ஒரு ஆண் தோடு அணிவது அவரது தனிப்பட்ட விருப்பம் சார்ந்தது. ஆண்கள் இடது காதில் அணியும் தோடினை கடுக்கன் தோடு என்பர். சில ஆண்கள் அதனை கவர்ச்சிக்காகவும், ஒரு சிலர் சாதிய வெளிப்பாடாகவும், குடும்ப பழக்கத்தின் காரணமாகவும் தோடு அணியும் பழக்கத்தைக் கொண்டுள்ளனர்.
நகை வேலை செய்யும் குடும்பத்தில் பிறந்த ஆண்களுக்கும், கோயில்களில் பூஜை செய்யும் குடும்பத்தில் பிறந்த ஆண்களுக்கும் சிறுவயதில் தோடு அணிவிப்பது வழமை.
தாய்மாமன் மடியில் உட்கார வைத்து குழந்தைகளுக்கு காது குத்தி, தோடு அணிவிக்கும் விழா தமிழ்நாட்டில் பரவலாக நடைபெறும் சடங்காகும். இதனை காதணி விழா என்பர்.
குழந்தையை தாய் மாமன் மடியில் அமரவைத்து ஆச்சாரியால் காது குத்தப்படுகிறது. பின்பு தாய் மாமன் தந்த தங்கக் காதணிகளைப் போடுகின்றர். தாய் வழிமாமன் இல்லையேல் அதற்கு நிகரான ஒரு உறவின் மடியிலும் வைத்து காதுகுத்தல் நிகழும்.
Stud - a large headed piece of metal that pierces and projects from a surface, especially for decoration. an item of jewellery in the form of a piece of metal, precious stone, or other ornament attached to a pin or shaft that passes through a piercing in the body.
குடும்ப வழக்கமாக இல்லாவிட்டால், எல்லா ஆண் குழந்தைகளுக்கும் கடுக்கன் அணிவிக்க மாட்டார்கள். இருப்பினும் எல்லா ஆண்கள் கடுக்கன் தோடு அணியக் கூடாது என்றில்லை. விரும்பிய ஆண்கள் யாரும் காது குத்தி தங்கத்தில் கடுக்கண் அணியலாம்.
கடுக்கன் என்பது மிகவும் சிறிய தோடு ஆகும். சிலர் ஆண்கள் கல்லு வைத்த கடுக்கன் தோடு அணிவர். ஒரு சிலர் வெறும் தங்கத்தினால் ஆன கடுக்கன் தோடு அணிவர். இது ஒருவரது தனிப்பட்ட விருப்பத்தை சார்ந்தது.
இருப்பினும், கடுக்கன் தோடு அணிய காது குத்த வேண்டுமா? நிச்சயமாக இல்லை. தற்காலத்தில் ஆண்களால் காது குத்தாமலும் அணியக் கூடிய வகையிலான தோடுக்கள் விற்பனைக்கு வந்துள்ளன. உதாரணமாக: Magnetic Earrings(காந்தத்தின் உதவியுடன் ஒட்டக் கூடிய காதணி), கவ்வி விடக் கூடிய காதணிகள்.
சில ஆண்கள் வெள்ளியிலும் தோடு அணிவது உண்டு. அநேகமான Magnetic Earrings கள் Plastics or Stainless Steal இனால் உருவாக்கப்பட்டு இருக்கும்.
Read More: எல்லா ஆண்களும் ஏன் வளையம்(Ring) போன்ற தோடு அணியக் கூடாது?
Comments
Post a Comment