பெண்களுக்கு ஆண்களின் பாலியல் ஹோர்மோன்(Testosterone) சிறிதளவு சுரப்பது போல ஆண்களுக்கும் பெண்களின் பாலியல் ஹோர்மோன்(Estrogen) சிறிதளவு சுரக்கும். இதன் காரணமாகவே ஆண்கள் பூப்படையும் காலத்தில் சில ஆண்களுக்கு ஒரு பக்க மார்பு, அல்லது இரண்டு மார்பகங்களும் சிறிதளவில் உப்பலடைவது உண்டு. ஆனால் அது தற்காலிகமானதாகும். நாளடைவில் தாமாகவே அவை சரியாகி விடும்.
ஆனால் சில ஆண்களுக்கு அவர்களின் உடலில் ஏற்படும் பாலியல் ஹோர்மோன்களின் சம நிலை குழப்பத்தாலும்(Imbalance of Testosterone and Estrogen), அவர்களின் உடல் பருமன் காரணமாகவும் பெண்களின் முலைகள் போல அவர்களின் மார்புகள் பருத்து தொங்குவது உண்டு. இதனை Gynecomastia(கைனெகோமாஸ்டியா) என ஆங்கிலத்தில் அழைப்பர்.
Gynecomastia நிலைமை(அதிகப்படியான மார்பக திசு வளர்ச்சியை கொண்டிருக்கும் நிலை) ஏற்பட்டால், ஆண்களுக்கு மார்பக பகுதிகளில்
எப்போதும் வலி ஏற்படாவிட்டாலும் மனதளவில் பல்வேறு காயங்களை அது ஏற்படுத்தும். அவர்களின் ஆண்மையான தோற்றம் பாதிப்படையும். வர்றவன், போறவன்லாம் அமுக்கி விளையாடிக் கொண்டு இருப்பான். தம்மை கவர்ச்சியாக வெளிக்காட்ட, இறுக்கமான, உடலுடன் ஒட்டியது போன்ற மேலாடைகள் அணிய முடியாத நிலை ஏற்படும்.
Gynecomastia நிலைமை ஏற்பட்ட ஆண்களின் மார்புகள் இறுக்கமாக/கடினமாக இருக்கும். ஆனால் நெஞ்சுப் பகுதியில் அதிக சதைபற்றாக(Chest Fat) இருந்தால் கூட Gynecomastia போன்ற தோற்றம் உருவாகும். ஆனால் அவ்வாறான நிலையில் ஆண்களின் மார்புகள் Soft ஆக இருக்கும். Gynecomastia நிலைமை போன்று இறுக்கமாக இருக்காது. இதனை Pseudogynecomastia என்பர்.
Chest Fat காரணாமாக ஆண்களுக்கு பெண்கள் போல மார்புகள் பருத்து இருந்தால் உடற்பயிற்சி செய்து, Chest Exercise மூலம் அதனை சரி செய்யலாம். Gynecomastia நிலையை உடற்பயிற்சி மூலம் சரி செய்ய முடியாது.
Gynecomastia நிலைமை ஏற்பட்ட ஆண்களுக்கு மார்புப் பகுதியில் வலி ஏற்பட்டால் உடனடியாக மருத்துவ ஆலோசனை பெற்றுக் கொள்ளவும்.
Gynecomastia நிலைமையை ஆரம்பத்திலேயே இனங்கண்டால் மாத்திரமே உடற்பயிற்சிகள் மூலம் அதனை சரி செய்ய வாய்ப்பு உள்ளது. உங்கள் குடும்பத்தில் உள்ள ஆண்களுக்கு இவ்வாறான தொங்கும் மார்புகள் இருந்தால், அவசியம் பூப்படையும் காலம் முதலே நெஞ்சுப் பகுதிக்கான உடற்பயிற்சிகளை செய்வதுடன், பாலியல் ஹோர்மோன் சம நிலையை தவிர்க்க ஆண்மையை இயற்கையாக அதிகரிக்கக் கூடிய உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டும். அத்துடன் உடல் பருமனையும் உயரத்திற்கு ஏற்றாற் போல(BMI) ஆரோக்கியமாக பேண வேண்டும்.
ஆரம்பத்திலேயே Gynecomastia நிலைமை இனங்காணத் தவறி விட்டால், உடற்பயிற்சி மாத்திரம் செய்து ஆண்களின் தொங்கும் முலைகள்/மார்புகளை சரி செய்ய முடியாது. அவசியம் சத்திரசிகிச்சை செய்ய வேண்டிய நிலை ஏற்படும். ஆண்களுக்கு மார்பங்கள் பெண்கள் போல பருத்து தொங்கியிருக்கும் போது உடற்பயிற்சி செய்தால், அதன் தசைகள் மேலும் இறுக்கமடையுமே தவிர, அவை சரியாகாது.
ஆரம்பத்திலேயே Gynecomastia நிலைமையை இனங்கண்டு விட்டால், உடற்பயிற்சி செய்வதன் மூலம் சற்று உப்பலான, கைகளுக்கு அடக்கமான நெஞ்சுப் பகுதியை ஆண்களால் கட்டமைக்க முடியும். தட்டையான நெஞ்சுப் பகுதியை விட சற்று உப்பலான நெஞ்சுப் பகுதி ஆண்களின் கவர்ச்சியையும் அதிகரிக்கும்.
அது அவர்களுக்கு கவர்ச்சியான தோற்றத்தையும், ஆண்மை மிக்க மார்பகங்களின் தோற்றத்தையும் கொடுக்கும். இருப்பினும், அவ்வாறான உப்பலான நெஞ்சுப் பகுதியை உடைய ஆண்கள் தொடந்து அதனை உடற்பயிற்சி செய்து Maintain செய்ய வேண்டும். இல்லாவிட்டால், அவை நாளடைவில் தொங்க ஆரம்பித்து விடும்.
ஆண்களுக்கு அவர்களின் நெஞ்சுப் பகுதி உப்பலாக இருக்கலாம், தவறில்லை. ஆனால் பெண்களின் முலைகள் போல பருத்து தொங்கக் கூடாது. அது ஆண்மைக்கு அழகல்ல.
ஆண்கள் சட்டை, பனியன் அணிந்திருக்கும் போது வெளித்தெரியும் மார்புகளுக்கு இடைப்பட்ட பகுதி, மயிர் படர்ந்த நெஞ்சு, கழுத்துக்குக் கீழ் பகுதியை ஆண்களின் Cleavage(க்லீவஜ்/மார்பு பிளவு) ஆக கருதுவர். அதனை He-vage என்பர்.
சற்று உப்பலான மார்பகங்களைக் கொண்ட ஆண்களை ஏனைய ஆண்கள் பால் மாடு(Milker) என செல்லமாக அழைப்பது உண்டு. அவர்களின் மார்புத் தசைகளை அவர்களால் கைகளைப் பயன்படுத்தாமல் துடிக்க வைக்க, அசைக்க முடியும். அவர்களின் மார்பகங்கள் அமுக்கி விளையாட கைக்கு அடக்கமாக இருக்கும். சில ஆண்களுக்கு மார்புத் தசைகள் கல்லு போல திடமாக இறுக்கமாக இருக்கும். ஒரு சிலருக்கு சப்பாத்தி மாவு போல மிகவும் Soft ஆக இருக்கும். இவ்வாறு ஆண்களின் மார்புகளிலேயே பல வகைகள் உள்ளன.
Read More: ஆண்களின் மார்பகங்களின் வகைகள். பால் வட்டம் என்றால் என்ன?
Recommended: ஆண்களின் மார்பழகும் ஆண்மை மிக்க உறுதியான நெஞ்சமும்
Keywords: Chest pump, Milker, Pec Bounce, Strong Pecs, Chest Workout, Huge Pecs, Pectoral muscles, Man Tidies, Muslce Chest, Pecs Play, Pecs Massage, enlarged male breast tissue, ஆண் மார்பு வீக்கம், ஆண் மார்பகக் குறைப்பு, Breast enlargement in males, Large, Big
Comments
Post a Comment