வயது வந்த ஆண்கள் பொது இடங்களில் வைத்து எண்ணெய் தேய்த்து குளிப்பது சற்று சிரமமான விடையமாகும், ஆனால் நிச்சயம் ஆண்களால் அந்தரங்கப் பகுதி தவிர்ந்த ஏனைய பகுதிகளுக்கு பொது இடங்களில் வைத்து எண்ணெய் தேய்த்து குளிக்க முடியும். Pehlwani/குஸ்தி பயிற்சி எடுக்கும் ஆண்கள் அவ்வாறு பொது இடங்களில் ஒருவருக்கொருவர் எண்ணெய் தேய்த்து, எண்ணெய்க் குளியல் போடுவதை வழமையாகக் கொண்டுள்ளனர்.
இரண்டு முழத் துண்டை(Desi Men Bathing Towel) இடுப்பில் கட்டிக் கொண்டு, உடல் முழுக்க நல்லெண்ணெய்யைத் தேய்த்துக் கொண்டு, அருவிக்கு கீழே மணப்பெண் மாதிரி தலையைக் கவிழ்ந்து நின்று குளிக்கும்போது ஏற்படும் சுகமே தனி. தலையில் கல்லைத் தூக்கிப் போடுவது போலத்தான் தெரியும். ஆனாலும் அதில் உள்ள சுகம் இருக்கே! அது சொன்னால் தெரியாது; குளித்து அனுபவித்தால் தான் புரியும்.
பொது இடங்களில் உள்ள நீர் நிலைகளில், உதாரணமாக ஆறு, குளம், நீர்வீழ்ச்சி/அருவி, கடல் போன்ற இடங்களில் ஆண்கள் எண்ணெய் தேய்த்துக் குளிக்கும் போது அவர்களின் முழங்கால்களுக்குக் கீழ் எண்ணெய் தேய்ப்பதைத் தவிர்க்க வேண்டும். அதன் மூலம் வழுக்கி விழும் சந்தர்ப்பத்தைக் குறைத்துக் கொள்ளலாம். அதே நேரம் அவதானமாக இல்லாவிட்டால் உடலில் இருந்து அகலும் எண்ணெய்யில் கூட நீங்கள் வழுக்கி விழலாம்.
அந்த நீர் நிலைகளைச் சூழ படிக்கட்டுகள், கருக்கற்கல் இருந்தால் அவசியம் அவதானமாக இருக்க வேண்டும். அந்த நீர் நிலைகளின் உள்ளும், அதனைச் சூழவும் மணல் இருந்தால் நீங்கள் எண்ணெயில் வழுக்கி விழுவதற்கான சந்தர்ப்பம் மிகவும் குறைவாக இருக்கும்.
Read More: வயசுப் பசங்க எண்ணெய் தேய்த்துக் குளிப்பது எப்படி?
Comments
Post a Comment