ஆண்கள் ஜட்டி போடுவது அவசியமாகும். அதிலும் குறிப்பாக வயது வந்த ஆண்கள் அவசியமாக ஜட்டி அணிய வேண்டும். ஆனால் ஜட்டியை கண்மூடித்தனமாக ஆண்கள் அணியக் கூடாது. ஆண்கள் தெரிவு செய்து அணியும் ஜட்டியானது அவர்களது பாலுறுப்புகளுக்கு இதமாக இருக்க வேண்டும், அதே வேளை அவற்றிற்குத் தேவையான Support யையும் கொடுக்க வேண்டும்.
ஆண்கள் எப்போதும் துவைத்த, சுத்தமான, உலர்ந்த உள்ளாடைகளை அணிய வேண்டும். ஆண்கள் ஈரமான ஜட்டி, அணிவது நல்லதல்ல. அதன் மூலம் அந்தரங்கப் பகுதிகளில் அரிப்பு, எரிச்சல் போன்றன ஏற்படலாம். ஈரமான ஜட்டி அணிந்தால் சிறிது நேரத்தில் உங்களைச் சூழ ஒரு துர்வாடை உருவாக ஆரம்பித்து விடும்.
ஈரமான ஜட்டியை அயன் செய்து அணிவதும் உகந்ததல்ல. அது உங்கள் ஜட்டியை பழுதடையச் செய்து விடும். ஒரு ஆண் குறைந்தது 3 ஜட்டிகளையாவது பயன்பாட்டில் வைத்திருக்க வேண்டும்.
முன்பு அணிந்து பழக்கம் இல்லாத புது Branded ஜட்டி, பனியன்களை(Different Brands) விஷேட நிகழ்வுகளின் போது அணிவதை தவிர்ப்பது நல்லது. அணிவது புது ஜட்டி, பனியன்களாக இருப்பினும், ஏற்கனவே அணிந்து பழக்கமுள்ள Brands களின் ஜட்டி, பனியன்களாக இருப்பின், அதனால் புதிதாக எந்த அசெளகரியமும்(Discomfort) ஏற்படாது.
சில ஆண்கள் Jockstrap ஜட்டி அணியும் போது அவர்களின் குண்டிகள் வெளித்தெரிவதை மறைப்பதற்காக, Boxer Briefs/Trunks அணிந்து அதன் மீது Jockstrap ஜட்டி அணிவது உண்டு. ஒரு சில ஆண்கள் , Jockstrap ஜட்டி அணிந்து, அதனை மறைக்கும் வகையில், அதன் மேலே Boxer Briefs/Trunks ஜட்டி அணிவது உண்டு. ஒன்றுக்கு மேற்பட்ட ஜட்டிகளை அண்கள் அணியும் போது இரண்டும் ஒரே அளவில் இறுக்கம் இல்லாது இருக்க வேண்டும். மேலே அணியும் ஜட்டி, உள்ளே அணியும் ஜட்டியை விட தளர்வாக இருக்க வேண்டும். இரண்டு ஜட்டிகளும் ஒரே அளவில் இறுக்கமாக இருந்தால் அசெளகரியமாக உணர நேரிடும். அதன் காரணமாக மருத்துவப் பிரச்சனைகள் கூட ஏற்படலாம்.
சில கிரிக்கெட் வீரர்கள் Sports Tight/Compression Shorts அணிந்து அதன் மேலே Penis Outline தெரியாமல் இருக்கவும், Ball Guard யை ஓரிடத்தில் நிலையாக வைத்திருக்கவும் ஜட்டி அணிவது உண்டு.
ஆண்கள் ஜட்டியை சரியாக அணியாவிட்டால், சிறிது நேரத்தில் அசெளகரியமாக உணர நேரிடலாம். ஆண்கள் ஜட்டி போட்டதும் அவற்றின் Waistband, Leg Opening Elastics சரியாக உள்ளதா, உருண்டு உள்ளதா என்பதை பார்த்து சரி செய்ய வேண்டும்.
அதே நேரம் ஜட்டி அணியும் போது ஆண்கள் ஆண்குறியை கீழ் நோக்கி வைத்து அணியும் போது, எந்தவொரு அசெளகரியமும் இல்லாமல் ஜட்டி அணிந்து நீண்ட நேரம் இருக்கலாம்.
உங்களால் உங்கள் அறையில் நிர்வாணமாக நின்று ஜட்டியை அணிய முடியாவிட்டால், பாத்ரூமில் வைத்தே, குளித்த பின்னர் உடலை நன்கு துடைத்து உலர்த்திய பின்னர், ஜட்டி அணிந்து கொண்டு ரூமிற்கு வரலாம்.
ஹாஸ்டல் ரூமில், அல்லது நண்பர்களுடன் தங்கியிருக்கும் அண்கள் அவர்கள் முன்னால் நிர்வாணமாக நின்று உடை மாற்ற கூச்சமாக இருந்தால், ஜட்டியை மாத்திரமாவது லுங்கி, Towel இன் மறைவில் அணிவது உண்டு.
மூட்டிய லுங்கி, அதாவது சாரம் பயன்படுத்தும் ஆண்கள், அதனை தலைக்கு மேலாக அணிந்து, இடுப்பில் கட்டிய பின்னர். சாரத்தை முழங்கால்களுக்கு மேல் மடித்துக் கட்டிக் கொண்டு ஜட்டியை தொடை வரை அணிந்த பின்னர், சாரத்தின் கட்டை அவிழ்த்து, சாரத்தை வாயில் வைத்துக் கடித்துக் கொண்டு, அதனை ஒரு Mobile Room ஆகப் பயன்படுத்தி அதன் மறைவில் தொடை வரை அணிந்த ஜட்டியை மேலே இழுத்து, ஜட்டியை அணிவர். ஆண்களால் லுங்கியின் உதவியுடன் ஜட்டியை மாத்திரம் அல்ல, Jeans, Pant, Shorts போன்ற ஆடைகளையும் மற்றவர்கள் முன்னால் நிர்வாணமாகாமல் அணியலாம்.
ஆண்கள் அணியும் ஜட்டி அவர்கள் உடல் அமைப்புக்கு ஏற்றதாக இல்லாமல், தளர்வாக இருந்தால் அங்காங்கே அவர்களின் உடலினுள் சொருகிக் கொள்ள அதிக வாய்ப்பு உள்ளது. அதிலும் குறிப்பாக உருண்டைக் குண்டிகள் உள்ள ஆண்கள் தளர்வான ஜட்டி அணிந்தால் நிச்சயம் ஜட்டியின் மேலதிக துணிகள் அவர்களின் பீரோவிற்குள்(Butt Crack) சொருகிக் கொள்ளும்.
ஆண்கள் Jockstrap ஜட்டி(Supporter Underwear) அணியும் போது, அவர்களின் ஆண்குறி, அதன் Pouch(ஜட்டியில் ஆண்குறி/விதைகள் தங்கும் முன் பகுதி) இனுள் கீழ் நோக்கி இருப்பது உகந்தது. அதே நேரம், Jockstrap ஜட்டியின் Straps ஆண்களின் குண்டிகளும் தொடைகளும் சந்திக்கும் பகுதியில் உருளாமால், நேர்த்தியாக தங்க வேண்டும். Jockstrap ஜட்டியின் Waistband ஆண்களின் இடுப்பில்(Waist) தங்க வேண்டும். Jockstrap ஜட்டியின் Waistband இடுப்புக்கு மேலும் ஏறக் கூடாது(அதிக இறுக்கமாக இருக்கும்), இடுப்புக்குக் கீழும் இறங்கக் கூடாது(அதிகம் தளர்வாக இருக்கும்).
Thongs, G-String ஜட்டி அணியும் போது அவற்றின் பின்பக்கம் ஆண்களின் சுத்துப் பிளவுக்குள் தங்க வேண்டும்.
ஒரு ஆண் காலையில் குளித்து விட்டு அணியும் ஜட்டியை இரவு தூங்கச் செல்வதற்கு முன்னர் தான் கழட்ட வேண்டும். காலையில் வெளியில் செல்லும் போது அணிந்த ஜட்டியை அடிக்கடி கழட்டி மாட்டுவது அநாவசியமானது. அவ்வாறு செய்தால் ஜட்டியில் இலாஸ்டிக்குகள் சீக்கிரம் பழதடைந்து விடும்.
நாள் முழுதும் அணிந்திருந்த, வியர்வையில் நனைந்த, ஈரமான ஜட்டிகளை மெதுவாக கழட்ட வேண்டும். கண்டமேனிக்கு ஜட்டியைக் கழட்டினால் ஜட்டியின் இலாஸ்டிக்குகள் பழுதடைந்து விடும்.
ஆண்கள் ஜட்டி அணியும் முன்னர், அதனை நன்கு உதற வேண்டும். அதன் மூலம் அதில் எறும்புகள் அல்லது வேறு ஏதாவது தூசுகள் இருந்தால் அகற்றப்பட்டு விடும். அப்படி ஜட்டியை உதறாமல் அணிந்தால், குஞ்சாமணியை எறும்பு கடிச்சிடும்.
நீங்கள் அணியும் ஜீன்ஸ்/பேண்டிற்கு வெளியே உங்கள் சூத்துப்பிளவு(Butt Crack) வெளித்தெரிவதை நீங்கள் அசெளகரியமாக கருதினால், உங்கள் சூத்துப் பிளவுக்கு மேல் ஜட்டியின் Waistband இருக்கும் வகையில் Mid Rise Briefs, Trunks or Boxer Briefs Underwear களைத் தெரிவு செய்து அணிய வேண்டும்.
ஆண்கள் தாம் அணியப் போகும் ஜட்டி சுத்தமாக உள்ளதா என்பதை மணந்து பார்த்து முடிவு செய்ய வேண்டும். வியர்வையில் ஊறிய, துவைக்காத, துர்வாடை வீசும் ஜட்டிகளை மீண்டும் அணிவது ஆரோக்கியமானது அல்ல.
ஆண்கள் இன்னொரு ஆணின் ஜட்டியை அணியக் கூடாது. அவ்வாறு அணிந்தால் தோல் வியாதிகள், தொடுகை மூலம் பரவும் பாலியல் நோய்கள் உங்களுக்கும் பரவலாம்.
ஹாஸ்டல்களில்(Hostel) தங்கியிருக்கும் ஆண்கள் தமது நண்பர்களின் ஜட்டி போல(Underwear Type), அதே Brand, Color இல் வாங்குவதை தவிர்ப்பது நல்லது.
ஆண்கள் ஜட்டியில் ஓட்டை ஏற்பட்டால் அதனை வீட்டில் இருக்கும் போது அணியலாம். ஆனால் அவற்றின் இலாஸ்டிக் பழுதடைந்து விட்டால், அதனை எறிவது தான் சிறந்தது. ஏன் என்றால், ஆண்கள் ஜட்டி அணிவது அவர்களின் அந்தரங்கப் பகுதிகளுக்கு Support யைப் பெற்றுக் கொள்வதற்காகும். ஜட்டியின் இலாஸ்டிக்குகள் பழுதடைந்து விட்டால், அதில் நீங்கள் எதிர்பார்க்கும் Support உங்கள் அந்தரங்கப் பகுதிகளுக்கு கிடைக்காது.
Read More: வயது வந்த ஆண்கள், ஆண்களின் உள்ளாடைகள் பற்றி தெரிந்திருக்க வேண்டிய அடிப்படையான விடையங்கள்
Keywords: Jatti Podum Aangal
Comments
Post a Comment