என்னதான் Ready Made ஆடைகளை பார்த்து பார்த்து வாங்கினாலும் நமக்கெட அளவெடுத்து தைத்த ஆடைகளை அணியும் போது உருவாகும் கலையான தோற்றம் வேறு எதிலும் கிடைக்காது.
சில ஆண்கள் Ready Made ஆடைகளை வாங்கி, ஒரு நல்ல டெய்லரின் உதவியுடன் அவற்றை தமது உடல் அளவு, அமைப்புக்கு ஏற்றாற் போல Alter செய்வர்.
எது எப்படியாக இருப்பினும், உங்களைப் புரிந்து, உங்களுக்கு ஏற்றால் போல ஆடைகளைத் தைப்பதற்கு ஒரு நல்ல டெய்லரையாவது நண்பனாக்கிக் கொள்வது அவசியம்.
அதன் மூலம் சில விஷயங்களை ஒழிவு மறைவாக சொல்லாமல், நேரடியாக கேட்டுச் செய்து கொள்ளக் கூடியதாக இருக்கும்.
உதாரணமாக:
- ஆண்கள் தமது Butt Shape வெளித்தெரியும் வகையில் Dress Pant இன் தொடைகளும் குண்டிகளும் சந்திக்கும் இடத்தை, Alter செய்து Tight செய்வது.
- ஆண்களுக்கு Dress Pant அளவெடுத்து தைக்கும் போது, Underwear Bulge யை பட்டும் படாமல் உரசும் அளவுக்கு நெருக்கமாக Crotch Length யை அளவெடுப்பது.
- கவடு கிழிந்த, நூல் விடுபட்ட Jeans, Pant யை தைப்பது
- தேவை ஏற்படின், ஆடைகளைக் கழட்டி, ஜட்டியுடன் நின்று கூட சரியான உடல் அளவுகளை எடுக்கக் கூடியதாக இருக்கும்.
அதே நேரம் டெய்லர்களிடம் இருந்து நமது தோற்றத்தை அழகாக்கக் கூடிய, கவர்ச்சியாக்கக் கூடிய உதவிக் குறிப்புகள், ஆலோசனைகளையும் பெற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்கும். மலிவு விலைகளில் துணிகள் எடுக்கக் கூடியதாக இருக்கும். சந்தைக்கு வந்துள்ள புது Trends களையும் கேட்டறியக் கூடியதாக இருக்கும்.
தன்னினச்சேர்க்கையில் ஈடுபாடு உள்ள ஆண்கள் விரும்பி செய்யக் கூடிய சுய தொழிலில் ஆண்களுக்கான டெய்லரிங் கடையும் சிறந்த ஒன்றாகும்.
Comments
Post a Comment