பொதுவாக சைட் அடிக்கும் போது அம்சமா, அழகாக நமது பாரம்பரியம் சார்ந்து வாழும் பெண்களையும், கட்டுடலுடன் ஆண்மை மிகுந்த தோற்றத்துடன் நமது பாரம்பரியம் சார்ந்து வாழும் ஆண்களையும் நாட்டுக்கட்டை என வர்ணிப்பது உண்டு. ஆனால் ஏன் எல்லா ஆண்களாலும், பெண்களாலும் தம்மை ஒரு செம்ம பிகர், செம்ம கட்டை, நாட்டுக்கட்டையாக வெளிக்காட்ட முடிவதில்லை?
நாட்டுக்கட்டை என்பது இருக்கற ஊரோ, ஆளோட கலரோ,உடுத்தற உடையோ பேச்சோ அல்ல. அது ஒரு Attitude. தமிழில் சொல்வதாக இருந்தால் மனப்பாங்கு, மனப்போக்கு, நடத்தை, அணுகுமுறை எனச் சொல்லலாம்.
அது Make up போட்டு வராது. Make up போட்டாலும் போகாது. இயற்கையாகவே ஒட்டிக் கொள்ளக் கூடிய குணம், பழக்க வழக்கம் எனவும் சொல்லலாம்.
நாட்டுக்கட்டையாக வர்ணிக்கப்படும் அண்களிடம் இயல்பாகவே ஆண்மை தன்மை அதிகமாக வெளிப்படும். பார்த்தவுடன் பத்திக்கிற மாதிரி இவன் தான்டா ஆம்பள என்று எண்ணத்தை அவர்களின் தோற்றம் நமக்கு ஏற்படுத்தி விடும். அவர்கள் பார்ப்பதற்கு பாசக்காரனாக வெளித்தெரிந்தாலும் பழகிப் பார்க்கும் போது ஒரு முரட்டுத்தனம் தெரியும். அவர்கள் மற்றவர்களை இலகுவாக அடக்கி ஆளக் கூடியவர்களாக இருப்பார்கள்.
தேக்கு, கருங்காலி, இலுப்பை, பூவரசு, மாமரம், வேம்பு, பலா போன்ற மரங்கள் அனைத்தும் பல மர வேலைகளுக்கு பயன்படுகிறது. ஆனால் இது மனிதர்கள் வாழும் பகுதியை ஒட்டி அவர்களால் வளர்த்து தேர், மரசிற்பம், தவுல், நாதஸ்வர குழல், கோயில் கதவு, வீட்டு கதவு போன்றன செய்ய பயன்படுத்தப்படுகிறது.
ஆகையினால் மனிதர்கள் வாழும் இடத்தை ஒட்டி வளரும் இந்த மரங்களை, இதன் பயன்பாடு கருதி நாட்டு மரங்கள் எனவும், நாட்டு மரங்களில் இருந்து அறுத்து எடுக்கப்படும் கட்டைகளை நாட்டு கட்டை என்று பெயர்சொல்லி அழைக்கின்றனர். இவற்றின் வலிமை கருதியா இதனை ஆண்களினதும் பெண்களினதும் உடலை வர்ணிக்க பயன்படுத்துகின்றனர்? இருக்கலாம். ஆனால் இதற்கு இன்னொரு காரணமும் உள்ளது.
"நாட்டக் கட்டை" என்ற சொல்லே மருவி, "நாட்டுக்கட்டை" என வழங்குகிறது என்பது சில தமிழ் அறிஞர்களின் கருத்து.
நாட்டம்−விருப்பம்; கட்டை−கட்டான உடல்வாகு. "பிறரின் விருப்பத்தைத் தூண்டக்கூடிய கட்டான உடல்வாகுள்ளவர்" என்பது இச்சொல்லின் பொருளாகும்.
சதை நன்கு திரண்ட, அதே சமயம் கட்டுக்கோப்பான உடலமைப்பை மட்டுமே "கட்டு" என்கிறோம். (உதாரணம்: தேகக்கட்டு, கட்டுடல்). கட்டுடன் "ஐ" என்ற வியப்பு (அ) அழகைக் குறிக்கும் சொல் சேரும்போது, கட்டையாகிறது.
குறிப்பு: ஒருத்தனோட தோற்றத்தை வைத்து அவனோட ஆண்குறி அளவு, Sex Performance, Sex Drive போன்றவற்றை எடை போடக் கூடாது.
Read More: ஆண்களின் ஆண் வாசம் உங்களை என்ன செய்யும்? ஆண்மை வாடையை முகர்ந்தால் என்ன ஆகும்?
Keywords: நாட்டுக் கட்டை என்ற சொல் ஏன் கொச்சையான அர்த்தத்துடன் தொடர்புபடுத்தப்படுகிறது? அதன் சரியான அர்த்தம் என்ன? ஆண் வாசம்
Comments
Post a Comment