ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச ஆண்கள் தினம்/International Men's Day (IMD) நவம்பர் மாதம் 19 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் ஆண்கள் இந்த உலகத்திற்கும், தாம் வாழும் சமூகத்திற்கும், தனது குடும்பத்திற்கும் செய்யும் நல்ல விடையங்களை வெளிக்காட்டி பாராட்டுவதுடன், அவர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் தொடர்பிலும் சமூகத்திலும் சமூக வலைத்தளங்கள் வாயிலாகவும் அதிகம் பேசப்படுகிறது.
ஆண்கள் ஜட்டி போடுவது அவசியமாகும். அதிலும் குறிப்பாக வயது வந்த ஆண்கள் அவசியமாக ஜட்டி அணிய வேண்டும். ஆனால் ஜட்டியை கண்மூடித்தனமாக ஆண்கள் அணியக் கூடாது. ஆண்கள் தெரிவு செய்து அணியும் ஜட்டியானது அவர்களது பாலுறுப்புகளுக்கு இதமாக இருக்க வேண்டும், அதே வேளை அவற்றிற்குத் தேவையான Support யையும் கொடுக்க வேண்டும். ஆண்கள் எப்போதும் துவைத்த, சுத்தமான, உலர்ந்த உள்ளாடைகளை அணிய வேண்டும். ஆண்கள் ஈரமான ஜட்டி, அணிவது நல்லதல்ல. அதன் மூலம் அந்தரங்கப் பகுதிகளில் அரிப்பு, எரிச்சல் போன்றன ஏற்படலாம். ஈரமான ஜட்டி அணிந்தால் சிறிது நேரத்தில் உங்களைச் சூழ ஒரு துர்வாடை உருவாக ஆரம்பித்து விடும்.
Comments
Post a Comment