Skip to main content

Posts

Showing posts with the label Sarama

Translate Blog

களவும் கற்று மற

பார்வையாளர் கவனத்திற்கு: இந்த இணையத்தளப்பதிவினை உங்கள் சுய விரும்பின் பெயரில் நீங்கள் பார்வையிடுகிறீர்கள். சில வேளைகளில் இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் உங்கள் தேவைக்கு அதிகமாக, உங்களை அசெளகரியத்திற்குள்ளாக்குவதாக இருக்கலாம். உங்களுக்கு இருக்கும் சந்தேகங்கள், கேள்விகள் மற்றும் ஏனைய உதவிகளுக்கு Support யை நாடவும்.


அரணாக்கொடி தமிழ் ஆண்களின் அடையாளமா?

அருணாக்கொடி/அரணாக்கொடி, அல்லது அரைஞாண் கயிறு என்பது இடுப்பில் கட்டும் கயிறாகும். இதனை தமிழ் ஆண்களின் அடையாளமாக மாத்திரம் பார்ப்பது தவறாகும். இந்த உலகில் தோன்றிய மனிதர்கள் இடுப்புக்குக் கீழ், தொடைகளுக்கு நடுவே இருப்பதை அந்தரங்கமான, மறைக்கப்பட வேண்டிய பகுதியாக கருத ஆரம்பித்த நாள் முதல், மானத்தை மறைக்க உதவியாக இருக்க எதனையாவது தேடிய வேளையில் அரணாக்கொடி கட்டும் பழக்கம் உருவாகியிருக்க வேண்டும். ஆண்களுக்கான ஜட்டி சந்தையில் அறிமுகமாகாத வரை, அணிந்திருக்கும் ஆடையில் சேறு படாமல், சேற்றில் இறங்கி விவசாயம் பார்க்க உதவியாக இருக்க, கோவணம் கட்ட நம் முன்னோர்களால் அரணாக்கொடி அதிகம் பயன்பட்டது. தற்போது நம்மில் பலர் கோவணம் கட்டாவிட்டாலும், வேட்டி/லுங்கி அணியும் போது அவற்றின் கட்டினை இறுக்கமாக்க உதவியாக அரணாக்கொடியை அவற்றின் கட்டின் மீது எடுத்து விடுகிறோம். அந்தளவுக்கு அன்றும், இன்றும் ஆண்களின் மானத்தை மறைக்க உதவியாக அரணாக்கொடியை ஆண்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

வயது வந்த ஆண்கள் ஏன் லுங்கி கட்ட விரும்புகிறார்கள்?

லுங்கி அல்லது சாரம் என்பது ஆசிய நாடுகளில் வாழும் ஆண்களின் மிக முக்கியமான ஆடையாகும். அதனை வீட்டில் இருக்கும் போது அநேகமான ஆண்கள் அணிந்தாலும், அதனை வெளியில் செல்லும் போதும் அணியலாம். ஆண்கள் அனுபவிக்கக் கூடிய திரையிடப்பட்ட நிர்வாண நிலையை இந்த லுங்கி/சாரம்/வேட்டி என்பன கொடுக்கிறது. இரு முனைகளும் இணைக்கப்பட்டு Tube போன்று மூட்டப்படாதவை லுங்கிகளாகும்(Unstitched Lungi). இவை பார்ப்பதற்கு வேட்டி போன்று இருக்கும்.    இரு முனைகளும் இணைக்கப்பட்டு Tube போன்று மூட்டப்பட்டவை சாரம்/கைலியாகும். ஆனால் நம்மில் பலர் எல்லாவற்றையும் லுங்கி என்றே அழைக்கிறோம்.