Skip to main content

Posts

Showing posts with the label Earrings

Translate Blog

களவும் கற்று மற

பார்வையாளர் கவனத்திற்கு: இந்த இணையத்தளப்பதிவினை உங்கள் சுய விரும்பின் பெயரில் நீங்கள் பார்வையிடுகிறீர்கள். சில வேளைகளில் இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் உங்கள் தேவைக்கு அதிகமாக, உங்களை அசெளகரியத்திற்குள்ளாக்குவதாக இருக்கலாம். உங்களுக்கு இருக்கும் சந்தேகங்கள், கேள்விகள் மற்றும் ஏனைய உதவிகளுக்கு Support யை நாடவும்.


ஆண்கள் கடுக்கன் தோடு அணிய காது குத்த வேண்டுமா?

ஒரு ஆண் தோடு அணிவது அவரது தனிப்பட்ட விருப்பம் சார்ந்தது. ஆண்கள் இடது காதில் அணியும் தோடினை கடுக்கன் தோடு என்பர். சில ஆண்கள் அதனை கவர்ச்சிக்காகவும், ஒரு சிலர் சாதிய வெளிப்பாடாகவும், குடும்ப பழக்கத்தின் காரணமாகவும் தோடு அணியும் பழக்கத்தைக் கொண்டுள்ளனர். நகை வேலை செய்யும் குடும்பத்தில் பிறந்த ஆண்களுக்கும், கோயில்களில் பூஜை செய்யும் குடும்பத்தில் பிறந்த ஆண்களுக்கும் சிறுவயதில் தோடு அணிவிப்பது வழமை.  தாய்மாமன் மடியில் உட்கார வைத்து குழந்தைகளுக்கு காது குத்தி, தோடு அணிவிக்கும் விழா தமிழ்நாட்டில் பரவலாக நடைபெறும் சடங்காகும். இதனை காதணி விழா என்பர்.  குழந்தையை தாய் மாமன் மடியில் அமரவைத்து ஆச்சாரியால் காது குத்தப்படுகிறது. பின்பு தாய் மாமன் தந்த தங்கக் காதணிகளைப் போடுகின்றர். தாய் வழிமாமன் இல்லையேல் அதற்கு நிகரான ஒரு உறவின் மடியிலும் வைத்து காதுகுத்தல் நிகழும்.   உங்களுக்குத் தெரியுமா? "Stud" (ஸ்டட்) என்பது கடுக்கன் காதணி, மூக்குத்தி போன்ற தொங்காத, உடலில் துளையிட்டு அணியக் கூடிய ஆபரணங்களை குறிப்பிடும் ஆங்கில பெயராகும். இதற்கான வரைவிலக்கணமாக உடலில் துளையிட்டு(Piercing) அழகுக்காக அண...