ஒரு சிலர் சிறுவயதில் இருந்தே ஏனையவர்களுடன் அதிகம் பேசிப் பழகும் பழக்கம் இருக்காது. அவர்கள் எப்போதும் தமது வட்டத்தை சுருக்கிக் கொண்டு தனிமையாக இருக்கவே விரும்புவார்கள். அவர்களை Introverts என்பார்கள்.
அதிகம் நண்பர்களை உருவாக்கிக் கொள்ளும், அதிகம் வெளியில் உலாவும் நபர்களை Extroverts என்பார்கள். Introverts போன்று இல்லாது, இவர்கள் சமூகத்துடன் எப்போதும் இணைந்தே இருப்பார்கள்.
சமூகத்தில் நடக்கும் முக்கிய நிகழ்வுகளுக்கு தலைமை தாங்குவார்கள், அல்லது முன்னுக்கு நிற்பார்கள். ஆனால் Introverts அப்படியல்ல, அவர்களுக்கு வெளியில் சென்றாலே எப்படா வீட்டுக்கு போவோம்ன்னு இருக்கும்.
அவர்கள் அதிகம் பேசமாட்டார்கள். அவர்களிடம் கேட்கப்படும் கேள்விகளுக்கு Shorts Answers மாத்திரமே பதிலாக இருக்கும். அவர்கள் அதனை ஒரு Discussion ஆக கொண்டு செல்ல விரும்பமாட்டார்கள்.
நீங்க Introverts ஆக இருந்தால், அவசியம் உங்கள் நட்பு வட்டத்தை பெரிதாக்க முயற்சிக்க வேண்டும். புதியவர்களுடன் பேசும் போதும், பழகும் போது நடுக்கம், தயக்கம் ஏற்படுவது இயல்பான ஒன்றாகவே உங்களுக்கு இருக்கும். ஆனால் நீங்கள் முயற்சி செய்தால் அதனை சரி செய்ய முடியும்.
நீங்கள் எவ்வளவு வேகமாக சமூகத்துடன் இணைந்து செல்ல(Socializing) முயற்சிக்கிறீர்களோ, அந்தளவு வேகத்தில் உங்களது தனிமைப்படுத்தப்பட்ட நிலையும் மாறும். எடுத்தவுடனேயே வேகமாக காய் நகர்த்தல்களை மேற்கொள்ள வேண்டாம். மெதுவாக ஆரம்பித்து, படிப்படியாக வேகத்தை கூட்ட வேண்டும்.
உங்களுக்கு தனியாக அதனை செய்ய முடியாவிட்டால் மன நல மருத்துவர்களின்/உள நல ஆலோசகர்களின்(Therapist) உதவியைப் பெறலாம். உங்கள் ஏரியாவில் உள்ள Social Service Clubs,Swimming Clubs, Sports Clubs, Gyms, Friends Clubs போன்றவற்றில் இணையலாம்.
மற்றவர்கள் பேசும் விடையங்கள் தொடர்பில் உங்களுக்கு கருத்துக்கள் இல்லாவிட்டால், அவற்றை காது கொடுத்து கேட்கவும். அவர்களின் கருத்துக்களை உதாசினம் செய்ய வேண்டாம்.
புதிய நபர்களை சந்திப்பதை உங்களுக்கு மன அழுத்தத்தைக் கொடுக்கும் விடையமாக கருத வேண்டாம். சமூக வலைத்தளங்களில் உங்களுடன் அதிகம் பேசும், Chat செய்யும் நபர்களை நேரில் சந்தித்து, உங்களுக்கிடையிலான நட்பை மேலும் வளர்க்கலாம்.
புதிய நபர்களை சந்திக்க முன்னர், நன்றாக மூச்சுப் பயிற்சி செய்து பதற்றமான மன நிலையை குறைக்கலாம். அவர்களுக்கு கை கொடுக்கும் போது உங்கள் கைகள் அவர்களின் கைகளை இறுக்கமாக பற்றிப் பிடிக்க வேண்டும். அந்த இறுக்கம் உங்கள் தன்னம்பிக்கையை மேலும் அதிகரிக்க உதவும்.
புதிய நபர்களுடன் கலந்துரையாடுவதற்கு என சில தலைப்புகளையும்(Topics), அவை சார்ந்த விடையங்களையும் எப்போதும் Update இல் வைத்திருக்கலாம். பொதுவாகவே ஆண்களுடன் அவர்களின் பொழுதுபோக்கு சம்பந்தமாக, புதிய தொழில்நுட்பங்களின் அறிமுகம் சம்பந்தமாக, விளையாட்டுக்கள் சம்பந்தமாக, கார்கள்/வாகனங்கள் சம்பந்தமாக, சினிமா சம்பந்தமாக, தற்கால அரசியல் நடப்புகள் சம்பந்தமாக இலகுவாக கலந்துரையாடலாம்.
ஆண்களுக்கு கைகளும், தொடைகளும் நடுங்கலாமா?
தொடை நடுங்கி, பயந்தாக்கோழி போன்றன வலுவற்ற ஆண்களை குறிக்க பயன்படுத்தும் வசைச்சொற்களாகும். ஒரு ஆணுக்கு தொடை நடுங்குகிறது என்றால் அவனால் இயல்பான முறையில் கலவியில் கூட ஈடுபட முடியாது என்பார்கள்.
அளவுக்கதிகமாக மது அருந்தும் ஆண்கள், போதைப்பொருட்கள் பயன்படுத்தும் ஆண்கள், புகைப்பிடிக்கும் ஆண்களுக்கும், அளவுக்கதிகமாக சுய இன்பம் செய்யும் ஆண்களுக்கும் நரம்புப்பிரச்சனைகள் ஏற்படும் என்பார்கள். இந்த நரம்புப் பிரச்சனைகளால் கூட சிலருக்கு கைகளில் நடுக்க ஏற்படுவது உண்டு. அவர்களின் விரல்ளில் எப்போதும் ஒரு நடுக்கம் இருந்து கொண்டு இருக்கும்.
சில விஷயங்களை தினமும் செய்ய அடிமைப்பட்டவர்கள்(Addict), மருத்துவ ஆலோசனை பெற்றுக் கொண்டு, அவற்றை சரி செய்ய, தமது வாழ்க்கை முறையில் மாற்றங்களை கொண்டு வர முயற்சிக்க வேண்டும்.
சிலருக்கு சிலவகை மருந்துகளை எடுத்துக் கொள்ளும் போது அவற்றின் பக்க விளைவுகளாகக் கூட இவ்வாறான நடுக்கங்கள் ஏற்படுவது உண்டு. அந்த மருந்துகள் எடுத்துக் கொள்வதை நிறுத்தும் போது, அது தானாகவே சரியாகும்.
எந்தவொரு தவறான பழக்கமும் இல்லாத சில ஆண்களுக்கு, அவர்களின் உடல் நிலை காரணாமாக கூட இந்த மாதிரி கை கால்கள் நடுங்குவது உண்டு. சில ஆண்கள் அளவுக்கு அதிகமாக உடற்பயிற்சி செய்வதன் காரணமாக, அல்லது நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் உடற்பயிற்சி செய்தால், அவர்களுக்கு கை கால் நடுக்கம் ஏற்படும்.
உங்களுக்கு நரம்புப் பிரச்சனைகள் அல்லது ஏதாவது மருத்துவப் பிரச்சனைகள் இல்லாவிட்டால், பதற்றத்தில்(Nervousness or Anxiety) உங்கள் கைகள், தொடைகள் நடுங்குவது ஒரு பயத்தின் வெளிப்பாடாகக்(e.g: Anxiety Shaking) கூட இருக்கலாம்.
சில ஆண்களுக்கு அவர்களுக்கு பிடித்த நபர்களுடன், அல்லது அவர்கள் ஒருதலையாக காதலிக்கும் நபர்களுடன் பேசும் போது பதற்றம், நடுக்கம் ஏற்படுவது உண்டு. இது இயல்பான விடையமாகும்.
அவர்கள் தமது மனதில் உள்ள ஆசைகள், அவர்களின் Crush களிடம் தம்மை அறியாது வெளிப்பட்டு விடும் என்ற தயக்கத்தில் பேசும் போது திக்கித்தடுமாறுவதும் உண்டு.
ஒருவர் மீது உங்களுக்கு ஏற்படும் Sexual Tension காரணமாகக் கூட உங்கள் உடல் இயல்பாக இயங்காமல் தட்டுத் தடுமாறலாம். என்ன செய்வது, எப்படி React பண்ணுவது என்று தெரியாமல் குழம்பி, பயத்தில் உடல் நடுங்கலாம்.
சிலவற்றை திரும்ப திரும்ப செய்யும் போது அவை மேம்படும். ஒரு முறை சொதப்பி விட்டால், அடுத்த முறையும் சொதப்பும் என்று அர்த்தம் இல்லை.
Keywords: Anxiety Shaking, Trembling, Vibrating, Tremors, Hypersensitive
Comments
Post a Comment