ஆண்கள் எவ்வாறு வேட்டி கட்டலாம்? ஆண்கள் வேட்டியை இடுப்பில் கட்ட வேண்டுமா? சொருக வேண்டுமா? ஆண்கள் வேட்டியை இறுக்கமாக கட்டுவதற்கு அவசியம் Belt அணிய வேண்டுமா?
வேட்டி கூட கட்டத் தெரியாதவன் ஆம்பளயா? என்று கேட்கக் கூடிய அளவுக்கு வேட்டி கட்டுவது ஒன்றும் அவ்வளவு கஷ்டமான விடையம் அல்ல.
இன்னும் எத்தனை நாட்களுக்குத்தான் சின்னப் பிள்ளைகள் போல, வேட்டி இடுப்பில் நிக்குதில்ல, வேட்டி கழறுதுன்னு சொல்லிக் கிட்டே ஒட்டிக்கோ கட்டிக்கோ வேட்டியை(Velcro Veshti) இடுப்பில் ஒட்டிக்கப் போறீங்க?
நீங்கள் அணிந்திருக்கும் வேட்டியின் கட்டு லூசாக/தளர்வாக இருந்தால், ஒரு ஓரமாக போய், மீண்டும் அவிழ்த்து கட்டலாம்.
உள்ளே ஜட்டி அணிந்திருக்கும் ஆண்களால் பொது இடத்தில் வைத்துக் கூட நான்கு முழ வேட்டியை(அல்லது எட்டு முழ வேட்டியை இரண்டாக மடித்து கட்டிய வேட்டியை) இலகுவாக அவிழ்த்துக் கட்ட முடியும். அந்தளவுக்கு வேட்டி கட்டுவது மிகவும் இலகுவான ஒன்றாகும்.
ஆண்கள் வேட்டி கட்டுவதில் பல்வேறு முறைகள் உள்ளன. வேட்டியை வட இந்தியர்கள் பேண்ட்(Pant) போல அணிவர். அவர்கள் வேட்டியை Dhoti என்பர்.
சாதாரணமாக தமிழ் ஆண்கள், கேரள ஆண்கள், தென்னிந்திய ஆண்கள் வேட்டியை இடுப்பில் கட்டுவர், அல்லது இறுக்கமாக சொருகுவர்.
வேட்டியை இடுப்பில் சொருகும் போது தான், அந்த இறுக்கம் தளர்வடைந்து அவிழ்வது போன்ற உணர்வு ஆண்களுக்கு ஏற்படும்.
ஆண்கள் நான்கு முழ வேட்டி கட்டும் முறை
சில ஆண்கள் வேட்டியை வேட்டியினுள் சொருகாமல், அவர்கள் உள்ளே அணிந்திருக்கும் ஜட்டியின் Waistband இனுள் வேட்டியை சொருகுவர். ஆனால் அவ்வாறு சொருகினால், அல்லது ஜட்டியின் Waistband இன் மேல் வேட்டியின் கட்டு இருக்கும் வகையில் வேட்டியைக்(or லுங்கி) கட்டினால், வேட்டி கட்டியிருக்கும் போது தேவைக்கு ஜட்டியை மாத்திரம் கழட்ட முடியாது.
வேட்டியை இடுப்பில் கட்டும் போது அவை இறுக்கமாக இருக்கும். சில ஆண்கள் வேட்டியை இடுப்பில் சொருகி, அல்லது கட்டி விட்டு அதனை Long Sleeve Shirt இன் கைகளை மடித்து விடுவது போல கீழ் நோக்கி இரண்டு மூன்று முறை மடித்து விடுவர்.
சில ஆண்கள் வேட்டியை இடுப்பில் சுற்றிக் கொண்டு, அதன் மேலே Belt அணிவதும் உண்டு. ஆனால் பொதுவாக தமிழ் ஆண்கள், வேட்டியை இடுப்பில் கட்டிய பின்னர், அதன் கட்டின் மேல், அவர்களின் அரைஞாண்கயிற்றை விட்டு, கீழ் நோக்கி வேட்டியை மடித்து விடுவர். அதன் மூலம் வேட்டியின் கட்டு மிகவும் இறுக்கமாகி விடும்.
உங்கள் இடுப்பில் அருணாக்கொடி இல்லாவிட்டால், நீங்கள் ஆணியும் வேட்டியின் நிறத்தில் கயிறு கூட கட்டலாம்.
ஆண்கள் வேட்டி கட்டும் போது வேட்டியின் நீளத்தை(Length) அல்லது அகலத்தை(Width) குறைக்க விரும்பினால், அதனை உள்பக்கமாக, அல்லது கரை வேலைப்பாடுகள் தெரியும் வகையில் வெளிப்பக்கமாக மடித்து வேட்டியை அணிவர்.
வேட்டியின் நீளம்(Length) குறைவாக இருந்தால், அதாவது நீங்கள் வேட்டி அணிந்திருக்கும் போது வேட்டியானது உங்களுக்கு இடுப்பில் இருந்து கணுக்காலுக்கு கீழ் வரை இருக்காவிட்டால், வேட்டியை இடையில்(Waist) கட்டாமல், இடுப்பிலும்(Hip) கட்டலாம்.
ஆண்கள் வேட்டி அணியும் போது, அதிலும் குறிப்பாக பட்டு வேட்டி, சட்டை அணியும் போது அவற்றை அயன் செய்து அணிய வேண்டும். கசங்கிய, அயன் செய்யாத வேட்டியை ஆண்கள் அணிந்தால், அவை ஆண்களின் தோற்றத்தை பாழாக்கும்.
Recommended: வயது வந்த ஆண்கள் ஏன் எட்டு முழ வேட்டி கட்ட வேண்டும்? ஆண்கள் வேட்டி கட்டுவது தொடர்பாக தெரிந்து வைத்திருக்க வேண்டிய அடிப்படையான விடையங்கள்
Comments
Post a Comment