2002 ஆம் ஆண்டு தொடக்கம் ஒவ்வொரு வருடமும் ஜனவரி மாதத்தில் அல்லது மார்கழி மாதத்தில் பல வெளி நாடுகளில் ஒரு குறிப்பிட்ட நாளில், சமூகவலைத்தளங்களின் உதவியுடன் ஒரு ரயில் நிலையத்தில் ஒன்று கூடும் பல ஆண்களும் பெண்களும் தமது கீழாடைகளை(Jeans, Pant, Shorts, Skirts, etc.) கழட்டி தமது பைகளில் வைத்துக் கொண்டு மேலாடையுடனும் ஜட்டியுடனும் மாத்திரமே Subway/Metro Rail/Rapid Transit களில் ஒன்றாக பயணித்து "No Pants Subway Ride" அல்லது "No Trousers on the Tube Ride" வருடாந்த நிகழ்வை அனுஷ்டிக்கிறார்கள்.
#NoPantsSubwayRide இந்த நிகழ்வானது 2002 ஆம் ஆண்டு நியூயோர்க் நகரில் ஆரம்பிக்கப்பட்டாலும் இன்று பல்வேறு நாடுகளில் பரவலாக கொண்டாடப்படுகிறது. இந்த நிகழ்வை உலகம் முழுதும் ஏற்பாடு செய்ய உதவும் Improv Everywhere எனும் புரட்சி செய்யும் நோக்கில் இணைந்த கலைஞர்களின் குழுவானது இதனை தை மாதத்தின் ஆரம்பத்தில் அல்லது டிசம்பர் மாதத்தின் ஆரம்பத்தில் ஏற்பாடு செய்கின்றனர்.
இந்த வருடம், இதுவரையில் ஜனவரி 12 ஆம் தேதி லண்டனில் No Trousers Tube Ride 2025 கொண்டாடியுள்ளனர். இன்னும் பல நாடுகளில் கொண்டாடவும் உள்ளனர்.
இந்த நிகழ்வின் மூலம் அரசாங்கங்களுக்கு எதிராக எதனையும் அவர்கள் முன் வைக்கவில்லை. இது ஒரு விநோதமான செயற்பாடாகவே நிகழ்த்தப்படுகிறது. ஒரு விஷயத்தை தனி ஒருவனாக செய்யும் போது தான் அதனை தவறாக கருதி சமூகமே அவனை எதிர்க்கும். ஆனால் ஒரு கூட்டமாக அதனை செய்யும் போது அதனை இயல்பான விடையமாக கருதி இந்த சமூகம் அதனை அங்கீகரிக்க ஆரம்பித்து விடும்.
இதனை பலர் விமர்சித்தாலும், இதற்கு பலர் ஆதரவும் வழங்கி வருகின்றனர். தாம் தினமும் பார்த்து ரசிக்கும் ஆண்களை அவர்களின் ஜட்டியில் பார்த்து, அவர்களின் Underwear Bulge யை ரசிப்பதற்கு மிகவும் உகந்த நிகழ்வாக இதனைக் கருதுவதாக பலர் சமூக வலைத்தளங்களில் இதற்கு ஆதரவாக பதிவிட்டுள்ளனர்.
இந்த நிகழ்வில் கலந்து கொள்வதற்காகவே சிலர் விமான பயணங்களை மேற்கொண்டு அந்த நாடுகளுக்குச் செல்ல விரும்புவதாகவும் பலர் தெரிவிக்கின்றனர். நம்ம நாட்டில், நம்ம ஊரில் இந்த நிகழ்வை நடாத்த முடிவு செய்தால், நீங்கள் அதில் கலந்து கொள்வீர்களா?
வயது வந்த ஆண்கள், பெண்கள் என எல்லோரும் இதில் கலந்து கொள்வதால், அன்றைய தினம் நீங்கள் உங்களைக் கவர்ச்சியாக வெளிக்காட்டும் வகையிலான சுத்தமான உள்ளாடையை அணிந்து பயணிப்பது எதிர்காலத்தில் பல தொடர்புகளையும், நட்புகளையும் உருவாக்க உதவியாக இருக்கும். நீங்க போடுற ஆடைகள், உள்ளாடைகளை வைத்தே பலர் உங்களை மதிப்பீடு செய்வார்கள்.
நம்ம ஊரில் எப்படி ஆண்கள் வேட்டி கட்டுவதை ஊக்குவிப்பதற்காக வேட்டி தினத்தை(வேட்டி வாரம்) அறிமுகம் செய்தார்களோ அது போல அவர்கள் ஜீன்ஸ், பேண்ட் இல்லாமல் உல்லாசமாக திரிவதற்கு என்றே ஒரு தினத்தை அறிமுகம் செய்துள்ளார்கள். அந்த அனுபவம் கூட நிச்சயம் புதுமையாகத்தான் இருக்கும்.
ஒரு ஆணோ அல்லது பெண்ணோ பொது இடங்களில் ஜட்டியுடன் நிற்பது முழு நிர்வாண நிலையாக கருதப்படாது. நம்ம ஊரிலயே பல ஆண்கள் ஆறு/கடல்/குளம் போன்ற பொது இடங்களில் குளிக்கும் போது ஜட்டியுடன் நின்று தான் குளிப்பார்கள்.
Keywords: International No Pants Day, No Pants Day, Undie Run, World Naked Bike Ride, Train, அரை நிர்வாணமாக ரயிலில் பயணித்து கொண்டாடும் அமெரிக்கர்கள். இம்ப்ரோவ் எவ்ரிவேர்
Comments
Post a Comment