வயதுக்கு வந்த ஆண்கள் நான்கு முழ வேட்டி கட்டுவதை விட எட்டு முழ வேட்டி கட்டுவது சிறந்தது. எட்டு முழ வேட்டியை இரண்டாக மடித்து நான்கு முழ வேட்டி போல கட்டாமல், எட்டு முழ வேட்டியை எட்டு முழ வேட்டியாகவே கட்டுவதன் மூலம் நான்கு முழ வேட்டியை வயது வந்த ஆண்கள் அணியும் போது சந்திக்கும் பல்வேறு அசெளகரியங்களை தவிர்க்கலாம்.
நேர்த்தியாக வேட்டி கட்டப் பழகினால் வேட்டி கூட கட்டத் தெரியாத ஆண்மையற்ற ஆண்கள் போல ஓட்டிக்கோ கட்டிக்கோ Velcro வேட்டிகள் பின்னால் செல்லத் தேவையில்லை.
இடுப்பில் இருக்கும் அருணாக்கொடியை எடுத்து வேட்டியின் கட்டின் மேல் விட்டு, கீழ் நோக்கி வேட்டியை உருட்டி மடித்து விட்டால், வேட்டி கழறவே கழறாது. மிகவும் இறுக்கமாக இருக்கும்.
வயது வந்த ஆண்கள் நான்கு முழ வேட்டி கட்டினால், நடக்கும் போது அல்லது காற்றுக்கு வேட்டி விலகி தொடை வெளித்தெரியும் சந்தர்ப்பம் அதிகமாக இருக்கும்.
ஆண்கள் வேட்டி கட்டும் போது, வேட்டியானது அவர்களின் இடுப்பு/இடையில் இருந்து கணுக்காலுக்கு(Ankle) கீழ் வரை இருக்க வேண்டும். ஆண்கள் கட்டியிருக்கும் வேட்டி தரையில் பட்டும் படாமல், படலாம். ஆனால் தரையில் அரையக் கூடாது/தங்கக் கூடாது.
தென்னிந்திய ஆண்களுக்கு ஓட்டிக்கோ கட்டிக்கோ வேட்டிகளை இறக்கியது போது Dhoti அணியத்தெரியாத வட இந்திய ஆண்களுக்கு Dhoti Pant யை சந்தையில் இறக்கியுள்ளார்கள்.
வயது வந்த ஆண்கள் ஜட்டி போடாமல் உள்ளே Pant, Shorts அணிந்து வேட்டி கட்டுவது, அவர்களின் தன்னம்பிக்கையை மற்றவர்கள் குறைத்து எடை போட வழி செய்யும்.
அவர்களின் ஆண்மையும் கேள்விக்குறியாகும். வேட்டியை முழங்கால்களுக்கு மேல் மடித்துக் கட்டவும் முடியாது. காற்றுக்கு வேட்டி விலகும் போது உள்ளே அணிந்திருக்கும் Pant, Shorts இன் கால்கள் வெளித்தெரியும்.
ஆண்கள் ஜட்டி போடாமல் வேட்டி கட்டினால், காற்றுக்கு வேட்டி பறக்கும் போது மானமும் சேர்ந்து பறக்கும். ஆகவே வயது வந்த ஆண்கள் ஜட்டி போட்டு வேட்டி கட்ட வேண்டும்.
வேட்டி, லுங்கி கட்டும் போது அவற்றின் கட்டு, அவர்கள் உள்ளே அணிந்திருக்கும் ஜட்டியின் Waistband இன் மேல் இருக்கக் கூடாது. அப்படி இருந்தால், அவர்களால் தேவை ஏற்படும் போது, ஜட்டியை மாத்திரம் கழட்ட முடியாது போகலாம்.
Boxer Briefs, Boxer Shorts வகை ஜட்டிகளை விட ஆண்கள் வேட்டி அணியும் போது Briefs or Trunks வகை ஜட்டி அணிந்து வேட்டி கட்டுவது சிறந்ததாகும்.
ஆண்கள் அணிந்திருக்கும் வேட்டியுடன் குளித்தால் அல்லது மழையில் நனைந்து வேட்டி ஈரமான அது உடலுடன் ஒட்டி அந்தரங்கத்தை அப்பட்டமாக வெளிக்காட்டும். ஆண்கள் அவ்வாறான நிலையில் ஜட்டி அணிந்திருப்பதன் மூலமே மானத்தை மறைக்க முடியும்.
ஆண்கள் வேட்டி கட்டிக் கொண்டு குளிக்கும் போது அல்லது வேட்டி கட்டிக் கொண்டு நிற்கும் போது மழையில் நனைந்தால், வேட்டியை முழங்கால்களுக்கு மேல் மடித்துக் கட்டிக் கூட(துணி அடுக்குகளைக் கூட்டி) அந்தரங்கம் அப்பட்டமாக வெளித்தெரிவதைக் கட்டுப்படுத்தலாம்.
Comments
Post a Comment