ஒரு நாட்டின் இராணுவத்தின் இணைவதற்கு, பொலிஸ்/கடற்படை/விமானப்படையில் இணைவதற்கு ஆயத்தமாகும் ஆண்களை மருத்துவ பரிசோதனையின் போது, நிர்வாணமாக்கி அவர்களின் விதைகளை தொட்டு ஆராய்வார்கள். அதற்கு முக்கிய காரணம் ஒரு ஆணுக்கு அவனது விதைகள் ஒழுங்காக இருந்தால் தான் அவனது உடலில் ஆண்களுக்கான ஹோர்மோன் ஒழுங்காக சுரக்கும்.
அந்த மருத்துவ பரிசோதனையின் போது ஆண்களுக்கு இரண்டு விதைகளும் உள்ளனவா?, அவற்றை தொடும் போது அவர்களுக்கு வலிக்கிறதா? விதை வீக்கம் உள்ளதா? வெரிகோசெல்(Varicoceles) பிரச்சனை உள்ளதா? ஹேர்னியா பிரச்சனை உள்ளதா? ஆசனவாயில் ஏதாவது பிரச்சனை உள்ளதா? மூல நோய் உள்ளதா? ஆண்களின் ஆண்குறியில் உள்ள நரம்புகளில் பிரச்சனை உள்ளதா? ஆண்களின் ஆண்குறியின் முன் தோலை பின்னால் நகர்த்தி, அதன் மொட்டை வெளியே எடுக்கக் கூடியதாக உள்ளதா? என்பதையே அதிகம் பரிசோதிப்பர்.
ஆண்களை இராணுவத்தில் இணைத்துக் கொள்வதற்கு அவர்களுக்கு பெரிய ஆண்குறி இருப்பது தகுதியாக அமையாது. ஒரு ஆணுக்கு அவனது ஆண்குறி 1 Inch அளவில் இருந்தாலும், 10 Inches இருந்தாலும் ஒரே மாதிரியே கவனிப்பு இருக்கும்.
போர்க்களத்தில் படையினரால் தினமும் குளித்து சுத்தமாக இருக்க முடியாது. அதனைக் கருத்தில் கொண்டே குறைந்தளவு மருத்துவ பிரச்சனை உள்ள, இலகுவான அந்தரங்க உறுப்புகளை சுத்தம் செய்யக் கூடிய ஆண்களை படையில் இணைத்துக் கொள்வர்.
Recommended: ஆண்கள் மருத்துவப் பரிசோதனைகளிற்கு எப்படி தயாராக வேண்டும்?
Recommended: Good Touch and Bad Touch - வைத்தியர்கள் அந்தரங்கப் பகுதியை பரிசோதிக்கும் போது தடுக்க வேண்டுமா?
Keywords: ராணுவத்தில் இணையும் ஆண்கள், ஆண்களுக்கான மருத்துவப் பரிசோதனைகளின் ஏன் விதைகளை பரிசோதிக்கிறார்கள்? மிலிட்டரி ஆண்கள், கொட்டை பிடித்து பார்க்கும் ஆர்மிக்காரன்
Comments
Post a Comment