ஆண்கள் ஜட்டி போட்டால் விந்து உற்பத்தி பாதிப்படையும் ஆகவே Boxer Shorts, Boxer Briefs போன்ற தளர்வான ஜட்டியையே ஆண்கள் அன்றாடம் பயன்படுத்த வேண்டும் என்று பல பதிவுகளை நீங்கள் சமூகவலைத்தளங்களில் பார்த்திருக்கலாம்.
அந்தப் பதிவுகளில் ஓரளவுக்கு உண்மை இல்லாமல் இல்லை. ஆனால் ஆண்களைப் பொறுத்தவரையில் Boxer Shorts என்பது ஒரு உள்ளாடையே கிடையாது.
அது ஆண்களின் அந்தரங்கப் பகுதிகளுக்குத் தேவையான Support யைக் கொடுக்காது. ஆகவே அதனை அணிவதை ஆண்கள் தவிர்க்க வேண்டும்.
பிரச்சனை என்னவென்றால், ஆண்கள் அணியும் ஜட்டியானது அவர்களின் ஆண்குறிக்கும், விதைகளுக்கும் Support கொடுக்க வேண்டுமே தவிர, அதாவது ஆண்களின் தொடைகளுக்கு நடுவே தொங்கிக் கொண்டிருப்பதை தாங்கி நிற்க வேண்டுமே தவிர இறுக்கப் பிடித்துக் கொண்டு இருக்கக் கூடாது.
இறுக்கமான ஜட்டி அணியும் போது தான் ஆண்களின் விந்து உற்பத்தி பாதிப்படையும். ஆகவே தமது உடல் அமைப்புக்கும்(குண்டியின் அளவு, ஆண்குறியின் வகை, ஆண்குறியின் அளவு, மேலும் பல) இடுப்பு அளவுக்கு ஏற்ற மிகச்சிறப்பாக பொருந்தக் கூடிய ஜட்டிகளைத் தேடி வாங்கி அணியலாம். அது அவசியம் Boxer Briefs ஜட்டியாக இருக்க வேண்டும் என்றில்லை. ஆண்களுக்கென பல வகையான ஜட்டிகள், அவை கொடுக்கும் Support இன் அடிப்படையில் சந்தையில் விற்பனையாகின்றன. உதாரணமாக: Boxer Briefs, Trunks, Briefs, Jockstrap, Thongs, G-Strings
உங்களுக்குத் தெரியுமா? ஆண்கள் Cotton(100% பருத்தி) or Cotton Blend(Polyester/Rayon/Spandex போன்றவற்றுடன் கலந்த பருத்தி) துணியினால் ஆன ஜட்டிகளைத் தவிர ஏனைய Fabrics(e.g: Polyester, Rayon, Lenin) இல் உருவாக்கப்பட்ட ஜட்டிகளை அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்துவது உகந்தது அல்ல.
ஆண்கள் அவசியம் ஜட்டி அணிய வேண்டும். அதிலும் குறிப்பாக வயது வந்த பிறகு ஆண்கள் ஜட்டி அணியாது சுற்றுவது மானக்கேடு ஆகும்.
பூப்படைந்த பின்னர் ஆண்களுக்கு அடிக்கடி ஆண்குறி விறைப்படையும். அவை எழுந்தமாகவும் நடக்கலாம், உணர்ச்சிவசப்பட்டும் நடக்கலாம். ஆண்கள் ஜட்டி போடாவிட்டால், புடைத்தெழுந்த ஆண்குறி அணிந்திருக்கும் ஆடையினூடாக வெளித்தெரியும்.
ஜட்டி போடாமல் நான்கு முழ வேட்டி கட்டியிருக்கும் போது, வேட்டி விலகினால், அந்தரங்கம் வெளித்தெரிய அதிக வாய்ப்பு உள்ளது.
சில தருணங்களில்/சில எதிர்பாராத உரசல்களின் காரணமாக ஆண்களுக்கு விந்து வெளியேறலாம். அப்படி வெளியேறிய விந்து ஜட்டி அணிந்திருந்தால் ஜட்டியில் படியும். ஆனால் ஜட்டி அணியாவிட்டால் அணிந்திருக்கும் ஆடையிலேயே படிந்து விந்துக் கறையை உருவாக்கி விடும். இவ்வாறான பல, ஆண்களுக்கு ஏற்படும் அசெளகரியங்களை ஆண்கள் ஜட்டி அணிவதன் மூலம் சரி செய்யலாம். ஆகவே வயது வந்த பிறகு ஜட்டி அணிவது காலத்தின் அவசியமாகும்.
சில ஆண்களுக்கு ஜட்டி அணிய கூச்சமாக இருக்கும். அவர்கள் ஜட்டியைத் தொடவே வெட்கப்படுவர். அவ்வாறான ஆண்கள் வீட்டில் இருக்கும் போது Briefs/V-Cut Underwear/ கட் ஜட்டி அணிய வேண்டும். அதன் மூலம் அவர்களின் கூச்சத்தை கொஞ்சம் கொஞ்சமாக அகற்றலாம்.
Comments
Post a Comment