Six Packs, Eight Packs என கட்டுக் கட்டாக வயிற்றுப் பகுதியில் Abdominal Muscles யை செதுக்கி வைத்திருப்பதைப் போன்றே ஒரு குட்டி தொப்பையை Maintain பண்ணுவது கூட ஆண்களின் கவர்ச்சியை தக்க வைத்துக் கொள்ள ஆண்களுக்கு உதவும்.
கட்டுடலை அப்படியே வைத்திருக்க, தினமும் உடற்பயிற்சி செய்து, அளவாக சாப்பிட்டு Diet செய்து Maintain செய்ய வேண்டும். அது இன்றைய கால கட்டத்தில் மிகவும் கடினமாகும். அதனை எல்லோராலும் செய்ய முடியாது.
ஆனால் பெரிய தொப்பை இல்லாமல், உயரத்திற்கு ஏற்ற ஆரோக்கியமான உடல் நிறையை(BMI) நிச்சயமாக எல்லோராலும் பேண முடியும்.
அவ்வாறு பேணும் போது, நிச்சயம் ஆண்களுக்கு ஒரு குட்டித் தொப்பை எட்டிப் பார்க்கும். அதனை அந்த அளவுடன் வைத்திருப்பதன் மூலம் கூட ஆண்கள் தமது கவர்ச்சியை தக்கவைத்துக் கொள்ளக் கூடியதாக இருக்கும்.
மாப்பொருள்(Carbohydrate) அதிகம் உள்ள உணவுகள் சாப்பிடும் ஆண்களுக்கு, நேரம் கெட்ட நேரத்தில் சாப்பிடும் ஆண்களுக்கு, ஒரு இடத்தில் நீண்ட நேரம் உட்கார்ந்து இருந்து வேலை செய்யும் ஆண்களுக்கு, அதிக கொழுப்பு உணவுகளை எடுத்துக் கொள்ளும் ஆண்களுக்கு, பீர்(Beer) குடிக்கும் ஆண்களுக்கு தொப்பை பெரிதாக வளரும் வாய்ப்பு அதிகமாக இருக்கும்.
அளவாக தூங்குவதன் மூலம், யோகாசனம், மற்றும் உடற்பயிற்சிகள் செய்வதன் மூலம் ஆண்களால் அவர்களின் தொப்பையின் அளவை குறைக்க முடியும்.
Keywords: முதலாளி வண்டி, வயிறு, தொப்பை, தொப்பை ஏற்படுதல்
Comments
Post a Comment