ஒரு ஆணுக்கு இன்னொரு ஆண் மீது ஈர்ப்பு ஏற்படுவது இயல்பான ஒன்று. ஆனால் அவ்வாறு ஈர்ப்பு ஏற்படும் ஆண்கள் அனைவரும் அதனை செக்ஸ் வரை எடுத்துச் செல்வதில்லை.
Gay, Bisexual ஆண்கள், அதாவது தன்னினச்சேர்க்கையில் ஈடுபாடு உள்ள ஆண்களால் இன்னொரு ஆணுக்கு ஆண்கள் மீது ஈர்ப்பு உள்ளதா? இல்லையா? என்பதை அவர்களின் கண்களைப் பார்த்தே உணர முடியும். ஆனால் தாம் தெரிந்து கொண்டதை இன்னொருவருக்கு சொல்ல மாட்டார்கள். அவர்களது ரகசியம் இவர்களிடம் ரகசியமாகவே இருக்கும்.
இவ்வாறு தன்னினச்சேர்க்கையில் ஈடுபாடுள்ளதை வெளிக்காட்டாத ஆண்களை Closet Gays என்பார்கள். இவர்களின் எண்ணம் ஊரை ஏமாற்றுவது இல்லை. தன்னைத்தானே ஏமாற்றிக் கொண்டு எப்போதும் சமூகம் தன்னை தப்பா நினைத்து விடுமோ என்ற அச்சத்திலேயே வாழ்வார்கள்.
பல உயிரினங்களிடம் தன்னினச்சேர்க்கையில் ஈடுபாடு(Homosexual Behavior) காணப்பட்டாலும், அதனை தவறாகப் பார்ப்பது, தன்னினச்சேர்க்கையில் ஈடுபடுபவர்கள் மீது வெறுப்பைக் காட்டுவது(Homophobia நிலை) மனித இனம் மாத்திரம் தான்.
ஒரு ஆண் தன்னினச்சேர்க்கையாளனாக இந்த சமூகத்திற்கு வெளிப்படும் போது சந்திக்கும் சவால்கள், அவமானங்களை யாரும் அவ்வளவு எளிதில் மறந்து விடமாட்டார்கள். அதன் காரணமாகவே தான் Gay யாக இருந்தாலும் தன் எதிரில் இருக்கும் ஆண் Gay அல்லது Bisexual ஆக இருந்தால் கூட அதனை வெளியில் சொல்ல மாட்டான்.
ஆசைக்கு ஒரு வாட்டியாவது ஆர்வக் கோளாறில், எப்படி இருக்கும் என்று தெரிந்து கொள்ள, ஆண்களுடன் உடலுறவு அல்லது ஏதோ ஒரு வகையில் செக்ஸ் வைத்துக் கொள்ளும் ஆண்களை Bicurious ஆண்கள் என்பார்கள்.
ஒரு ஆண் உங்களைப் பார்த்து Gay என்று அழைத்து வாக்குவாதம் செய்தால், தயங்காமல் கேளுங்கள். அப்ப நீயும் Gay யா என்று? ஏன் என்றால், ஒரு Gay ஆணால் தான் இன்னொர் தன்னினச்சேர்க்கையாளனை உணர்வு ரீதியாக அடையாளம் காண முடியும். அந்த உள்ளுணர்வை Gay Radar அல்லது Gaydar என அழைப்பர்.
Read More: தன்னினச்சேர்க்கையாளர்களிடம் உள்ள சூப்பர் பவர். Gay Radar என்றால் என்ன?
Keywords: தன்னினச்சேர்க்கையில் ஈடுபாடு உள்ள ஆண்களை கண்களைப் பார்த்து தெரிந்து கொள்ளலாமா? Gay ஆண்கள் நினைத்தால் இதைப்பண்ணலாம். ஆனால் பண்ண மாட்டாங்க
Comments
Post a Comment