ஆண்களால் லுங்கி(Lungi) என பரவலாக அறியப்பட்ட, இடுப்பில் அணியும் காட்டன்(பருத்தி) ஆடையை மூட்டினால் அது சாரம் ஆகி விடும். இது தான் லுங்கிக்கும் சாரத்திற்கும் இடையிலான மிகப்பெரிய வித்தியாசமாகும். Tube போன்று மூட்டிய லுங்கியை சாரம்(Sarong) என்பார்கள்.
மூட்டாத லுங்கி/கைலி கிட்டத்தட்ட நான்கு முழம் வேட்டி போன்று இருக்கும். அதனால் நான்கு முழ வேட்டி கட்டும் போது ஆண்கள் சந்திக்கும் அத்தனை பிரச்சனைகளையும் மூட்டாத லுங்கி அணியும் ஆண்களும் சந்திப்பார்கள்.
உதாரணாமாக: நடக்கும் போது லுங்கி காற்றிக்கு பறந்து தொடை தெரிவது, ஜட்டி போடாமல் லுங்கி அணிந்து உட்காரும் போது லுங்கி விலகி அந்தரங்கம் வெளித்தெரிவது, மேலும் பல.
மூட்டிய லுங்கி, சாரம் அணிந்திருக்கும் ஆண்
Tips: ஆண்கள் லுங்கி, சாரம் வேட்டி கட்டும் போது ஜட்டியின் Waistband இன் மேல் அவற்றின் கட்டு இருப்பதை தவிர்க்க வேண்டும். அதன் மூலம் தேவை ஏற்படும் போது ஜட்டியை மாத்திரம் கழட்டக் கூடியதாக இருக்கும்.
லுங்கியின் முனைகளை மூட்டி ஒரு துணியினால் ஆன Tube போன்று சாரமாக மாற்றும் போது ஆண்கள் மூட்டாத லுங்கியை அணிந்த போது சந்தித்த பல பிரச்சனைகளை தவிர்க்கலாம்.
அது மாத்திரம் அல்ல, சாரத்தை ஆண்கள் தலைக்கு மேலாக, அல்லது காலை உள்ளே ஓட்டியே அணிய முடியும். அவ்வாறு அணிந்த சாரத்தை இடுப்பில் கட்டாமல் வாயில் கடித்துக் கொண்டால், அல்லது தோளில்/தலையில் போர்த்துக் கொண்டால், அது கிட்டத்தட்ட ஆண்களின் உடலைச் சூழ ஒரு மறைவை ஏற்படுத்தும். அதனை Mobile Room(நடமாடு அறை) ஆகப் பாவித்து நடு ரோட்டில் நின்று கூட ஆண்களால் உடை மாற்ற முடியும்.
லுங்கியின்/சாரத்தின் உதவியுடன் ஆடை மாற்றுவது எப்படி?
Read More: வயசுப் பசங்க லுங்கி, சாரம் கட்டுவது பற்றி தெரிந்திருக்க வேண்டிய விடையங்கள்.
அது ஒரு அழகிய 'வேட்டி' காலம்(அனுபவ படிப்பினை)
அப்போ, தளபதி படம் வந்த முதல் நாள், 1991 தீபாவளி (இல்ல பொங்கலா?) இங்க பொள்ளாச்சி 'நல்லப்பா'வுல, ஒரு பக்கம் ரஜினி ரசிகர்கள், இன்னொரு பக்கம் கேரளாவுல இருந்து வந்த மம்மூக்கா ரசிகர்ள்ன்னு சும்மா களை கட்டி இருந்துச்சு, (பக்கத்து துரைஸ்'ல நம்மாளு குணா படம்.) படம் ஆரம்பச்சுதல இருந்து ரஜினி, ரஜினி, ரஜினி தான்.. ரஜினி ரசிகர்க சும்மா ரவுண்ட் கட்டி ஆடிட்டிருந்தாங்க.. 'ராக்கம்ம கைய தட்டு'எல்லாம் டீ.டி.எஸ் இல்லாமயே காதுல அதிருன நாள் அது.. பின்னாடி ஒரு சீன் வரும், மமுட்டி கீதா, சார்லி எல்லாரையும் கூட்டிகிட்டு கோயிலுக்கு போவாரு, அப்போ போலீஸ் வந்து அவுங்க ஆளுகளை எல்லாம் அடிச்சு இழுத்துகிட்டு போகும்.. அப்படியே கோவமா கோயில்ல இருந்து மமுட்டி வெளிய ஓடிவருவாரு, வந்து ஒரு சின்ன திட்டுலயிருந்து அப்படியே எகிறி குதிப்பாரு,, குதிக்கும் போது அப்படியே டக்குன்னு காத்துலயே வேட்டிய மடிச்சு கட்டிக்குவாரு, சாமி.. மம்மூக்கா ரசிகர்கள் விட்ட விசில்ல, சும்மா ஒரு அஞ்சு நிமிஷம் தியேட்டரே ஆடிபோன சீன் அது. டிபிகல் மம்மூட்டி ஸ்டைல்!!
படம் பார்த்துட்டு வந்து, எங்க வீட்டு மாடிப்படி வளைவுல நானும் என் கூட்டாளி சிவா'னும் ரெண்டு படி மேல இருந்து குதிச்சுகிட்டே லுங்கிய மடிச்சுகட்ட முயற்ச்சி பண்ணினோம், நாலைஞ்சு தடவை ட்ரை பண்ணி அப்புறம் தடுமாறி கைப்பிடி க்ரில்ல முட்டிகிட்டு முட்டியில அடிவாங்கினதுக்கப்புறம் தான், 'மூட்டுன' லுங்கியில அப்படி செய்ய முடியாதுங்கிற வரலாற்று உண்மை எங்களுக்கு விளங்குச்சு, அப்புறம் கொஞ்ச நாளைக்கு, எப்பவெல்லாம் வேட்டி கட்டறமோ, அப்பவெல்லாம் அதை ட்ரை பண்ணிகிட்டே இருந்தோம். அது ஒரு அழகிய 'வேட்டி' காலம்.
நேத்து ராத்திரி கண் முழிச்சு ரீவைண்ட் பண்ணி ரீவைண்ட் பண்ணி 2.30 மணி வரைக்கும் படம் பார்த்துட்டு, காலையில 7.30 மணி வரைக்கும் தூங்கிதொலைச்சுட்டேன்.. காலையில எங்கய்யன் கூட ஒரு பக்கம் போக வேண்டியிருதுச்சு, நான் குளிச்சு முடிச்சு வர்றதுகுள்ளார, அவர் வண்டி ஏறி ரெடியா இருந்தாரு, சரின்னு அவசரமா கிளம்புனவன், என்னையும் அறியாம, சிட்டவுட் விட்டு இறங்கும் போது, டக்குன்னு ஒரு ஜம்ப் பண்ணி, அப்படியே வேட்டிய மடிச்சு கட்டினேன்.. கார்ல இருந்து எங்கய்யன் அப்படியே வெறுப்பா ஒரு பார்வை பார்த்தாரு.. 'ம்ஹும்.. கழுதை வயசாகுது..!!'
Keywords: Stitched Lungi, Sarong, Kailee
Comments
Post a Comment