வேட்டி அணிவது தொடர்பிலும், லுங்கி/சாரம் கட்டுவது தொடர்பிலும் ஆண்கள் தெரிந்து வைத்திருக்க வேண்டிய அடிப்படையான விடையங்கள் தொடர்பில் நாம் இதற்கு முன்னர் பல பதிவுகளில் விரிவாக பல தகவல்களை உங்களுடன் பகிர்ந்துள்ளோம்.
இந்தப் பதிவில் ஆண்கள் வேட்டி கட்டும் போதும், அல்லது லுங்கி, சாரம் கட்டும் போது அந்த எந்தளவு உயரத்திற்கு இருக்க வேண்டும் என்பதைப் பற்றி பார்ப்போம்.
Read More: முதல் முறை வேட்டி, லுங்கி அணியும் ஆண்கள் தெரிந்திருக்க வேண்டிய விடையங்கள்
ஒரு ஆண் இடுப்பிலும், விரும்பினால் இடையிலும் வேட்டி அல்லது லுங்கி கட்டலாம். உங்கள் இடுப்பை சுற்றி கட்ட நான்கு முழ வேட்டி பத்தாவிட்டால், எட்டு முழ வேட்டி என வேட்டியின் அகலத்தை மாற்றி அந்தப் பிரச்சனையை சரி செய்யலாம். ஆனால் ஆண்கள் வேட்டி கட்டும் போது அதன் உயரம் பத்தாவிட்டால், வேறு வழியில்லை வேட்டியின் நிறத்தில் பனியன் அணிந்து, வேட்டியை இடுப்புக்குக் கீழ் இறக்கித்தான் கட்ட வேண்டும்.
ஆண்கள் அணியும் வேட்டியானது, அவர்கள் வேட்டி அணிந்திருக்கும் போது தரையைத் தொட வேண்டும் என்பார்கள். ஆனால், ஆண்களின் கணுக்கால்கள் வரை அவர்கள் அணியும் வேட்டியும், லுங்கி/சாரமும் மறைத்தாலே போதுமாக இருக்கும்.
ஆண்கள் வேட்டி, லுங்கி/சாரம் அணியும் போது அது கணுக்காலுக்கு மேலே நின்றால் பார்ப்பதற்கு ஏதோ துண்டை இடுப்பில் சுற்றிக் கொண்டு நிற்பது போல இருக்கும்.
ஆகவே ஆண்கள் வேட்டி அணியும் போதும், லுங்கி/சாரம் அணியும் போதும் உங்கள் கணுக்கால்கள் மறைகிறதா என்பதை அவதானிக்க மறக்க வேண்டாம். இல்லாவிட்டால், ஏழு கழுதை வயசாகியும் இன்னமும் வேட்டி, லுங்கி/சாரம்/கைலி ஒழுங்கா கட்ட தெரியலன்னு பேசிப்பாங்க.
Read More: வேட்டியின் உயரத்தையும்(Height) நீளத்தையும்(Length) மாற்றியமைப்பது எப்படி?
Comments
Post a Comment