ஆண்களுக்கான வேட்டிகளை அவற்றின் அளவுகளை வைத்து நான்கு முழம்(Single Veshti), எட்டு முழம் வேட்டி(Double Veshti) என வகைப்படுத்தலாம். அது போல வேட்டியின் நிறம், அதன் துணியின் வகையை வைத்துக் கூட வெள்ளை வேட்டி(White Veshti), கலர் வேட்டி(Color Veshti), பட்டு வேட்டி, பருத்தி வெட்டி, பருத்தியுடன் பட்டு கலந்த வேட்டி(Cotton Blend), பட்டுப் போன்ற செயற்கை வேட்டி(Art Silk - Artificial Silk) என வகைப்படுத்தலாம்.
அதே போன்று அந்த வேட்டிகளை மேலும் அவற்றின் கரையின் வடிவம், அளவை வைத்து சின்ன கரை(Small Border Veshti), பெரிய கரை(Big Border Veshti), பட்டுக் கரை/ஜரிகை வேட்டி(Jari Veshti), Hand-Block Prints/கைவேலைப்பாடுகள் நிறைந்த கரைகள் வைத்த வேட்டி, வித்தியாசமான/ஆடம்பரமான வேட்டி கரைகள்(Fancy Border Veshti) என மேலும் வகைப்படுத்தலாம்.
தற்காலத்தில் சமூக வலைத்தளங்களில் அநேகமான ஆண்கள் அணிவது Hand-Block Prints கரை வைத்த வேட்டிகளாகும். இதில் பல வகைகள் உள்ளன.
அவர்கள் அந்த வேட்டி அணியும் போது அணியும் கை வேலைப்பாடுகள்/Patterns/Printed Designs நிறைந்த சட்டையின் துணியை வேட்டியின் கரைக்கு சமாந்தரமாக அருகில் ஒரு கோடு போல இன்னொரு Border தைத்திருப்பார்கள்.
ஆனால் பிரச்சனை என்னவென்றால் இவ்வாறு சட்டையின் துணியை கரையாக வைத்த வேட்டிகளை ஏனை சட்டைகள் அணியும் போது அணிய முடியாது. தேவை என்றால் அந்த மேலதிக வேட்டி கரையை நீக்கி விட்டு வேட்டியை சாதாரண வேட்டி போன்று பயன்படுத்தலாம்.
சிலர் வேட்டியின் மீது வேறு உருவங்களைக் கூட Print செய்வார்கள். இதனை Printed Dhoti என்பார்கள். அதிலும் பல வகைகள் உள்ளன. வேட்டியின் கரைக்கு அருகில் உருவங்களை பதிப்பது ஒரு வகை, வேட்டி முழுவதும் உருவங்களைப் பதிப்பது இன்னொரு வகை. இவையெல்லாம் தற்காலத்தில் பாரம்பரிய வேட்டிகளில் உட்புகுத்தப்படும் நவீன மாற்றங்களாகும்.
இந்த வகையிலாவது ஆண்கள் வேட்டி கட்டும் பழக்கம் மேலும் தொடர்ந்தால் நல்லது தான்.
Read More: ஆண்களுக்கான வேட்டிகளில் உள்ள புது Trends, Designs என்ன?
Read More: ஆண்களுக்கான வேட்டி தொடர்பில் மேலும் பல விடையங்களை அறிந்து கொள்ள இங்கே அழுத்தவும்.
Comments
Post a Comment