Body Count எனும் பதத்திற்கு இருவகையான அர்த்தம் உள்ளது. ஒரு விபத்து, கொலை சம்பவம் நடந்திருந்தால் அந்த விபத்தில் அல்லது சம்பவத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கையையை Body Count எனும் பதத்தை வைத்து அறிக்கையிடுவர்.
ஒருவரால் கொல்லப்பட்ட நபர்களின் எண்ணிக்கையை பெருமையாக சொல்லும் வகையில் "ஆயிரம் தலை வாங்கிய அபூர்வ சிந்தாமணி" என்றெல்லாம் முன்னர் திரைப்படங்கள் உருவாகியது குறிப்பிடத்தக்கது.
"ஜி கடும் கோவத்துல இருக்காரு போல இன்னைக்கு எத்தனை தலை உருளப் போகுதோ" என்று அச்சத்தை உருவாக்கும் வகையில் சமூகத்தில் உள்ள கொடியவர்கள், சமூக விரோதிகளின் கெத்தை எடை போடுவதற்குக் கூட அவர்களால் கொலை செய்யப்பட்ட நபர்களின் எண்ணிக்கையை பயன்படுத்துவது உண்டு.
Body Count எனும் பதத்திற்கு இன்னொரு அர்த்தமும் உள்ளது. உங்களுக்கு எத்தனை நபர்களுடன் பாலியல் ரீதியான தொடர்பு உள்ளது என்பதையும் Body Count எனும் பதத்தின் மூலமே கணக்கு பண்ணுவர்.
ஒரு பொண்ணுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட Body Count இருந்தால் அவள் வேசி/Slut என்றால், ஒரு ஆணுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட Body Count இருந்தால் அவனும் வேசி/Slut தான். அதை கெளரவமாக Play Boy என்று சொல்லி சில ஆண்கள் பெருமைப்பட்டுக் கொள்வது உண்டு.
சில ஆண்களிடமும் பெண்களிடமும் ஒருவருடன் ஒரு தடவை மாத்திரம் செக்ஸ் வைத்துக் கொள்ளும் பழக்கம் உள்ளது. அது மிகவும் கீழ்தரமான பழக்கமாகும். அதே நேரம் அது நீங்கள் செக்ஸிற்கு அடிமையாகி உள்ளதன் அறிகுறியும் ஆகும்.
யாராவது உங்களிடம் Body Count எத்தனை என்று கேட்டால் அவசியம் உண்மையைச் சொல்ல வேண்டும் என்று மாத்திரம் நினைக்காதீர்கள். ஒரு ஆண்மையுள்ள ஆம்பளையா பல பேர் கூட படுத்திருந்தாலும் அதை காலரத் தூக்கி விட்டுக் கொண்டு பெருமையா சொல்லும் போது கூட உங்க Character யை தப்பா தான் நினைப்பாங்க.
Comments
Post a Comment