பொதுவாக ஆண்களோ, அல்லது பெண்களோ பாத்ரூம் கண்ணாடியில் தம் உருவம் தெரியும் வகையில் Selfie எடுக்க விரும்புவார்கள். அதனை Selfie என சொல்ல முடியாது. காரணம், அவர்கள் அதனை முன் பக்க Camera வில் எடுக்க மாட்டார்கள். மாறாக அவர்களின் ஸ்மார்ட்போனின் Rear Camera(பின் பக்க கமெரா) வில் எடுப்பார்கள்.
முன் பக்க கமெராவை விட, பின்பக்க கமெரா அதிகம் தெளிவான Photos மற்றும் Videos களை எடுக்கும் திறன் கொண்டது. அதன் முழு திறனையும் பயன்படுத்தி Selfie எடுக்கவே அவர்கள் Bathroom/Public Toilet/Rest Room Mirrors, Dress Show Room, Gym Mirrors களை பயன்படுத்துகிறார்கள்.
ஆனால் அது மாத்திரம் தான் அதற்கான காரணமா? நிச்சயமாக இல்லை. அதற்கு இன்னும் சில காரணங்கள் உள்ளன. பொதுவாகவே பாத்ரூம்களில் அல்லது கண்ணடி வைக்கப்பட்டுள்ள இடங்களில் ஏனைய இடங்களை விட வித்தியாசமான Lighting(வெளிச்சம்) அமைக்கப்பட்டிருக்கும். அது அவர்களின் புகைப்படங்களுக்கு மேலதிக அழகைக் கொடுக்கும்.
புகைப்படங்கள் எடுப்பதற்கு Lighting எந்தளவுக்கு முக்கியம் என்பதை Modeling துறையில் உள்ள Photoshoot நிகழ்வுகளைப் பார்த்தால் உங்களுக்கே புரியும்.
பாத்ரூம் கண்ணாடியில் தமது தோற்றத்தையும், Camera வில் தமது தோற்றத்தையும் பார்க்கக் கூடியதாக உள்ளதால், விரும்பிய Angle(கோணத்தில்), Pose இல் தேவைக்கு ஏற்ப மாற்றங்களை புகைப்படம் எடுக்க முதல் கூட செய்யக் கூடியதாக இருக்கும்.
பாத்ரூம் கண்ணாடியின் முன் Selfie எடுக்கும் போது, கண்ணாடியில் தென்படும் தோற்றத்தையே(Mirror Image) புகைப்படம் எடுக்கக் கூடியதாக இருக்கும்.
ஏனைய இடங்களில் அரைகுறை ஆடையுடன் அவர்களால் புகைப்படம் எடுக்க முடியாது. அப்படி எடுத்தால், பொது இடங்களில் நிர்வாணமாக/அரை நிர்வாணமாக நிற்பதற்காக தண்டிக்கப்பட அதிக வாய்ப்பு உள்ளது.
Keywords: Smartphones
Comments
Post a Comment