Skip to main content

Posts

Showing posts with the label Waist

Translate Blog

களவும் கற்று மற

பார்வையாளர் கவனத்திற்கு: இந்த இணையத்தளப்பதிவினை உங்கள் சுய விரும்பின் பெயரில் நீங்கள் பார்வையிடுகிறீர்கள். சில வேளைகளில் இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் உங்கள் தேவைக்கு அதிகமாக, உங்களை அசெளகரியத்திற்குள்ளாக்குவதாக இருக்கலாம். உங்களுக்கு இருக்கும் சந்தேகங்கள், கேள்விகள் மற்றும் ஏனைய உதவிகளுக்கு Support யை நாடவும்.


ஆண்கள் அரைஞாண் கயிறு அணிவது எப்படி?

ஆண்கள் இடுப்பில் கட்டும் கயிறு அரைஞாண் கயிறு ஆகும். அதனை அரணாக்கயிறு, அருணாகொடி, அறுணாக்கொடி எனவும் அழைப்பர். ஆண்கள் இதனை பொதுவாக கறுப்பு கயிறைக் கொண்டு இடுப்பில் அணிவது வழமை. ஆண் குழந்தை பிறந்தவுடனேயே கறுப்பு நூலை அறுணாக்கொடியாகக் கட்டிவிட்டிருவாங்க. சிலர் வேறு நிறங்களிலும், வெள்ளி/தங்கம் போன்ற உலோங்களில் செய்தும் அணிவர். அரைஞாண் கயிறு அணிவது எப்படி? அரைஞாண் கயிறு கறுப்பு அல்லது ஏனைய நிற கயிறாக இருந்தால், அரைஞாண் கயிறை உங்களுக்கு நீங்களே கட்டலாம். இன்னொருத்தருக்கும் கட்டி விடலாம். ஆனால் அதிகம் இறுக்கமாக கட்டக் கூடாது. அதே நேரம் அதிகம் தளர்வாகவும் இருக்கக் கூடாது.  உங்கள் உடலுடன் பட்டும் படாமல் ஒட்டிக் கொண்டிருக்கும் வகையில் கட்டினால் போதும். அதாவது ஒரு விரலை அருணாக்கொடிக்கும் உங்கள் உடலுக்கும் இடையில் நுழைக்கக் கூடியதாக இருக்க வேண்டும். அந்தளவுக்கு இடுப்பில் அரைஞாண் கயிற்றை கட்டினால் போதும்.

ஆண்கள் அவர்களின் உடலில் எங்கெல்லாம் கயிறு கட்டலாம்?

அழகுக்காக, மேலதிக கவர்ச்சிக்காக, கவசம்/பாதுகாப்பிற்காக(கண் திருஷ்டி/ தீய சக்திகளிடம் இருந்து பாதுகாக்க) ஆண்கள் தமது உடலில் எங்கெல்லாம் கயிறு கட்டுவார்கள்? 1. அரைஞாண் கயிறு/அரணாகொடி/அருணாக்கொடி(Waist Rope): இது ஆண்கள் இடுப்பில் கட்டும் கயிறு ஆகும். இது ஆண்களின் இடுப்புப் பகுதிக்கும் மேலதிக கவர்ச்சியைக் கொடுப்பது மாத்திரம் அல்லாது, அவசரத்துக்கு மானத்தை மறைக்கவும், மறைவாக சுரை/தாயத்து அணியவும், வேட்டி/லுங்கியை இறுக்கமாக அணியவும், கோவணம் கட்டவும் பயன்படும்.