மிலிட்டரியில் பணிபுரியும் ஆண்கள் அணியக் கூடிய Combat Pants or Combat Trousers களை தற்காலத்தில் சாதாரண ஆண்களும் Casual Wear ஆக அணியக் கூடிய வகையில் Cargo Pants or Cargo Trousers என சந்தையில் விற்பனைக்கு உள்ளன.
இவை கடுமையான சூழலில்(Rough Work Environments), மற்றும் வெளிப்புற வேலைகளில் ஈடுபடுவதற்கு உகந்ததாக பல Tools களை வைக்குக் கூடிய வகையில் அதிக பாக்கெட்டுக்களுடன் உருவாக்கப்பட்டிருக்கும். அந்த பாக்கெட்டுக்களை Utility Pockets என்பார்கள்.
ஆண்கள் சாதாரணமாக இரு பக்கமும் இரண்டு பாக்கெட்டுக்களுடனும், பின் பக்கம் ஒன்று அல்லது இரண்டு பாக்கெட்டுக்களுடனும் உள்ள Jeans, Pants, Shorts யை விட அதிக பாக்கெட்டுக்களைக் கொண்ட கார்கோ பேண்ட்களை(Cargo Pant) ஆண்கள் விரும்புவதற்கு பிரதான காரணம், அவற்றை அணியும் போது ஆண்களுக்குக் கிடைக்கும் கவர்ச்சியான தோற்றமாகும்.
உடலை கட்டுடலாக, அளவான நிறையுடன் வைத்திருக்கும் ஆண்களுக்கு இந்த வகை பேண்ட்கள் மேலும் எடுப்பாக இருக்கும். இந்த வகை பேண்டுகளில் உள்ள பாக்கெட்டுக்களில் அதிக பொருட்களை சேமிக்க முடியும்.
அதனால் கைகளில் நிறைய பொருட்களை காவிக் கொண்டு திரிய தேவையில்லை. ஆகவே அதிக செளகரியத்தை விரும்பும் ஆண்கள் Cargo Pants களை நிச்சயம் விரும்பி தெரிவு செய்வார்கள்.
Comments
Post a Comment