ஆண்கள் வயதுக்கு வரும் போது சந்திக்கும் முதன்மையான பிரச்சனைதான் பசங்களுக்கு அது தொடர்பில் விளக்க யாரும் முன்வருவதில்லை என்பதாகும். பெண் பிள்ளைகள் மீது தாய்மார்கள் கவனம் செலுத்தும் அளவுக்கு கூட ஆண் பிள்ளைகள் மீது அவர்களின் தந்தை, மாமா/மச்சான், தாத்தா மற்றும் ஏனைய உறவினர்களும், அவன் கல்வி கற்கும் பள்ளிகளும்/பாடசாலைகளும் கவனம் செலுத்துவதில்லை.
அவனாகவே தட்டுத்தடுமாறி, மிகுந்த அச்சத்துடன் அவன் வாழும் சமூகத்தில் இருந்தும், நண்பர்களின் அனுபவங்களை வைத்தும், இணையத்தள தேடல்கள் மூலமும் பூப்படைதலையும் கடந்து, செக்ஸ் பற்றி தேவைக்கு அதிகமாகவே கற்றுக் கொள்கிறான்.
அதன் காரணமாகவே, ஆண்கள் 12 வயதிற்கு முன்னர் கூட சுய இன்பம் செய்து விந்து வெளியேற்ற சுயமாகவோ(படுக்கையில் குப்புற படுத்து, விறைப்படைந்த ஆண்குறியை தேய்த்து), அல்லது நண்பர்கள் மூலமோ கற்றுக் கொள்கின்றனர்.
ஆண்கள் பூப்படையும் போது உடல் தோற்றம் மாத்திரம் அல்ல, அவர்களின் இனப்பெருக்க உறுப்புகளும் பெரிதாகும். அது தொடர்பில் அச்சமடைய தேவையில்லை. ஆண்களால் தலைகீழாக நின்றாலும் அவர்களின் ஆண்குறியின் அளவை மாற்ற முடியாது. ஆனால் பூப்படையும் காலத்தில் ஆரோக்கியமான, இயற்கையாக Testosterone சுரப்பை அதிகரிக்க கூடிய உணவுகளை எடுத்துக் கொள்வதன் மூலம் ஆண்குறியின் விறைப்பை அதிகரிக்கலாம்.
பூப்படையும் போது பெண்களுக்கு முலைகள் எப்படி வெளித்தள்ளி, தொங்கிக் கொண்டு வெளித்தெரியுமோ அது போல ஆண்களுக்கு அவர்களின் விதைகளும் ஆண்குறியும் தொங்கிக் கொண்டு வெளித்தெரியும்.
ஆண்குறி விறைப்படைந்தால், கொடிக்கம்பம் போல நட்டுக் கொண்டு நிற்கும். ஆண்களின் விதைகள் கீழிறங்கும். ஆண்களின் ஆண்குறியின் மொட்டு வெளித்தெரியும். ஆண்களின் விதைகளும் ஆண்குறியும் தொங்குவது அவற்றின் இயல்பாகும்.
பெண்கள் பிரா போடுவது போல, ஆண்கள் ஜட்டி போட்டு ஆண்குறியையும் விதைகளையும் ஓரிடத்தில் அதிகம் வெளித்தெரியாமல் கட்டி வைக்கலாம்.
ஆண்களின் ஆண்குறியில் எலும்பு இல்லை. பெரிய இரத்தக் குழாய்கள் உள்ளன. ஆகவே ஆண்குறியை கண்மூடித்தனமாக கையாள்வது பிற்காலத்தில் ஆண்குறி விறைப்பில் பிரச்சனையை ஏற்படுத்தும்.
பூப்படையும் போது ஆண்களின் உடலில் சுரக்கும் ஆண்களின் பாலியல் ஹோர்மோனான Testosterone ஆண்களின் உடலில் பல மாற்றங்களை தூண்டும். உதாரணமாக: ஆண்களின் உடலில் முடி வளர்ச்சியைத் தூண்டும்,
அவர்களின் குரலை தடிக்கச் செய்யும்(Deep Voice), அவர்களின் ஆண்குறியை புடைத்தெழச் செய்யும், அவர்களின் உடலில் விந்து உற்பத்தியை தூண்டும்.
பூப்படையும் வயது வரை ஜட்டி போடாமல் சுற்றும் ஆண்கள் இனிமேலாவது ஜட்டி அணியப் பழகவேண்டும். இல்லாவிட்டால் பல தர்மசங்கடமான நிலைமைகளை சந்திக்க நேரிடலாம்.
வயதுக்கு வந்த ஆண்களின் ஆண்குறி அடிக்கடி புடைத்தெழும். எந்தவொரு உந்துதலும் இல்லாமல் கூட ஆண்களின் ஆண்குறி புடைத்தெழலாம். அதனை ஆண்கள் ஜட்டி அணிவதன் மூலமே வெளித்தெரியாமல் மறைக்க முடியும்.
ஆண்கள் மாதம் இரு முறை சுய இன்பம் செய்வது ஆரோக்கியமானது. ஆனால் தினமும் சுய இன்பம் செய்வது அது அந்தப் பழக்கத்திற்கு அவர்களை அடிமையாக்கும் அதே வேளை, அவர்களின் ஆரோக்கியத்தையும் பாதிக்கும்.
ஒரு ஆண் தனது ஆண்குறியின் முன் தோலை பின்னால் நகர்த்தி அவனது ஆண்குறியின் மொட்டை வெளியே எடுக்கக் கூடிய இயலுமை அவன் பூப்படையும் போதே உருவாகும்.
18 - 20 வயது கடந்தும் உங்களால் உங்கள் ஆண்குறியின் மொட்டை, அதன் முன் தோலை பின் தள்ளி எடுக்க முடியாவிட்டால் அவசியம் வைத்திய ஆலோசனை பெற்று சுன்னத் செய்து கொள்ள வேண்டும்.
பூப்படையும் வயதில் உள்ள பசங்களுக்கு ஏதாவது பிரச்சனை உள்ளதா என்பதை தனியாக அழைத்துச் சென்று கேட்டு, உதவுவது அவர்களின் தந்தையர்களின் கடைமையாகும். தந்தை இல்லாவிட்டால் அதனை அண்ணா, மாமா, மச்சான், ஏன் ஒரு நண்பன் கூட கேட்கலாம்.
தந்தையர்கள் பசங்களைக் குளிப்பாட்டும் சாக்கில், அவர்களின் உடலில் ஏற்படும் மாற்றங்கள் தொடர்பில் நகைச்சுவையாக சொல்லிக் கொடுக்கலாம்.
தந்தை, அண்ணா, மாமா சவரம் செய்யும் போது அதாவது தாடி/மீசையை மழிக்கும் போது பசங்களை கூட வைத்துக் கொள்ளலாம். விரும்பினால், அவர்களைக் கூட உங்களுக்கு மழிக்க உதவச்சொல்லலாம்.
ஒரு ஆணுக்கு அவனது ஆண்குறியின் முன் தோல்(Foreskin) நீளமாக இல்லாவிட்டால் கூட பிரச்சனை இல்லை. ஆனால் அளவுக்கதிகமாக நீளமாக இருந்தாலும், அல்லது ஆண்குறியின் முன் தோலை பின்னால் நகர்த்த முடியாவிட்டாலும் வைத்திய ஆலோசனை பெற்று, அதனை சுன்னத் செய்து நீக்க வேண்டும்.
ஆண்கள் சுய இன்பம் செய்யாவிட்டல், அல்லது கலவியில் ஈடுபடாவிட்டால் அவர்களின் விதைகளில் உற்பத்தியாகும் விந்தானது முதிர்ச்சியடைந்த பின்னர், உடலால் அகத்துறிஞ்சப்பட்டு விடும். அல்லது ஈரக் கனவுகள்(Wet Dreams) ஏற்பட்டு இரவு தூக்கத்தில் வெளியேறும். ஆண்களுக்கு தூக்கத்தில் விந்து வெளியேறுவது, அவன் ஆரோக்கியமாக இருப்பதன் அறிகுறியாகும். ஆனால் அடிக்கடி அவ்வாறு நடக்கக் கூடாது.
தமது பசங்கள் சுன் இன்பம் செய்ய ஆரம்பித்ததை அறிந்து கொண்டால், அல்லது அவர்கள் சுய இன்பம் செய்து உங்களிடம் மாட்டிக் கொண்டால் அது தவறில்லை, ஆனால் அந்தப் பழக்கத்திற்கு அடிமையாகக் கூடாது என்று கண்டிக்கலாம்.
ஆண்கள் சும்மா இருந்தால் தான் கை அங்க போகும், ஆகவே அவர்களுக்கு நீச்சல் செய்வது, உடற்பயிற்சி செய்வது தொடர்பில் ஆர்வத்தை தூண்டி, அவர்களின் கவனத்தையும், ஓய்வாக இருக்கும் நேரத்தையும் ஆரோக்கியமான விடையங்களில் ஈடுபட வழிகாட்டலாம்.
சுய இன்பம் செய்யாத ஆண்களுக்கு மாதம் ஒரு முறை அல்லது 2-3 முறை தூக்கத்தில் விந்து வெளியேறலாம். அடிக்கடி தூக்கத்தில் விந்து வெளியேறினால் அவசியம் மருத்துவ ஆலோசனை பெறவும்.
சமூகத்தில் ஏனைய வயதில் மூத்த(அண்ணா/மாமா/நண்பனின் அண்ணா/பக்கத்து வீட்டு மாமா/அண்ணா..மேலும் பல) ஆண்களிடம் இருந்து பசங்க பல விடையங்களை பார்த்து கற்றுக் கொள்வார்கள்.
வயதில் மூத்த ஆண்களிடம் இருந்து கற்றுக் கொள்ளும் விடையங்களில் செக்ஸ், சுய இன்பம் செய்வது தவிர்ந்து, புகைப்பிடிப்பது, பாக்கு போடுவது, லேகியம் சாப்பிடுவது, விபச்சாரிகளிடம் செல்வது, போதைப்பொருட்கள் பயன்படுத்துவது போன்ற விடையங்களும் அடங்கும்.
அவற்றில் எது சரி, எது தப்புன்னு சொல்லித்தர கூட யாரும் அவனுக்கு இருக்க மாட்டார்கள். அவன் அது எப்படி இருக்கும் என்ற ஆவலில் அவற்றை முயற்சித்துப் பார்க்க ஆரம்பிக்கும் போது அதற்கு அடிமையும் ஆகிவிடுகிறான்.
வயதில் மூத்த ஆண், அல்லது ஒரே வயதினை உடைய ஆண்கள் உங்களை தனிமையில் அழைத்து தனது புடைத்தெழுந்த ஆண்குறியை காண்பித்தால், அல்லது புடைத்தெழுந்த ஆண்குறியை நீங்கள் பார்க்கும் வண்ணம், நிர்வாணமாக நின்று ஆடை மாற்றினால் அல்லது குளித்தால் அதில் தவறான எண்ணம் உள்ளதாக அர்த்தம்.
சிறுவர்களாக இருக்கும் போது பாலியல் ரீதியான துஷ்பிரயோகத்திற்கு ஆளான ஆண்களுக்கு தாம் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகி உள்ளோம் என்பதையே காலம் கடந்து தான் உணர்வார்கள். உரிய காலத்தில் Sex Education யை உங்கள் பசங்களுக்குக் கொடுப்பதன் மூலம் அவர்களை பாலியல் ரீதியான துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகாது பாதுகாக்கக் கூடியதாக இருக்கும்.
சமூகத்தில் இருந்து கெட்டவற்றை மாத்திரம் தான் கற்றுக் கொள்வார்களா? நிச்சயமாக இல்லை. பக்கத்து வீட்டு அண்ணா விளையாட்டுக்களில் அதிகம் ஆர்வம் உடையவராக இருந்தால், பசங்களுக்கும் அது தொற்றிக் கொள்ளும். ஏனைய ஆண்களைப் பார்த்து சைக்கிள் ஓட கற்றுக் கொள்வது, அவர்களைப் போலவே ஆடைகள்/ஆபரணங்கள் அணிய ஆசைப்படுவது, உடற்பயிற்சி செய்வது, நீச்சல் பயிற்சி செய்வது, சமையல் கற்றுக் கொள்வது, கராத்தே/குஸ்தி/சண்டை பயிற்சிகள் கற்றுக் கொள்வது, மெக்கானிக்/திருத்தல் வேலைகளைக் கற்றுக் கொள்வது போன்ற நிறைய நல்ல விஷயங்களையும் இந்த சமூகம் தான் பசங்களுக்கு பரிந்துரையாக முன் வைக்கும். ஆனால் அவற்றை தெரிவு செய்வது பசங்களின் சுய விருப்பமாக இருக்கும்.
பூப்படையும் வயதில் இருந்தே ஆண்கள் நண்பர்களை தேட ஆரம்பிக்க வேண்டும். அனைவருடனும் பிரச்சனையின்றி வாழப் பழக வேண்டும். திருவிழாக்கள், கூட்டங்கள், மாநாடுகளில் உதவி செய்ய முன் செல்ல வேண்டும். அதன் மூலம் அவன் தான் வாழும் சமூகத்தில் ஒரு பிரதிநிதியாக/அங்கத்தவராக இணைந்து கொள்ள அதிக வாய்ப்பு கிடைக்கும். அவை பிற்காலத்தில் அவனுக்கு உதவியாக இருக்கும். பூப்படையும் வயதில் எதுக்கும் ஒதுங்கி நிற்கும் குணம் கூடாது!
ஆண்களுக்கு பெண்கள் மீது மாத்திரம் தான் இனக்கவர்ச்சி/ஈர்ப்பு ஏற்படும் என்பது உண்மையல்ல. ஆண்களுக்கு இன்னொரு ஆணின் மீதும் ஈர்ப்பு/காதல் ஏற்படலாம். ஆனால் அதனை வெறும் செக்ஸிற்காக பயன்படுத்திக் கொள்வது தவறாகும்.
ஒரு காமக் கொடூரனால் ஒரு பெண்யை மாத்திரம் அல்ல, ஒரு ஆண்யைக் கூட கற்பழிக்க முடியும். ஆண்களின் ஆசனவாயினுள் ஆண்குறியை நுழைத்து புணர முடியும். ஆகவே முன் பின் பழக்கம் இல்லாதவர்களை தனிமையில் சந்திப்பதை தவிர்க்கவும். வயது வந்த ஆண்களின் மடியில் உட்காருவதையும் தவிர்க்கவும்.
Good Touch/Bad Touch லாம் பசங்க வயசுக்கு வரும் வரைக்கும் தான் நடைமுறையில் இருக்கும். பிறகு அது மெல்ல தளர்வடையும். வயது வந்த ஆண்கள் குறைந்தது 23 வயது வரையாவது சுய இன்பம் செய்தாலும், செக்ஸ் வைத்துக் கொள்ள முயற்சிக்கக் கூடாது. உங்களை தவறாக தொடுவதாக நீங்கள் உணர்ந்தால் உடனே "No" சொல்லி விட்டு அந்த இடத்தை விட்டு சாமர்த்தியமாக வெளியேறவும்.
ஒரு தடவை செக்ஸ் சுகம் கண்டு விட்டால் பிறகு அது உங்களை நாய் மாதிரி தெரு தெருவாக அந்த சுகம் தேடி அலைய வைக்கும். Teenage வயதில் நீங்கள் சுகம் கண்டால் உங்கள் வாழ்க்கையே தலைகீழாக மாறலாம்.
அதை மாற்ற முடியாது!
18 வயது ஆனதும் ஓட்டுப் போடுறீங்களோ இல்லையோ, அவசியம் Online லயாவது ஆணுறை/காண்டம் வாங்கி உபயோகிக்கப் பழகவும்.
சில விஷயங்கள் உங்கள் சுயகட்டுப்பாட்டை மீறி நடந்தால் கூட, ஆணுறை பயன்படுத்துவதால் கொடிய பால்வினை நோய்களிடம் இருந்து உங்கள் வாழ்க்கையை பாதுகாக்கக் கூடியதாக இருக்கும்.
Comments
Post a Comment