ஆண்கள் வேட்டி கட்டும் போதும், குறிப்பாக பட்டு வேட்டி கட்டும் போதும், பெண்கள் பட்டுச் சேலை கட்டும் போதும் இருக்கும் சந்திக்கும் மிகப்பெரிய பிரச்சனை தான் அவற்றை அயன் செய்து அணிவதும், அவற்றில் ப்ளீட்ஸ்/மடிப்பு வைப்பது ஆகும்.
அவற்றை முறையாக செய்யாவிட்டால் பட்டு வேட்டி அணியும் போது ஆண்களுக்கு அழகான தோற்றம் கிடைக்காது.
பட்டு வேட்டி கசங்கியிருந்தாலும் அழகாக இருக்காது, அவற்றில் மடிப்புகள் வைக்காவிட்டாலும் அழகாக இருக்காது.
ஆகவே தான் ஆண்கள் பட்டு வேட்டு வேட்டி அணியும் போது அயன் செய்து பட்டு வேட்டியையும், அதன் சால்வையையும், பட்டு சட்டையையும் அணிவர். கசங்கிய வேட்டியை அயன் செய்து சரி செய்யலாம். ஆனால் வேட்டியில் ப்ளீட்ஸ்/மடிப்பு வைப்பது எப்படி?
Iron Box/இஸ்திரி பெட்டி பயன்படுத்தினால் அது ஒன்றுக்கு இரண்டு வேலையாக முடியும். முதலில் வேட்டியை அணிந்து, அதில் வரும் மடிப்புகளை முறையாக நேர்த்தியாக அடுக்கி Safety Pin குத்தி, பின்னர், அணிந்த வேட்டியை கழட்டி, அந்த மடிப்புகளை அயன் செய்ய வேண்டும்.
ஆனால் உங்களிடம் தலை முடியை நேராக்கும், Hair Straighteners இருந்தால்
அந்த கவலையே வேண்டாம். உங்கள் நண்பர்களின் உதவியுடன் நீங்கள் வேட்டி
அணிந்திருக்கும் போதே வேட்டியின் மடிப்புகளை அயன் செய்து அழகாக ப்ளீட்ஸ்களை
உருவாக்கலாம்.
அவதானம்: Iron Box பயன்படுத்துவது போன்றே Hair Straighteners பயன்படுத்தி வேட்டியை அயன் செய்யும் போதும், அதன் Temperature யை அளவாக வைக்கவும். இல்லாவிட்டால், வேட்டி மயிர் மாதிரி பொசுங்கி விடும்.
Read More: ஆண்கள் தலைப்பாகை கட்டுவது எப்படி?
Read More: வேட்டியை அயன் செய்வது எப்படி?
Read More: வேட்டியின் சால்வையை மடிப்பது எப்படி?
மருமகனை ஒதுக்குப்புறமான இடத்தில் ஜட்டியுடன் நிற்க வைத்து தோதி கட்டி விடும் மாமனார்
Keywords: Men in Dhoti, How to wear Dhoti Pant, Vetti Kattuvathu Eppadi
Comments
Post a Comment