கருப்பு நிறத்திலான அல்லது வேறு நிறங்களினால் ஆன மெல்லிய கயிற்றை இடுப்பில் கட்டினால் அதனை அரைஞாண் கயிறு/அருணாக்கொடி என்பர். சிலர் தமது வசதிக்கு ஏற்ப வெள்ளியில், தங்கத்தில் செய்தும் அருணாக்கொடியை கருப்பு நிறக் கயிற்றின் உதவியுடன் அணிவர்.
ஆண்கள் இடுப்பில் கருப்பு நிற கயிறு கட்டுவது அவர்கள் நிர்வாணமாக நிற்கும் போது அதிக கவர்ச்சியை அவர்களுக்குக் கொடுக்கும். ஒரு ஆண் நிர்வாணமாக நிற்கும் போது, அவனது இடுப்பில் அரைஞாண் கயிறு இருந்தால், எல்லோரது பார்வையும் முதலில் அந்த கயிற்றை நோக்கியே இருக்கும். அதன் பின்னரே அவனது அந்தரங்கத்தை நோக்கி அவர்களின் பார்வை செல்லும்.
ஒரு ஆண் ஜட்டி போடாமல் வேட்டி, லுங்கி கட்டிக் கொண்டு பொது இடத்தில் நிற்கும் போது திடீரென ஆடை அவிழ்ந்தால், அவனது மானத்தை கைகளால் பொத்தி மறைக்க தேவையான நேரத்தை அரைஞாண் கயிறு ஆண்களுக்கு கொடுக்கும். கருப்புக் கயிறு ஆண்களுக்கு கவர்ச்சி மாத்திரம் அல்ல, காவலும் கூடவாகும்.
காடுகளில் ஒதுங்கும் போது விஷப்பூச்சிகள் கடித்தால், கடித்த இடத்தை கட்டுப் போட்டு விஷயம் உடல் முழுவதும் பரவாது இருக்க அரைஞாண்கயிறு உதவும்.
பிள்ளைகளுக்கு நோய்,நொடி ஏற்படுவதை தவிர்க்க, குழந்தை பிறக்கும் போது வெட்டிய தொப்புள் கொடியை(Umbilical Cord) காய வைத்து சுரை(Special Talisman) செய்து அரைஞாண் கொடியில் அணிவதும் உண்டு.
சில சமூகத்தினர்/சாதியைச் சேர்ந்தவர்கள், அவர்களின் பசங்களுக்கு சுன்னத்(Circumcision) செய்யும் போது, அதாவது ஆண்குறியின் முன்தோலை(Foreskin) வெட்டும் சடங்கு செய்யும் போது அவர்களின் இடுப்பில் அரைஞாண் கயிறு அணிவிப்பர்.
சிலர் மந்திர ஜந்திரங்கள் வைத்த சுரை/தாயத்தை கழுத்தில் கருப்பு கயிற்றில் அணிவது போல இடுப்பில், அரைஞாண் கயிற்றில் கோர்த்து அணிவதும் உண்டு.
பெரியவர்கள் பசங்களுக்கு நீச்சல் பழக்கும் போது அவர்களின் உடலை பிடித்து கஷ்டப்படாமல், அவர்கள் மூழ்கும் போது தலை முடியைப்(Short Hair) பிடித்து மேலே இழுக்க முடியாத போது, அவர்களின் அரைஞாண் கயிற்றைப் பிடித்து வசதியாக அவர்களை மூழ்காமல் பார்த்துக் கொள்ளலாம்.
ஆண்கள் இடுப்பில் அருணாக்கொடி அணிவதன் மூலம் அவர்களின் உடல் எடை அதிகரிப்பை அதன் இறுக்கத்தின் மூலம் உணரக் கூடியதாக இருக்கும். அதன் மூலம் இடுப்பில் கட்டியிருக்கும் அருணாக்கொடி மீண்டும் பழையபடி இறுக்கமில்லாமல் தளர்வடைய, உணவுக் கட்டுப்பாடுகளைக் கொண்டுவர முடியுமாக இருக்கும்.
ஆண்கள் கோவணம் கட்டுவதற்கும் அரைஞாண் கயிறு உதவியாக இருக்கும். அதே வேளை, ஆண்கள் வேட்டி, லுங்கி/சாரம் கட்டும் போது அவற்றின் கட்டின் மேல் அருணாக்கொடியை விட்டு, அவற்றின் கட்டுக்களை இறுக்கமாக்கக் கூடியதாக இருக்கும்.
Keywords: Arunakodi, Araijan Kayiru, What is the use of the Arana Kayiru, Arainjaan Kayiru, Black rope around the waist?
Comments
Post a Comment