆடைகளை அணியலாம். அதன் மூலம் மேலதிக துணி சூத்து பிளவுக்குள் சிக்கிக் கொள்வதை தவிர்க்கலாம்.
தளர்வான ஆடைகளையும், Mid Rise/High Rise Underwear களையும், இலாஸ்டிக் போன்று இழுபடக் கூடிய துணிகளில்(Stretchable) செய்யப்பட்ட ஆடைகளையும் இடுப்புக்கு மேலே தூக்கி அணியும் போது தான், அவை உங்கள் சூத்துப் பிளவுக்குள் நுழைய எத்தனிக்கும்.
உங்கள் இடைப்பகுதியில் இறுக்கமாக இருக்கும் வகையில் Dress Pant யை அளவெடுத்து தைப்பதன் மூலம், குண்டிப் பிளவுக்குள் துணி மாட்டிப்பதை வெகுவாகக் குறைக்கலாம்.
Denim Jeans அணியும் போது Stretchy Denim Jeans, Skinny Jeans அணிவதை தவிர்ப்பதன் மூலம் குண்டிப் பிளவுகளுக்குள் துணி மாட்டிக் கொள்வதைத் தவிர்க்கலாம்.
Comments
Post a Comment