அருணாக்கொடி/அரணாக்கொடி, அல்லது அரைஞாண் கயிறு என்பது இடுப்பில் கட்டும் கயிறாகும். இதனை தமிழ் ஆண்களின் அடையாளமாக மாத்திரம் பார்ப்பது தவறாகும்.
இந்த உலகில் தோன்றிய மனிதர்கள் இடுப்புக்குக் கீழ், தொடைகளுக்கு நடுவே இருப்பதை அந்தரங்கமான, மறைக்கப்பட வேண்டிய பகுதியாக கருத ஆரம்பித்த நாள் முதல், மானத்தை மறைக்க உதவியாக இருக்க எதனையாவது தேடிய வேளையில் அரணாக்கொடி கட்டும் பழக்கம் உருவாகியிருக்க வேண்டும்.
ஆண்களுக்கான ஜட்டி சந்தையில் அறிமுகமாகாத வரை, அணிந்திருக்கும் ஆடையில் சேறு படாமல், சேற்றில் இறங்கி விவசாயம் பார்க்க உதவியாக இருக்க, கோவணம் கட்ட நம் முன்னோர்களால் அரணாக்கொடி அதிகம் பயன்பட்டது.
தற்போது நம்மில் பலர் கோவணம் கட்டாவிட்டாலும், வேட்டி/லுங்கி அணியும் போது அவற்றின் கட்டினை இறுக்கமாக்க உதவியாக அரணாக்கொடியை அவற்றின் கட்டின் மீது எடுத்து விடுகிறோம். அந்தளவுக்கு அன்றும், இன்றும் ஆண்களின் மானத்தை மறைக்க உதவியாக அரணாக்கொடியை ஆண்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
விவசாயம் பிரதான தொழிலாக இருக்கும் அனைத்து நாடுகளில்(இந்தியா, இலங்கை, பங்களாதேஷ், தாய்லாந்து, இந்தோனேஷியா, மேலும் பல.) உள்ள ஆண்களிடமும், வேட்டி/லுங்கி/சாரம் அணியும் ஆண்கள் உள்ள நாடுகளிலும் இன்றும் அரணாக்கொடி அணியும் பழக்கம் உள்ளது. அவற்றின் தோற்றத்தில் சிறு மாறுபாடுகள் இருந்தாலும், அவற்றை பயன்படுத்துவதன் தேவை ஒன்றாகவே உள்ளது.
ஜட்டி அணியும் பழக்கம் பரவலாக உள்ள போதும் தெற்காசிய நாடுகளில் வாழும் ஆண்கள் அருணாக்கொடியை இடுப்பில் இன்றும் அணிந்திருக்கின்றார்கள் என்றால் அதன் பின்னால் வேறு பல காரணங்களும் இருக்கத்தான் செய்கிறது. உதாரணமாக, ஆண்களின் இடுப்பை கவர்ச்சியாக வெளிக்காட்டவும் அருணாக்கொடி ஆண்களுக்கு உதவுகிறது.
Read More: கோவணம் அணிவதற்கு மாத்திரமா அருணாக்கொடி பயன்படும்? வயது வந்த ஆண்கள் ஏன் அரணாக்கொடி அணிய வேண்டும்?
Comments
Post a Comment