Dopamine, Serotonin, Endorphins, and Oxytocin போன்றன மனிதர்களின் உடலில் சுரக்கும் Happy Hormones ஆகும். இவை உடலில் சுரக்கும் போது தான் நாம் சந்தோஷம், மன நிம்மதி அடைவோம். அத்துடன் இவை சுரப்பதால் தான் நமது உடலில் மன அழுத்தம், பயம் போன்ற உணர்வுகளின் தாக்கம் குறைகிறது.
செரோடோனின்: மனநிலையை சரி செய்யும். அத்துடன் தூக்கம், பசி மற்றும் சமூக நடத்தையை ஒழுங்குபடுத்துகிறது. இது "நல்ல உணர்வுக்கான ஹார்மோன்(feel-good hormone)" என்றும் அழைக்கப்படுகிறது.
டோபமைன்: பாராட்டுக்கள், பரிசில்கள் வெல்வது, வெகுமதி மற்றும் மகிழ்ச்சியான தருணங்களுடன் தொடர்புடையது. இது "நல்ல உணர்வுக்கான ஹார்மோன்" என்றும் அழைக்கப்படுகிறது.
எண்டோர்பின்கள்: இயற்கையாகவே உடலால் உற்பத்தி செய்யப்படும். இவை மனநிலையை/மன வலிமையை உயர்த்தி உடலில் ஏற்படும் வலியைக் குறைக்கும். இவை சமூகத்தன்மை(Sociability), பாசம் மற்றும் உற்சாக உணர்வுகளையும் ஏற்படுத்தும்.
ஆக்ஸிடாஸின்: அன்பு, அமைதி உணர்வுகளை ஊக்குவிக்கிறது, மேலும் பயம் மற்றும் பதட்டத்தைக் குறைக்கிறது. இது நல்வாழ்வு மற்றும் மகிழ்ச்சியின் உணர்வுடன் தொடர்புடையது.
ஆரோக்கியமான உணவுமுறை(Diet), உடற்பயிற்சி(Regular Exercise) மற்றும் தியானம்(Yoga/Meditation) போன்ற எளிய வாழ்க்கை முறைகளை வைத்து உங்கள் அன்றாட வாழ்க்கையை மாற்றும் போது மேலே கூறப்பட்டுள்ள ஹார்மோன்களின் அளவை மேலும் அதிகரிக்கக் கூடியதாக இருக்கும்.
மனதிற்கு இனிமையான இசையைக் கேட்பதன் மூலம், சமைப்பதன் மூலம், தோட்டங்களை பராமரிப்பதன் மூலம், செல்லப்பிராணிகளை வளர்ப்பதன் மூலம், பிடித்த விடையங்களை செய்வதன் மூலமும் இந்த ஹார்மோனின் உற்பத்தியை தூண்டி மகிழ்ச்சியாக இருக்கலாம்.
சூரிய ஒளியில் நீண்ட நேரம் செலவிடுவதன் மூலம் செரோடோனின் அளவை அதிகரிக்கலாம். ஆடி ஓடி வேலை செய்வதன் மூலமும், முறையான உடற்பயிற்சி மூலமும் உங்கள் உடலில் மகிழ்ச்சியான ஹார்மோன்ககளின் உற்பத்தியை மேலும் தூண்டலாம்.
ஆண்கள் புகைப்பிடிக்கும் போது கூட டோபமைன் சுரக்கும். ஆண்கள் சுய இன்பம் செய்து அல்லது செக்ஸ் செய்து விந்து வெளியேற்றும் போதும் டோபமைன் மற்றும் ஆக்ஸிடாஸின் சுரக்கும். இவை தான் பாலியல் ரீதியான திருப்தியை முழுமையாக உணரச்செய்கின்றன.
அதிகளவு நேரம் உடற்பயிற்சி செய்வதனால் சுரக்கும் Happy Hormones களின் அளவை, ஆண்கள் சுய இன்பம் செய்வதன் மூலமும், புகைப்பிடிப்பதன் மூலமும் மிகவும் குறுகிய நேரத்திலேயே அடைவதனாலேயே பல ஆண்கள் கை அடிக்கும் பழக்கத்திற்கும் புகைப்பிடிக்கும் பழக்கத்திற்கும் அடிமையாகி வாழ்க்கையை தொலைக்கின்றனர்.
இரண்டு மணி நேரம் Gym இல் Work Out செய்யும் போது கிடைக்கும் மன நிம்மதி, சந்தோசத்தை வெறும் 2 - 10 நிமிடங்கள் சுய இன்பம் செய்து விந்து வெளியேற்றுவதன் மூலம் அனுபவித்தால் யாருக்குத்தான் Gym க்கு போக வேண்டும் என்ற Motivation கிடைக்கும்? நோகாமல் நொங்கு சாப்பிட்டுட்டே இருந்தால் ஆரோக்கியம் கெடும், இல்லையா?
குறிப்பு: ஆண்கள் சுய இன்பம் செய்வது தவறில்லை. ஆனால் அந்தப் பழக்கத்திற்கு அடிமையாவது ஆரோக்கியமானது அல்ல.
Keywords: டோபமைன், செரோடோனின், எண்டோர்பின்கள் மற்றும் ஆக்ஸிடாஸின், Smoking
Comments
Post a Comment