சிறுவர்கள் முதல் வயது வந்த ஆண்கள் வரை வீட்டில் இருக்கும் போது அணியக் கூடிய நமது நாட்டின் கால நிலைக்கு ஏற்ற ஆடையாக லுங்கி உள்ளது. இதனை கைலி, சாரம் எனவும் அழைப்பது உண்டு. வேட்டி போன்று இருக்கும் லுங்கியை லுங்கி எனவும். லுங்கியின் இரு முனைகளை மூட்டி/தைத்து, துணியால் செய்யப்பட்ட Tube போன்ற லுங்கிகளை சாரம்/கைலி எனவும் அழைப்பர்.
ஆசிய நாடுகளில் உள்ள ஆண்களும் தெற்காசிய நாடுகளில் உள்ள ஆண்களும் தமது அன்றாட வாழ்க்கையில் லுங்கி/சாரம் அணிகிறார்கள். அவர்கள் அணியும் லுங்கியின் அலங்கார வேலைப்பாடுகள், அளவுகளில் மாற்றங்கள் இருந்தாலும், ஒரு சில நாடுகளைத் தவிர பொதுவாகவே எல்லா நாடுகளிலும் ஆண்கள் ஒரே முறையிலேயே லுங்கி/சாரம் அணிகிறார்கள்.
லுங்கி, சாரம் அணிவது தொடர்பாக ஏற்கனவே நமது முந்தைய பதிவுகளில் விரிவாகப் பார்த்துள்ளோம். இந்தப் பதிவில் ஆண்கள் எப்படியெல்லாம் லுங்கியை அல்லது சாரத்தை முழங்கால்களுக்கு மேல் தூக்கி மடித்துக் கட்டுவது என இந்தப் பதிவில் பார்ப்போம்.
ஆண்கள் லுங்கியின் கீழ் பக்கத்தை இரு கைகளாலும் முழங்கால்களுக்கு மேல் தூக்கி, அவர்களின் தொடைகளுக்கு நடுவே மடித்துக் கட்டலாம், அல்லது இடுப்பிலோ அல்லது வயிற்றிலோ கூட முழங்கால்களுக்கு மேல் மடித்த லுங்கியைக் கட்டலாம்.
அதே போல லுங்கியை இரு கைகளாலும் முழங்கால் பகுதியில் பிடித்து மேலே ஏற்றி, தொடைகளுக்கு நடுவேயும் அல்லது இடுப்பிலும் லுங்கியைக் கட்டலாம். இதனை லுங்கியை ஏற்றிக் கட்டுவது என்பர்.
Keywords: ஏத்தி கட்டு, லுங்கி, சாரம் கட்டுவது எப்படி, சாரத்தை தூக்கி கட்டுவது எப்படி, வேட்டி, முண்டு
Comments
Post a Comment