இரு ஆண்கள், அல்லது ஒரு ஆண் ஒன்றுக்கு மேற்பட்ட ஆண்களுடன் நகமும் சதையும் போல நெருக்கமாக நண்பர்களாக இருப்பதை இந்த சமூகத்தில் ஏராளமாகப் பார்க்கலாம். பொதுவாக ஆண்களுக்கிடையில் ஒரு தேவையை வைத்தே நட்புகள் உருவாகின்றன.
ஒரு செக்ஸ் வைத்துக் கொள்வதற்காக ஒரு பெண்ணை வீட்டிற்கு அழைத்து வந்தால் வீட்டில் உள்ளவர்கள் திட்டுவார்கள், கண்டிப்பார்கள்.
ஒரு ஆண்யை, இன்னொரு ஆண் தனது நண்பன் என்று சொல்லி செக்ஸ் வைத்துக் கொள்வதற்காக வீட்டுக்குக் கூட்டிட்டிப் போனால் சாப்பாடும் கொடுத்து, ஒரே ரூமில் கதவை சாத்திக் கொண்டு படுக்க அனுமதியும் கொடுத்து,
தங்கி விட்டு அடுத்த நாள் போகுமாறு சொல்லும் அளவுக்கு உபசரிப்பும் பலமாக இருக்கும். இவ்வாறான அப்பாவிக் குடும்பங்கள், நமது சமூகத்தில் ஏராளமாக உள்ளன.
அவர்கள் ஒழிவு மறைவாக செய்யும் வேலைகள் எல்லாம் வெளிச்சத்துக்கு வரும் போது தான் இந்தப் பூனையெல்லாம் பால் குடிக்குமா என்று கேட்கத் தோன்றும்.
ஆண்களின் நட்பை பல்வேறு வகையில் வகைப்படுத்தலாம்.
உதாரணமாக:
1. தேவை கருதி பழகும் ஆண்கள் - செக்ஸ், பணம், உதவி - அந்த தேவை முடிந்ததும் விலகுவிடுவார்கள்.
2. பல வருடமாக தெரிந்தவர்கள் - பார்த்தால் சிரித்துப் பேசுவார்கள்
3. பல வருடமாக தெரிந்தவர்கள், குடும்பத்தாருடனும் பழகுபவர்கள். - வீட்டுக்கு எல்லாம் வந்து தங்கிச் செல்லக் கூடியளவுக்கு நம்பிக்கையான நண்பர்கள்
4. ஒருவருக்கொருவர் உதவி செய்து பல வருடமாக தொடர்பில் இருப்பவர்கள் - தொழில் உதவி, வியாபார உதவி செய்து நண்பனையும் வாழ்க்கையில் உயர்த்தும் ஆண்கள்
5. ஒருவருக்கொருவர் உதவி செய்து பல வருடமாக தொடர்பில் இருந்து இப்போது தொலைவில் இருப்பவர்கள் - வெளி நாட்டில் வசிக்கும் நண்பர்கள்
6. கூடப்பிறந்த சகோதரனாகவே கருதும் அளவுக்கு மிக நெருக்கமான தொடர்பை பேணக் கூடியவர்கள். இதனை ஆங்கிலத்தில் Bromance என்பர். தமிழில் உயிர்த்தோழன் எனலாம். இது மதில் மேல் பூனை போன்ற நிலையாகும். இவர்கள் இருவருக்குள்ளும் செக்ஸ்/காதல் மாத்திரம் தான் இருக்காது.
7. உயிர் நண்பனை காதலிக்கும் ஆண்கள். - நண்பன் கேட்டால் அல்லது நண்பனுக்காக எதையும் செய்யத் துணியும் ஆண்கள்
சில ஆண்களுக்கிடையிலான உறவை/நட்பை வெளியில் உள்ளவர்கள் பார்த்தால் அவர்களை நண்பர்கள் என்று சொல்ல முடியாத அளவுக்கு அவர்களின் செயற்பாடுகள் இருக்கும்.
சில தன்னினச்சேர்க்கையாளர்களும் நண்பர்கள் என்ற போர்வையில் சமூகத்தை ஏமாற்றி ஒன்றாக வாழ்கிறார்கள். அவர்கள் எல்லாம் வெளிப்படையாக தம்மை வெளிப்படுத்தினால் மாத்திரமே ஆண்களுக்கு இடையிலான நட்புக்கு வரைவிலக்கணம் எதிர்காலத்திலாவது இனி கொடுக்கப்படும்.
Comments
Post a Comment