பூப்படையும் போது ஏற்படும் பிரச்சனைகள், சவால்களை கடந்து செல்ல நிச்சயம் நல்ல நண்பர்களினதும் நெருங்கிய உறவுகளினதும் உதவி ஆண்களுக்கு பூப்படையும் வயது காலக் கட்டத்தில் நிச்சயம் தேவைப்படும். அதற்குக் காரணம் பெண்களைப் போன்று ஆண்களுக்கு பூப்படைதல் பற்றிய அறிவு அவனது பள்ளிக்கூடம், வீடு, சமூகம் போன்றவற்றில் இருந்து தேவையான அளவு கிடைக்காமையாகும்.
பசங்க சுய தேடல் மூலமே பூப்படைதல் பற்றி அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுகிறார்கள்.
என்னதான் நண்பர்கள் போல பழகினாலும் சில விஷயங்களை அப்பா, மாமா, சித்தப்பா, பெரியப்பா போன்றவர்களிடம், நேரடியாக பேச முடியாது. நிச்சயமாக ஒரு தயக்கம் எல்லா பசங்கக்கிட்டையும் இருக்கும். இந்த தயக்கத்தை நீக்க வேண்டியது பூப்படையும் வயதில் ஆண்பிள்ளைகள் இருக்கும் குடும்பத்தில் உள்ள பெரியவர்களின் கடைமையாகும்.
அண்ணனுடன் அல்லது அண்ணன் முறை ஆண்களுடன் அன்னியோன்யமாக பழகினாலும் கூட அவர்களிடமும் எல்லா விடையங்கள் தொடர்பிலும் பேச முடியாது.
சில வேளைகளில் அவர்களுக்குக் கூட அந்த விடையம் தொடர்பில் சரியான புரிதல் இல்லாமல் இருக்கலாம். அண்ணனுக்கு எட்டாதது தப்பிக்கு எட்டுமா?
வத்தலோ, பொத்தலோ, முட்டாளோ, முடிச்சவுக்கியோ, படிச்சவனோ, தற்குறியோ, உஷாரோ, சோம்பேரியோ எப்படி இருந்தாலும் சொந்த அத்தை மகன், மாமா மகன்னு இருந்தா, அவன் கூட ஒரு அன்னியோயம் இருக்கும். சொந்த அண்ணன் கூட பேசாதது எல்லாம் அவன் கூட பேச முடியும்.
நம்ம அவங்க கூட பேசுறத, பழகிறத வைத்து நம்மையும் நமது Character(குணம்) யையும் எடை போடாமல்(Judging) "சொல்றா மச்சான்னு" எல்லாத்தையும் கேட்டுப்பான். பெரியவங்கக்கிட்ட போட்டுக் கொடுக்கவும் மாட்டான்.
முறைமாமன் முறை, முறைப்பையன், முறைமாமன் - அத்தை(தந்தையின் சகோதரி, மாமாவின் மனைவி) அல்லது தாய்மாமன் உடைய மகன் போல, ஒரு பெண்ணை மணம்புரியும் உறவுமுறையுள்ளவன்.
இது AI தொழில்நுட்ப காலம். ஆகவே பூப்படையும் வயதில் உள்ள ஆண்கள் தாம் வாழும் சமூகத்தில் இருந்தும் இணையத்தளங்கள் மூலமும் அறிந்து கொள்ளும் பூப்படைதல் பற்றிய அறிவினை தந்தையுடன் அல்லது தமையனுடன் பகிர்ந்து, உறுதி செய்து அவற்றை புரிந்து கொள்ள விரும்பாவிட்டால், ChatGPT, Grok, Deepseek, Gemini போன்ற AI களிடம் Cross Check செய்து கொள்வது நல்லது.
என் பையன் வயசுக்கு வந்துட்டான்!
ஒரு தந்தையாக தன் பையனுக்கு சுய இன்பம் செய்ய சொல்லிக் கொடுப்பது ஆரோக்கியமான விடையமாக இருக்காது. ஆனால் தன் பையன் சுய இன்பம் செய்வதாக அறிந்து கொண்டால், அவனை அந்தப் பழக்கத்திற்கு அடிமையாக வேண்டாம் என்று அன்பாக சொல்லலாம். தேவை ஏற்பட்டால், கண்டிக்கவும் செய்யலாம்.
சுய இன்பம் செய்வது ஆரோக்கியமானது தான், ஆனால் அதற்கு அடிமையாகும் வகையில் அடிக்கடி செய்வது ஆரோக்கியமானது அல்ல என்பதை புரிய வைக்கவும்.
அவன் கவனத்தை சுய இன்பம் செய்யும் பழக்கம் மீது இருக்காத வண்ணம், அவனை எப்போதும் தனிமையில் தனியறையில் இருக்க விடாமல் விளையாட்டு, நீச்சல், உடற்பயிற்சி, Family Talk Time, உல்லாசப்பயணம், சிறு வேலைகள், போன்றவற்றில் ஈடுபடுத்தலாம்.
ஆனால் ஒரு தந்தையாக அவசியம் தன் மகனுக்கு அவனது ஆண்குறியின் முன்தோலை(Foreskin) பின்னால் நகர்த்தி, அதன் மொட்டை(Glans) வெளியே எடுக்கக் கூடிய இயலுமை உள்ளதா என்பதை 13 வயதில் பின்னர் உறுதி செய்ய வேண்டும்.
அவனுடன் பேசிப் பழகும் போது, அதனை அவனிடமே கேட்கலாம், அல்லது அவனை குளிப்பாட்டும் போது அல்லது அவன் கூட குளிக்கும் போது ஆண்குறியின் மொட்டை வெளியே எடுத்து அதில் படிந்திருக்கும் Smegma என்னும் பசை போன்ற தோல் அழுக்கை நீரில் அலசி சுத்தம் செய்யச் சொல்லலாம்.
உங்கள் எதிரில், திரும்பி நின்று அவன் அவ்வாறு முதல் முறை செய்தால், அவனது அச்சத்தை போக்கும் வகையில் அதனை ஒரு மகிழ்ச்சியான தருணமாக மாற்ற முயற்சிக்கவும். விரும்பினால், வாழ்த்துக்கள் கூட தெரிவிக்கலாம்.
முஸ்லிம் ஆண்களுக்கு அந்தப் பிரச்சனை இல்லை. அவர்கள் பூப்படையும் வயதிற்கு(6 வயது முதல் 10 வயதிற்குள்) முன்னரே தமது பசங்களின் ஆண்குறியின் முன்தோலை வெட்டி சுன்னத் செய்து விடுவர்.
ஆனால் ஏனைய ஆண்கள், மீசை முளைத்த பிறகு தமது பசங்களால, அவர்களின் ஆண்குறியின் மொட்டை வெளியே எடுக்கக் கூடியதாக உள்ளதா என்பதை அறிந்து கொள்வது அவசியம். தேவை ஏற்பட்டால் வைத்திய ஆலோசனை பெற்று சுன்னத் செய்து விடுவதன் மூலம் பசங்களின் உடல்/உள ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம்.
"தொங்குதே குஞ்சி அஞ்சர இஞ்சி, கக்குதே கஞ்சி, தன்னையே மிஞ்சி" - @dharmaraj.m.killer(Thoothukudi Kothanar Song)

ஒரு ஆணுக்கு நம்பிக்கை இருந்தால், ஒரு பெண்ணை படுக்கையில் திருப்திப்படுத்த தும்பிக்கை அளவு கூட தேவையில்லை.
Read More: ஆண்களுக்கு மறுக்கப்படும் பூப்படைதல் தொடர்பான அடிப்படை அறிவு
Read More: அப்பாக்கள் ஏன் தமது பசங்களை சிறுவயது முதல் குளிப்பாட்ட வேண்டும்?
Keywords: Relatives
Comments
Post a Comment