ஆண்கள் எண்ணெய்க் குளியல் போடுவது மிகவும் ஆரோக்கியமான பழக்கமாகும். ஆனால் அதை அவசரத்தில் செய்வதனால் எந்த பலனும் கிடைக்காது. ஆகவே நீங்கள் ஓய்வாக இருக்கும் நாட்களில் மாத்திரமே எண்ணெய்க் குளியல் போட வேண்டும்.
எண்ணெய் குளியல் என்பது செக்கில் ஆட்டிய நல்லெண்ணெயை சூடாக்கி, ஆற வைத்து உச்சந்தலை முதல் உள்ளங்கை, உள்ளங்கால்கள் வரை உடலில் ஒரு இடம் விடாமல் எண்ணெய் பூசி தேய்த்து ஊறவைத்து குளிப்பதாகும். அவ்வாறு எண்ணெய் தேய்த்துக் குளிக்கும் போது ஆண்கள், அவர்களின் தொப்புள், தொப்புளுக்கு பின்புறம்(முதுகுப் பகுதியில்), அக்குள், முழங்கைகளுக்கு மேல்(Biceps), தொடைகள், தொடை இடுக்கு, சூத்துப் பிளவு(Butt Crack) போன்ற இடங்களில் நன்றாக தேய்த்து எண்ணெய் பூச வேண்டும். இது உடலுக்கு ஆரோக்கியத்தை வழங்கக் கூடியதாக சித்த மருத்துவ குறிப்புகள் கூறுகின்றன.
ஆண்கள் எண்ணெய்க் குளியல் போடும் போது பாக்கெட்டில் வரும் எண்ணெய்யை அப்படியே பயன்படுத்தக் கூடாது. அதனை ஒரு கிண்ணத்தில் ஊற்றி, சூடாக்கி ஆற வைத்து பயன்படுத்த வேண்டும்.
ஆண்கள் எண்ணெய் தேய்த்துக் குளிப்பதால் கிடைக்கும் நன்மைகள்: எண்ணெய் தேய்த்துக் குளிப்பதால் உடலின் வாத, பித்த, கபம் தோடங்கள் சீராகிறது. உடலின் உள் உறுப்புகளின் இயக்கம் சீராகி உடல் வெப்பத்தை சமநிலைப்படுத்த உதவுகிறது. லிம்ஃபாட்டிக்ஸ் எனப்படும் நிணநீர்க் கோளமே உடலில் உள்ள அனைத்து செல்களுக்கும் ஊட்டம் அளிக்கிறது. உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றுகிறது. எண்ணெய் தேய்த்துக் குளிக்கும்போது சருமத்தின் வழியாக எண்ணெய் உட்கிரகிக்கப்பட்டு, இந்த நிணநீர்க் கோளத்தை அடைந்து உடலுக்கு எல்லாவிதமான நன்மையையும் அளிக்கிறது.
வாரம் ஒன்று அல்லது இருமுறை எண்ணெய் தேய்த்து குளிப்பதால் உடலின் செல்கள் வெப்பம் அடைவதில் இருந்து நம்மை காத்துக் கொள்ளலாம்.
வெப்பத்தினால் செல்கள் விரிவடைந்து நீர்சத்து வற்றி பல்வேறு உடல் உபாதைகளை ஏற்படுத்துகின்றன. இதனை தவிர்க்க வாரம் இரு நாட்கள் எண்ணெய் தேய்த்து குளிப்பது நல்லது.
எண்ணெய்க் குளியல் போட ஆண்கள் எந்த எண்ணெய் பயன்படுத்தலாம்?
நல்லெண்ணெய், விளக்கெண்ணெய்(Castor Oil/ஆமணக்கு எண்ணெய்), பசு நெய் போன்றவற்றை ஆண்கள் எண்ணெய்க் குளியல் போட பயன்படுத்தலாம். இருப்பினும் ஏனைய எண்ணெய்களை விட ஆண்கள் நல்லெண்ணெய் தேய்த்துக் குளிப்பதே நமது சமூகத்தில் பாரம்பரியமாக நிலவி வரும் வழக்கமாகும். ஆமணக்கு எண்ணெய் தேய்த்தால் உடலில் ஒரு பிசு பிசுப்புத் தன்மை ஏற்படும். மழைக்காலங்களில் அல்லது குளிர்காலங்களில் பசு நெய் தேய்ப்பது சற்றுக் கடினம்.
அனைவருக்கும் ஏற்றது நல்லெண்ணெய் ஆகும். எண்ணெய் முழுக்கு செய்த பின் இள வெந்நீரில் குளிக்க வேண்டும். அன்று போதுமான நீர் அருந்த வேண்டும். வெளியில் அலைவதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும். கண்டிப்பாக அன்று ஓய்வு எடுக்க வேண்டும். சரும துவாரங்களில் ஊடுருவி அடைப்பை உண்டாக்கிய அழுக்கை வெளியேற்றும் தன்மை எண்ணெய் குளியலுக்கு மட்டும் தான் உண்டு.
வளரும் பருவம் முதல் சரியான முறையில் தவறாமல் தலைக்கு எண்ணெய் வைத்து, எண்ணெய் குளியல் மேற்கொண்டால் பல்வேறு உடல் , எலும்பு மற்றும் தோல் நோய் பிரச்சனை வராமல் தடுக்கலாம். காதுகளில் மருத்துவரின் ஆலோசனையின்றி எண்ணெய் ஊற்றுவதை தவிர்க்க வேண்டும். காது ஜவ்வில் ஓட்டை உள்ளவர்கள் எண்ணெய் ஊற்றுவதால் ஒவ்வாமை ஏற்பட்டு தீராத காது பிரச்சனை ஏற்படலாம்.
சித்த மருத்துவத்தில் காதில் எண்ணெய் ஊற்றுவதை விட காது மடலில்(Pinna - செவிமடல்/சுளகு) எண்ணெயை தடவி நீவி விடுவதால், காது பிரச்சனைகளில் இருந்து நம்மை நாமே காத்துக் கொள்ளலாம்.
பிறந்த 15 நாட்கள் ஆன குழந்தை முதல் அனைவருக்குமே எண்ணெய் குளியல் ஏற்றது. கர்ப்பிணிகள், தீவிர நோயாளிகள், மாதவிடாய் பிரச்னை உள்ளவர்கள், கேன்சர் நோயாளிகள், உடலில் அதிக வலி கொண்டவர்கள், கபம் தொடர்பான நோய் கொண்டவர்கள், அஸ்துமா நோயர்கள், அறுசைசிகிச்சைகள் செய்தவர்கள், காய்ச்சல் நேரங்களில் எண்ணெய் குளியலை தவிர்க்கலாம். இவர்கள் மருத்துவரின் ஆலோசனையோடு தேவையெனில் மட்டுமே மேற்கொள்ள வேண்டும்.
எண்ணெய் குளியல், உடல் வெப்பத்தை தணிக்கும், சருமம் (தோல்) வறண்டு போகாமல் மென்மையாக இருக்கும், தொடர்ந்து குளித்து வரும்போது உடல் சோர்வு, உடல் அசதி உடல் வலி நீங்கும், நல்ல உறக்கத்தை உண்டாக்கும், கண்களுக்கு குளிர்ச்சி ஏற்படுவதால் கண் பார்வை மிகவும் நன்றாக இருக்கும், உடல் வெப்பத்தால் மலக்கட்டு, மூல நோய்கள் வராமல் தடுக்கும், உடல் வலி, மூட்டு வலி, இடுப்பு வலி நீங்கும், பெண்களுக்கு வெள்ளை படுதல் ஏற்படாது, கண் பொங்காது, ஞாபகமறதி ஏற்படாது, காலில் வெரிகோஷ்வெயின் ஏற்படாது, பேன், ஈறு, பொடுகு ஏற்படாது, நரைமுடி வராது, கண்புரை நோய் ஏற்படாது.
Recommended: எண்ணெய் குளியல் போடுவது எப்படி? ஆண்கள் தமது உடலில் எப்படி எண்ணெய் தேய்க்க வேண்டும்?
எண்ணெய் தேய்த்து 15 நிமிடம் முதல் 60 நிமிடத்திற்குள் குளித்து விட வேண்டும். மிதமான வெந்நீரைப் பயன்படுத்திதான் குளிக்க வேண்டும். ஷாம்பு தவிர்த்து சீயக்காய்தூளையே பயன்படுத்தவேண்டும். குளித்த பின் குளிர்ச்சியான உணவுகளை தவிர்க்க வேண்டும். உடற்சூட்டை சமனப்படுத்தக்கூடிய நாட்டுக்கோழி ரசம், கொள்ளுரசம், மிளகு ரசம், பருப்பு துவையல் போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம். பொதுவாக, புதன் மற்றும் சனிக்கிழமைகள் எண்ணெய் குளியல் போடுவது நல்லது.
Comments
Post a Comment