இன்பம் பெற பிறப்பு உறுப்பை தூண்டிவிட்டு விந்துவை வெளியேற்ற முயற்சிப்பது தான் " சுய இன்பம்" இதனை மாஸ்டர்பேஷன் (Masturbation) என்கிறார்கள்.
மருத்துவ துறையின் தந்தை ஹிப்போகிரேடஸ், விந்தணு முதுகுத்தண்டில் சுரப்பதால், சுய இன்பத்தில் ஈடுபட்டு விந்துவை விரயம் செய்வதால் பின்னர் நரம்பு தளர்ச்சி ஏற்பட்டு மனநிலை பாதிக்கப்படும் என்றார். (மூட நம்பிக்கை)
18 -ம் நூற்றாண்டில் வாழ்ந்த சுவிட்சர்லாந்து டாக்டர் டிஸ்ஸாட் என்பவர் , காக்கா வலிப்பு வரும், மூளை வளர்ச்சி பாதிக்கும், கண்கள் உள்ளே போய் கண்களுக்குக் கீழே கரு வளையம் விழும் என்றார். (மூட நம்பிக்கை)
சுய இன்பத்தில் ஈடுபடும் பெண்களுக்கு மாதவிலக்கு வலி கடுமையாக இருக்கும். குழந்தை பிறக்கும் போது வலி தாங்காமல் தாய் மற்றும் குழந்தை இறக்கலம். கர்ப்பப்பை பெண்குறி வழியே வெளியே வந்து விடும் என்றார்கள். (மூட நம்பிக்கை)
சுய இன்பம் என்பதே ஒரு வகை நோய் மாதிரிதான். இப்படி நிறைய பயமுறுத்தல்களைச் சொன்னார். இதனால் அமெரிக்காவில் டெக்சாஸ் பகுதியில் வில்லியம் ஆக்டன் என்ற டாக்டர், சுய இன்பம் பசங்க செய்யாமல் இருக்க, ஆணுறுப்பின் மேற்புறத் தோலுக்குள் ஆபரேஷன் மூலமாக மெல்லிய வெள்ளிக் கம்பியை நுழைத்து விடுவார். சுய இன்பம் அனுபவிக்கும் நோக்கில் பையன் தொட்டால், வலி உயிர்போகும் அளவுக்கு இருக்கும். பசங்க கையைக் கட்டிக் கொண்டு சும்மாவே இருப்பார்கள். (மூட நம்பிக்கை)
பெண் பிள்ளைகளுக்கு பெண்ணுறுப்பில் சூடு வைத்துக் காயமாக்கி விடுவார்கள். காயமான இடத்தில் கை வைத்தால், வலிக்கும் என்பதால் சுய இன்பத்தில் ஈடுபட மாட்டார்கள். அப்படியும் புண் ஆறி கை வைத்தால், மேலிருந்து முக்கால் பாகம் தைத்து விடுவார்கள். (மூட நம்பிக்கை)
1856 ல் தொடங்கி 1932 க்குள் மருத்துவம் வளர்ந்து சுய இன்பத்தை தடுக்கும் கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டு, 33 கருவிகளுக்கு அமெரிக்கா காப்புரிமை வழங்கியது. இந்த கருவியில் ஒன்று ஜட்டி மாதிரி தயாரித்து பெல்டில் பூட்டு வைத்து பூட்டி, சாவி பெற்றோர்களிடம் இருக்கும், ஒன்னுக்கு, டாய்லெட் போறப்போ பெற்றோர்களின் மேற்பார்வையில் பூட்டு திறக்கப்பட்டு, காரியம் முடிந்ததும் மீண்டும் பூட்டு போடப்படும். (மூட நம்பிக்கை)
சுய இன்பத்திற்கு எதிராக மாற்று முறை மருத்துவர்கள் சொன்னது பூராவும் தப்பு என்று 20 ம் நூற்றாண்டில் உறுதியானது. ஆங்கில மருத்துவர்கள் ஆய்வு செய்து 1951 இல் பிள்ளைகள் சுய இன்பத்திற்காக தங்கள் குஞ்சுமணியையோ, சங்கு சப்பரத்தையோ நோண்டினால் அதைத் தடுக்காதீர்கள். அது இயல்பான ஒரு பழக்கம்தான் என்றார்கள். மேலும் விபச்சாரத்தில் குதித்து எய்ட்ஸ்யை அள்ளாமல் இருக்க சுய இன்பம் தேவை என்றார்கள். சுய இன்பம் என்பது மிகவும் பாதுகாப்பான ஒரு பாலியல் செயற்பாடாகும்.
பெண்குறியினுள் ஆண்குறியை நுழைத்து இயக்குவதற்கும், ஆண்குறியை கையால் பிடித்து ஆட்டுவதற்கும், உருவுவதற்கும் எந்தவொரு வித்தியாசமும் இல்லை. சுய இன்பம் செய்வதால் மருத்துவ பிரச்சனைகள் ஆண்களுக்கு ஏற்படும் என்றால், உடலுறவு கொண்டாலும் அது ஏற்பட வேண்டும், இல்லையா?
மேலே கூறப்பட்டுள்ள பயமுறுத்தும் விடையங்கள் அனைத்தும் அந்தக் காலத்தில் இருந்த மூட நம்பிக்கைகள். அவை எதுவும் உண்மையல்ல. சுய இன்பம் செய்வது ஆரோக்கியமான பழக்கமாகும்.
Read More: ஆண்கள் பூப்படைவது தொடர்பான அடிப்படை அறிவை பெற்றுக் கொள்ள இங்கே அழுத்தவும்.
ஆயுர்வேத நூலான சரக சம்ஹிதை, இச்சைகளை அடக்கக் கூடாது என்றது. மேலும் வயதான காலத்தின் செக்ஸின் வடிகால் சுய இன்பம் தான் என்றது. பழங்கால சிற்பங்களில் கூட சுய இன்ப காட்சிகள் இருக்கிறது. இந்தப் பழக்கத்திற்கு "பாநி மந்தன் " என்று பெயர்.
நவீன கால செக்ஸ் சிகிச்சையிலும் கூட, சுய இன்பம் ஒரு சிகிச்சை முறையாக இருக்கிறது. நோய் என்று கருதப்பட்ட ஒரு பழக்கம் , நவீன மருத்துவத்தில் மருந்தாக மாறி இருப்பதற்கு காரணம் மருத்துவ அறிவியல்தான் என்கிறார்கள்.
மனிதர்கள் மட்டுமில்லை, குரங்கு, முள்ளம்பன்றி, யானை, பூனை, நாய் என பல விலங்குகளுக்கு இந்தப் பழக்கம் உண்டு. ஆனால் இந்த பழக்கம் அளவுக்கு மீறக்கூடாது.
ஆண்கள் சுய இன்பம் செய்யும் பழக்கத்திற்கு அடிமையாகாமல் இருக்கவே யூதர்களும் முஸ்லிம்களும் ஆண்களின் ஆண்குறியின் முன் தோலை வெட்டி அகற்றினார்கள். சுன்னத் செய்து கொள்ளாத ஆண் சுய இன்பம் செய்யும் போது அனுபவிக்கும்(முன் தோல் கொடுக்கும் சுகத்தை) சுகத்தை சுன்னத் செய்த ஆண்கள் சுய இன்பம் செய்யும் போது அனுபவிக்க மாட்டார்கள் அதனால் அவர்கள் அந்த பழக்கத்திற்கு அடிமையாக மாட்டார்கள் என்று நம்பினார்கள்.
முஸ்லிம் ஆண்கள் தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய் பூசி கை அடிப்பார்கள். எண்ணெய்க்கு மாற்றீடாக Personal Lube, எச்சில் கூட பயன்படுத்தலாம்.
இந்தப் பழக்கத்திலிருந்து விடுபட, தனிமையில் இருக்கும் நேரத்தை குறைத்துக் கொண்டு. தியானம், தோட்ட வேலை , இப்படி எதிலாவது மனதை ஈடு படுத்த வேண்டும். குறிப்பாக செல்போனில் பலான வீடியோவை பார்க்காமல் இருக்க வேண்டும் என்கிறார்கள் உளவியல் மருத்துவர்கள்.
சுய இன்பம் அனுபவித்தால் மறுமையில் அதாவது சொர்க்கத்தில் கைகளில் கர்ப்பம் உண்டாகும் - முசாஹித் சிஹாத் ஹான் என்ற துருக்கி பெரியர் சொல்றார். ஆதாரம் என்ன ? எனக்குத் தெரியவில்லை.
தமது மனைவியர் அல்லது தமது அடிமைப் பெண்களிடம் தவிர தமது கற்பைக் காத்துக் கொள்வார்கள். அவர்கள் பழிக்கப்பட்டோர் அல்லர்.. இதற்கு அப்பால் (வேறு வழியை) தேடியவர்களே வரம்பு மீறியவர்கள். (அல்குர்ஆன்: 23:5-7)
ஆண்கள் தமது மனைவியர் மூலம் அல்லது அடிமைப் பெண்கள் மூலம் தவிர மற்ற வழிகளில் கற்பைக் காத்துக் கொள்ள வேண்டும் என்றும், இவ்விரு வழிகளில் தவிர மற்ற வழிகளில் இச்சையைத் தீர்த்துக் கொள்வோர் பழிக்கப்பட்டவர்கள் என்றும் வரம்பு மீறியவர்கள் என்றும் இவ்வசனங்கள் தெளிவாக அறிவிக்கின்றன.
விபச்சாரத்தில் விழுந்து விடுவோம் என்று அஞ்சும் நிலை இப்போது ஏற்படுவது போலவே நபிகள் நாயகம் (ஸல்) காலத்திலும் இருந்தது. இதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மாற்று வழியையும் நமக்குச் சொல்லித் தந்துள்ளனர்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் யார் தாம்பத்தியத்திற்குச் சக்தி பெற்றிருக்கிறாரோ அவர் திருமணம் செய்யட்டும்; ஏனெனில் திருமணம் (அந்நியப் பெண்களைப் பார்ப்பதை விட்டும்) பார்வையைக் கட்டுப்படுத்தும்; கற்பைக் காக்கும். யார் அதற்குச் சக்தி பெறவில்லையோ அவர் நோன்பு நோற்கட்டும். அது அவரது இச்சையைக் கட்டுப்படுத்தும். இதை அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.((புகாரி: 1905))
அப்துர் ரஹ்மான் பின் யஸீத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நானும் அல்கமா மற்றும் அஸ்வத் (ரஹ்) ஆகியோரும் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களிடம் சென்றோம். அப்போது அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் (பின் வருமாறு) சொன்னார்கள்: நாங்கள் (வசதி வாய்ப்பு) ஏதுமில்லாத இளைஞர்களாக நபி (ஸல்) அவர்களுடன் இருந்தோம். அப்போது நபி (ஸல்) அவர்கள் எங்களிடம் இளைஞர்களே! தாம்பத்தியம் நடத்த சக்தி பெற்றோர் திருமணம் செய்துகொள்ளட்டும். ஏனெனில், அது (தகாத) பார்வையைக் கட்டுப்படுத்தும்; கற்பைக் காக்கும். (அதற்கு) இயலாதோர் நோன்பு நோற்றுக் கொள்ளட்டும்! ஏனெனில், நோன்பு (ஆசையைக்) கட்டுப்படுத்தக் கூடியதாகும் என்று சொன்னார்கள்.((புகாரி: 5066))
நபிகள் நாயகம் (ஸல்) காலத்தில் போர் செய்வதற்காக வெளியே செல்லும் போது மனைவியர் இல்லாததால் விபச்சாரத்தில் விழுந்து விடுவோம் என்று நபித்தோழர்கள் அஞ்சினார்கள். எனவே அவர்கள் ஆண்மை நீக்கம் செய்ய அனுமதி கேட்ட போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அனுமதி மறுத்து விட்டனர்.
இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் ஒரு போரில் கலந்து கொண்டிருந்தோம். அப்போது எங்களுடன் துணைவியர் எவரும் இருக்கவில்லை. ஆகவே நாங்கள், அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் காயடித்து (ஆண்மை நீக்கம் செய்து) கொள்ளலாமா? எனறு கேட்டோம். அப்போது நபி (ஸல்) அவ்வாறு செய்ய வேண்டாமென எங்களைத் தடுத்தார்கள்.((புகாரி: 5071))
கைஸ் பின் அபீஹாஸிம் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் ஓர் அறப்போரில் கலந்து கொண்டிருந்தோம். அப்போது எங்களுடன் (எங்கள் துணைவியரோ, வேறு பெண்களை மணமுடித்துக்கொள்ளத் தேவையான செல்வமோ) ஏதும் இருக்கவில்லை. ஆகவே நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர் களிடம், (ஆண்மை நீக்கம் செய்துகொள்ள) நாங்கள் காயடித்துக் கொள்ளலாமா? என்று கேட்டோம். அவ்வாறு செய்ய வேண்டாமென நபி (ஸல்) அவர்கள் எங்களுக்குத் தடை விதித்தார்கள். அதன் பின்னர் ஆடைக்கு பதிலாகப் பெண்களை மணமுடித்துக் கொள்ள எங்களுக்கு அனுமதியளித்தார்கள் என்று கூறிவிட்டு, பின்வரும் வசனத்தை அன்னார் எங்களுக்கு ஓதிக்காட்டினார்கள்:
இறைநம்பிக்கை கொண்டவர்களே! அல்லாஹ் உங்களுக்கு அனுமதித்துள்ள தூய்மையான பொருட்களை நீங்கள் விலக்கிக் கொள்ளாதீர்கள். மேலும், நீங்கள் வரம்புமீறாதீர்கள். நிச்சயமாக அல்லாஹ் வரம்பு மீறுவோரை நேசிப்பதில்லை. (5:87) ((புகாரி: 5075)).
சுய இன்பம் இரண்டு விதமான கருத்துக்களை சொல்லியுள்ளேன் உங்களுக்கு எது பிடித்திருக்கிறதோ, அதை எடுத்துக் கொள்ளுங்கள்.
கேள்வி: எனக்கு 16 வயதாகிறது. நான் இதுவரை சுய இன்பம் கொள்ளவில்லை. எனினும் ஒரு கட்டுரையை இணையத்தளத்தில் பார்த்தேன்(சுய இன்பம் பற்றியது தான்!). பார்த்து விட்டு இப்படி ஒரு விடயம் இருக்கிறதா? என்று ஆச்சரியத்துடன் விட்டு விட்டேன். ஒரு நாள் நான் தூங்கச் செல்லும் போது என் ஆண்குறி வழமைக்கு மாறாக நான் அணிந்திருந்த ஜட்டியையும் தாண்டி விறைத்தது. (அவ்வளவு பெரிதாக!!!). நான் ஜட்டியைக் கழற்றி விட்டு என் ஆண்குறியைத் தொட்டுப் பார்த்தேன். நல்ல உறுதியாக இருந்தது. (நான் வெளியே செல்லும் போது அது எனக்குத் தொந்தரவாக இருக்கும் என நினைத்தேன்.) அன்று தூங்கும் முன் என் ஆண்குறியை ஒரு இழு இழுத்தேன். அழகான ஒரு உணர்வு! ஆகா அற்புதம், சுகம்!, இது வரை அனுபவிக்காதது. விந்து வெளியேறியது. ஆடையில் சிறிது பட்டு விட்டது. உடனே எழுந்து ஆண்குறியைக் கழுவி விட்டுத் தூங்கினேன். அதை இனி செய்யக் கூடாது என்றே நினைத்தேன். ஆனால் அதே போல் நான்கு முறை செய்தேன்.(அன்று அல்ல, சில நாள் விட்டு சில நாள்.) எனது பிரதான பிரச்சினையே ஆண்குறி விறைப்பது தான். அது விறைக்காமலிருக்க வழி இருந்தால் சொல்லுங்கள். இந்தக் கட்டுரை மிகவும் பிரயோசனமாகவுள்ளது. நன்றி! நான் சுய இன்பத்திலிருந்து தவிர்ந்து கொள்ள முயற்சிப்பேன்.
பதில்: தம்பி, நீங்கள் எதிர்பார்ப்பது தவறான ஒரு விடையம். ஒரு ஆணுக்கு ஆண்குறி விறைப்படையாவிட்டால் அவன் ஆண்மையற்றவனாகிறான். ஆண்களின் ஆண்குறி விறைப்படைவதும், ஆண்கள் சுய இன்பம் செய்வதும் சாதாரண விடையம். அதற்குள் மத நம்பிக்கைகளை கொண்டு வருவது தவறு. சுய இன்பம் பற்றி திருக்குர்ஆனில் நேரடியாக எந்தவொரு குறிப்பும் இல்லை. ஆகவே கவலை வேண்டாம். அதற்காக ஆண்குறி விறைப்படையும் போதெல்லாம் ஆண்குறியை உருவ வேண்டும் என்றில்லை. விந்து வெளிப்பட்டால் குளிப்பு கடமை ஆகும்! அது உறங்கும் போது ஏற்பட்டாலும் சரியே! கவனத்தை வேறு பக்கம் திருப்பிக் கொண்டு, நன்றாக மூச்சை உள்ளே இழுத்து வெளியே விட்டு மூச்சுப் பயிற்சி செய்தாலே புடைத்தது அடங்கி விடும். கழட்டிய ஜட்டியை அவசியம் போட்டுக் கொள்ளவும். ஏன் என்றால் நீங்கள் தற்போது பூப்படைந்து விட்டீர்கள். பூப்படைந்த ஆண்கள் ஜட்டி அணிவதன் மூலம் இவ்வாறான அசெளகரியமான நிலைமைகளை சமாளிக்கக் கூடியதாக இருக்கும்.
Keywords: இஸ்லாம் சுய இன்பத்தை தடை செய்கிறதா? முஸ்லிம் ஆண்கள் கை அடிப்பது ஹராமா? சுய இன்பம் கூடுமா? சுயஇன்பம் ஹராமோ, பாவமோ அல்ல, இஸ்லாமிய தாம்பத்யம். காம உணர்வு மேலோங்கும் போது சுயமாக விந்தை வெளியேற்றுவது சுய இன்பம் எனப்படுகிறது. இன்ஸா அல்லாஹ்
Comments
Post a Comment