ஆண்கள் காலையில் குளித்த பின்னர், உடலில் உள்ள ஈரத்தை நன்கு துடைத்து உலர்ந்திய பின்பு அணியும் ஜட்டியை இரவு தூங்குவதற்கு முன்னர் தான் கழட்ட வேண்டும். அடிக்கடி கழட்டி, வெளியில் போகும் போது மாத்திரம் மாட்டக் கூடாது.
ஆண்கள் ஒரு முறை அணிந்த ஜட்டியை, அவர்களின் வியர்வையில் ஊறிய ஜட்டியை அடிக்கடி கழட்டி மாட்டும் போது அவற்றின் இலாஸ்டிக்குள் பழுதடைய அதிக வாய்ப்புகள் உள்ளன.
பொதுவாக ஆண்கள் ஜட்டியின் இடுப்புப்பட்டி, அதாவது ஜட்டியின் Waistband யை கைகளால் பிடித்து கீழ் நோக்கி உருவி ஜட்டியைக் கழட்டுவது உண்டு. ஒரு சிலர், முழங்கால்களுக்கு கீழ் வரை ஜட்டியை கைகளால் உருவி இறக்கி விட்டு,
அதன் பின்னர் கால்களை மேலும் கீழும் அசைத்து ஜட்டியை கழட்டுவது உண்டு. லுங்கி/சாரம்/துண்டு/வேட்டியின் உதவியுடன், அதன் மறைவில் ஆடை மாற்றும் ஆண்களிடம் இந்தப் பழக்க இருக்கும்.
எந்த வகையிலும் ஆண்கள் ஜட்டியை கழட்டும் போது வேகமாக உருவி கழட்டக் கூடாது. மெதுவாக ஜட்டியை உருவி கழட்ட வேண்டும். அப்படி கழட்டிய ஜட்டியை, அப்படியே ஓரிடத்தில் குவியலாக போடக் கூடாது.
கழட்டியை ஜட்டியை உதறி, உள்பக்கத்தை வெளியே எடுத்து அதனை அலசிக் காயப் போடுவது உகந்தது.
நீங்கள் அணியும் ஆடைகளை அன்றன்றே துவைத்து காயப்போடுவது நல்லது. இருப்பினும், இருக்கின்ற வேலைப்பலு காரணமாக வார இறுதியில் உடைகளை அலசினாலும், குறைந்தது ஜட்டியையாவது அன்றன்று அலசி காயப் போடுவது சிறந்தது.
Read More: ஆண்கள் ஜட்டி அணிந்து தூங்கலாமா? வயது வந்த ஆண்கள் ஏன் ஜட்டி அணிந்து தூங்க வேண்டும்?
Comments
Post a Comment