ஆண்கள் தூங்கி எழுந்திருக்கும் போது அவனது உடலில் ஆண்களுக்கான பாலியல் ஹோர்மோனான டெஸ்டோஸ்டிரோன்(Testosterone) அதிகமாக இருக்கும். அதற்குக் காரணம், அதிகாலையில் அந்த ஹோர்மோன்(ஆண்மையியக்குநீர்) ஆண்களுக்கு அதிகம் சுரப்பதனால் ஆகும்.
இந்த திடீர் ஹோர்மோன் சம நிலை குழப்பத்தை மூளையானது உணரும் வேளை, அவன் தூக்கத்தில் இருந்த காலத்தில் அவனது சிறுநீர்ப்பையும் சிறுநீரால் நிரம்பி, மூத்திரம் முட்ட ஆரம்பிக்கும் போது(Bladder Pressure) ஏற்படும் தூண்டலாலும், கனவுகள் ஏற்படும் ஆழ்ந்த தூக்க நிலையில், அதாவது REM(Rapid Eye Movement) sleep நிலையில் ஏற்படும் நரம்புகளின் செயற்பாடுகளுக்கான தூண்டலுக்கான துலங்கலாகவும்(Natural Reflex of the Body) உடனே ஆண்களின் ஆண்குறியை விழித்தெழச் சொல்ல மூளை சமிக்ஞை அனுப்பி விடுகிறது. அதிகாலையில் வானில் சூரியன் உதிப்பது போல் அவன் ஆண்மையும் அவனுக்கு முன்பு உதயம் ஆகிறது.
ஆண்களுக்கு ஏற்படும் இந்த அதிகாலை ஆண்குறி விறைப்பானது, தூக்கம் கலைந்ததும் சில நிமிடங்களில் அடங்கக் கூடியதாக இருப்பினும், அந்த ஆண் முதல் நாள் இரவு, தூங்க முன்னர் சாப்பிட்ட ஆண்மையை அதிகரிக்கக் கூடிய உணவுகள், நீண்ட நாள் கை அடிக்காமல் இருப்பது, தூக்கத்தில் விந்து வெளியேறுவதற்காக இயற்கையாக ஆண்களுக்கு ஏற்படும் ஈரக்கனவுகள்(Wet Dreams - ஆபாசமான எண்ணங்கள் மற்றும் செயற்பாடுகள் நிறைந்த, அல்லது சிறுநீர் கழிப்பது போன்ற கனவுகள்), தூங்க முதல் பார்த்த ஆபாச வீடியோக்கள், காதலன்/காதலியின் நினைப்பு போன்றவற்றின் காரணமாக நீடித்து நிற்கலாம்.
ஆண்கள் இதனை முதல் முறை, பூப்படையும் காலத்தில் உணர ஆரம்பிக்கும் போது தேவையற்ற அச்சம் அடைவதும் உண்டு. அதே நேரம் பதின்ம வயதில் அநேகமான ஆண்கள், அதிகாலையில் குப்புறப்படுத்து, தமது விறைத்த ஆண்குறியை ஒரு அழுத்து, படுக்கையுடன் சேர்த்து அழுத்திக் கொண்டே எழும்புவர்.
அதன் தொடர்ச்சியாக, நாளடைவில் அவர்கள் படுக்கையுடன் தமது விறைப்படைந்த ஆண்குறியைத் தேய்த்து சுய இன்பம் செய்யப் பழகிடுவார்கள்.
ஆண்களுக்கு ஆண்குறி விறைத்திருக்கும் போது இலகுவாக சிறுநீர் கழிக்க முடியாது. ஆகவே காலையில் எழுந்திருக்கும் போது சிறுநீர் கழிக்க வேண்டும் போல இருந்தால், நன்றாக மூச்சை உள்ளே இழுத்து, வெளியே விட்டு, மூச்சுப் பயிற்சி செய்யவும்.
கவனத்தை வேறு வேலைகளில், யோசினைகளில் திருப்பவும். அதன் மூலம் திமிறிக் கொண்டிருக்கும் ஆண்களின் ஆண்குறியை சாந்தமடையச் செய்ய முடியும்.
எல்லா ஆண்களுக்கும் அதிகாலையில் பகுதியளவிலோ அல்லது முழுமையாகவோ ஆண்குறி விறைப்படையும். இது இயல்பான ஒன்றாகும்.ஒரு ஆண் ஆரோக்கியமாக இருப்பதன் அறிகுறியாகவும் இதனைப் பார்க்கலாம். ஒவ்வொரு ஆண் மகனும் சூரியனே!
Comments
Post a Comment