லுங்கி என்பது மிகவும் காற்றோட்டமான ஆண்களுக்கான இரவு நேர ஆடை மாத்திரம் அல்ல. அதனை வீட்டில் இருக்கும் போதும் அணியலாம். வெளியில் வேலை செய்யும் போதும் அணியலாம். ஆனால் அணிந்திருக்கும் தேவையினைப் பொருத்து லுங்கி அணியும் போது உள்ளே ஜட்டி அணிய வேண்டுமா? இல்லையா? என்பதை முடிவு செய்ய வேண்டியது உங்களின் கையில் தான் உள்ளது.
லுங்கி/சாரம் என்பது ஆண்களைப் பொறுத்தவரையில் வெறும் ஆடை மாத்திரம் கிடையாது. அதனை அணிவதால் ஆண்களுக்கு பல அனுகூலங்கள் உள்ளன. அதிலும் குறிப்பாக மூட்டிய லுங்கி(Stitched Lungi - சாரம்/கைலி) ஆண்களுக்கு பல வகையில் உதவும்.
ஆண்கள் லுங்கி அணியப் பழகுவதால் கிடைக்கும் அனுகூலங்களில் பிரதானமானது, அதனை ஆடை மாற்றுவதற்கு பயன்படுத்துவதாகும். அதில் என்ன புதுமை இருக்கப் போகிறது என்று நீங்கள் நினைப்பது புரிகிறது.
தனி அறையில், மூடிய பாத்ரூமில் ஆண்கள் முழு நிர்வாணமாகிக் கூட ஆடை மாற்றலாம். ஆனால் பொது இடங்களில் குளித்து விட்டு, அல்லது நண்பர்களுடன்/உறவினர்களுடன் தங்கியிருக்கும் போது அவர்களின் முன்னிலையில் முழு நிர்வாணமாகி உடை மாற்ற விரும்பாவிட்டால், உங்களால் லுங்கியை(சாரம்) பிரம்மாஸ்திரமாக(Ultimate Tool) கையில் எடுக்க முடியும்.
மூட்டிய லுங்கியை இடுப்பில் கட்டாமல் தோள் வரை தூக்கிப் பிடித்திருக்கும் போது அது ஒரு Mobile Room போல தொழிற்படும்.
துணியால் செய்யப்பட்ட Tube போன்ற லுங்கியை(சாரம்) தலைக்கு மேலாகவோ அல்லது காலுக்கு கீழாகவோ அணிந்து கொண்டு அதனை இடுப்பில் கட்ட வேண்டும்.
லுங்கியின் உதவியுடன் ஆண்கள் ஜட்டி அணிவது எவ்வாறு?
அணிந்த லுங்கியை முழங்கால்களுக்கு மேல் மடித்து கட்டி விட்டு ஜட்டியை எடுத்து முழங்கால்களுக்கு மேல் வரை அணியலாம். பிறகு லுங்கியின் கட்டை அவிழ்ந்து அதனை தோள் வரை தூக்கி தோளை போர்த்துக் கொண்டு லுங்கி உள்ளே கையை விட்டு ஜட்டியை அணியலாம்.
Note: ஆண்கள் ஜட்டி அணிந்து விட்டாலே பாதி ஆடை அணிந்ததற்குச் சமம். விரும்பினால் லுங்கியை கழட்டி விட்டு ஜட்டியுடன் நின்றே கூட ஏனைய ஆடைகளை அணியலாம்.
லுங்கியின் உதவியுடன் ஜட்டியை அணிந்த பின்னர், மீண்டும் லுங்கியை இடுப்பில் கட்டி விட்டு, லுங்கியை முழங்கால்களுக்கு மேல் மடித்து விட்டுக் கொண்டு ஜீன்ஸ்/பேண்டை லுங்கியின் மறைவில் தொடை வரை அணிந்த பிறகு, கால்களை அகட்டி வைத்துக் கொண்டு(அப்படி செய்யும் போது அணிந்த ஜீன்ஸ்/பேண்ட் கீழே இறங்காது) இடை வரை ஜீன்ஸ்/பேண்டை தூக்கலாம்.
பிறகு லுங்கியை கழட்டி வாயில் கடித்துக் கொண்டு ஜீன்ஸ்/பேண்டை இடுப்பில் அணிந்து கொள்ளலாம். பிறகு தேவை என்றால் லுங்கியை கழட்டி விடலாம்.
லுங்கியின் மறைவில் நிர்வாணமாகாமல் அணிந்திருக்கும் ஜீன்ஸ்/பேண்ட்/ஷார்ட்ஸ்/ஜட்டியை கழட்டி வேறு ஆடை மாற்றுவது எப்படி?
முதலில் சட்டை, பனியனை விரும்பினால் கழட்டலாம். பிறகு சாரத்தை எடுத்து தலை வழியாக அணிந்து கொண்டு அதனை இடுப்பில் கட்டாமல் லுங்கியை தோள் வரை தூக்கி தோளை போர்த்துக் கொண்டும் லுங்கியை வாயில் கடித்துக் கொண்டும் அணிந்திருக்கும் ஜீன்ஸ்/பேண்டினை கழட்ட ஆயத்தமாகலாம்.
ஜீன்ஸ்/பேண்டின் Button, Zip யை கழட்டிய பின்னர் அதனை தொடை வரை இறக்கிக் கொண்டு(விரும்பினால் ஜட்டியையும் சேர்த்தே கூட கழட்டலாம்) லுங்கியை இடுப்பில் கட்ட வேண்டும். பிறகு. லுங்கியை முழங்கால்களுக்கு மேல் மடித்துக் கட்டுக் கொண்டு தொடை வரை இறக்கிய ஜீன்ஸ்/பேண்ட் மற்றும் ஜட்டியை முழுமையாக கழட்டி விடலாம்.
ஜட்டியை பிறகு கழட்டுவதாக இருந்தால், ஜீன்ஸ்/பேண்டை கழட்டிய பின்னர் முழங்கால்களுக்கு மேல் மடித்து கட்டியிருக்கும் லுங்கிக்குள்ளே கையை விட்டு ஜட்டியை கழட்டலாம்.
குறிப்பு: அவ்வாறு ஜட்டியை தனியாக கழட்டும் போது ஜட்டியின் Waistband இன் மேல் லுங்கியின் கட்டு இல்லாது இருக்க வேண்டும்.
Tips: சில ஆண்கள் லுங்கியை வாயில் கடிக்காமல், லுங்கியை(சாரம்) நெஞ்சுப் பகுதியில் கட்டி விட்டு கூட அணிந்திருக்கும் ஜீன்ஸ்/பேண்ட், ஜட்டியை லுங்கிக்குள் கையை விட்டு கழட்டுவர்.
இதே முறையில் ஆண்களால் வேட்டி, துண்டு, தைக்காத லுங்கி போன்றவற்றை பயன்படுத்தியும் ஆடை மாற்றலாம். ஆனால் அவை Tube போன்று உடலை சுற்றி மறைவை ஏற்படுத்தாது.
ஆகையால் ஆடை அணியும் போதும், கழட்டும் போதும் வேட்டி/துண்டு/லுங்கி விலகி அந்தரங்கம் எட்டுப்பார்க்க அதிக வாய்ப்பு உள்ளது. அதனைத் தவிர்ப்பதற்கு ஒதுக்குப்புறமான இடங்களில், பொதுமக்கள் குறைவான/இல்லாத பக்கமாக திரும்பி நின்று உடை மாற்றலாம்.
Read More: லுங்கி கட்டுவது தொடர்பாக ஆண்கள் தெரிந்து வைத்திருக்க வேண்டிய அடிப்படையான விடையங்களில் தொகுப்பு.
வெள்ளை நிற வேட்டி, அல்லது வெள்ளை நிற லுங்கி/சாரம் அல்லது வெளிர் நிற லுங்கி கட்டிக் கொண்டு ஜட்டி போடாமல் வெளிச்சமான பொருட்களின் முன்னால் நின்றால் எதிரில் நிற்பவர்களுக்கு உங்கள் அந்தரங்கம்(ஆண்குறி விளிம்பு/தொங்கும் கொட்டைகள்) X-Ray படம் போல வெளித்தெரியும் வாய்ப்பு அதிகமாகும். அதே போல வெளிர் நிற லுங்கி கட்டிக் கொண்டு நீரில் நனைந்தால் உங்கள் உடலுடன் லுங்கி ஒட்டிக் கொண்டு அப்பட்டமாக எல்லாவற்றையும் வெளித்தெரியச் செய்து விடும்.
Keywords: ஆண்கள் தாம் அணிந்திருக்கும் ஆடைகளை கழட்டுவதற்கு, அல்லது வேறு ஆடைகளை அணிவதற்கு முழுமையாக நிர்வாணம் ஆக வேண்டுமா? பொது இடங்களில் வைத்து ஆண்கள் ஆடை மாற்றுவது எப்படி? ஆற்றில் குளிக்கும் ஆண்கள் உடை மாற்றுவது எப்படி? துண்டின் உதவியுடன் உடை மாற்றும் ஆண்கள், வேட்டியின் மறைவில் உடை மாற்றும் ஆண்கள், லுங்கியின் மறைவில் உடை மாற்றும் ஆண்கள், சாரத்தை உடை மாற்ற பயன்படுத்துவது எப்படி? Jeans, Pant, Shorts, Underwear
Comments
Post a Comment