மாதம் ஒரு முறை தலைமுடியை வெட்டி நேர்த்தியாக்காவிட்டால் ஆண்களின் தோற்றம் பாழாகி விடும். ஆண்களுக்கு தாடி, மீசை அழகு தான் ஆனால் அவற்றை முறையாக வெட்டி பராமரிக்காவிட்டால் அவை கூட அவர்களை பரதேசி போல ஆக்கிவிடும்.
வயதுக்கு வந்த ஆண்கள் அதிகம் செய்யும் தவறு தான் தமக்கு சிகையலங்காரம் செய்ய சலூனை(Men Saloon) மாத்திரம் நம்பியிருப்பதாகும். அது அழகல்ல.
ஆண்கள் சுயமாகவே சவரம் செய்து பழக வேண்டும். அதே நேரம் Grooming Tools யைப் பயன்படுத்தி ஓரளவுக்காவது தலைமுடியை வெட்டி அல்லது Trim செய்யப் பழக வேண்டும்.
ஒருவாட்டி, உங்களை நீங்களே Grooming செய்ய ஆரம்பித்து விட்டால், அதுவே உங்கள் Grooming Skills யை வளர்த்துக் கொள்ள ஆர்வத்தை தூண்ட ஆரம்பித்து விடும். உதவிக்கு உங்கள் நண்பர்களையும் நீங்கள் இணைத்துக் கொள்ளலாம்.
தாடி, மீசை என்பன ஆண்களின் ஆண்மையின் அடையாளமாகப் பார்க்கப்பட்டாலும், அவற்றை நேர்த்தியாக வளர்த்து, Maintain செய்யாவிட்டால் சருமப் பிரச்சனைகள் கூட ஏற்படும்.
எப்படி தலை முடி வெட்டுவது? எப்படி தாடி, மீசையை பராமரிப்பது என்று சொல்லித்தர பல YouTube, Instagram(e.g: Shah Jahan - @s.j_salon_) பக்கங்கள் உள்ளன. அவற்றை பின் தொடர்வதன் மூலம் பல விஷயங்களைக் கற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்கும்.
தலை முடி வெட்டும் போது சொதப்பி விட்டால், கவலையே வேண்டாம், தாரளாமாக தலை முடியை ஒரே நம்பரில் Trim செய்து விடலாம். ஓரிரு கிழமைகளில் தலைமுடி மீண்டும் வளர்ந்து விடும்.
வெளி நாடுகளில் முடி வெட்டுவதற்கு அதிக செலவு செய்ய நேரிடுகிறதாம். இந்த கலையை நீங்கள் கற்றுக் கொண்டால் கை வசம் இன்னொரு தொழிலும் வளர்ந்து விடும்.
ஆண்கள் தங்கள் உயிரையே பெண்களில் விதைத்தாலும் அவர்களை நம்பி, அவர்களின் மயிரை ஒப்படைப்பதில்லை. ஒரு ஆணுக்குத்தான் இன்னொரு ஆண்யை அழகாக செதுக்கத் தெரியும்.
தன்னினச்சேர்க்கையில் ஈடுபாடு உள்ள ஆண்கள் விரும்பி செய்யக் கூடிய சுய தொழில்களில் சலூன்கள்/முடி திருத்தும் நிலையங்களை நடாத்துவது முதன்மை வகிக்கிறது.
தற்காலத்தில் வெறுமனே முடி திருத்தும் இடங்களை நடாத்தாமல், ஆண்களுக்கான Facial, Make Up செய்யக் கூடிய சேவைகளையும் வழங்குவது சிறந்ததாக இருக்கும்.
Comments
Post a Comment