ஈரம், கிருமிகள் பல்கிப் பெருகுவதற்கு ஏதுவான சூழலை உருவாக்கக் கூடிய முக்கிய காரணியாகும். வயதுக்கு வந்த பின்னர் ஆண்களின் உடலில் உச்சந்தலை முதல் உங்கங்கால்கள் வரை, அந்தரங்கப் பகுதிகள் உள்ளடங்கலாக வியர்வை அதிகமாக சுரக்கும்.
அதன் காரணமாக தினமும் குளித்து சுத்தமாக இருக்காவிட்டால், அவர்களின் உடலில் இலகுவில் துர்வாடை வீச ஆரம்பித்து விடும். அதே போல உடலில் அங்காங்கே அரிப்புகளும், தோல் பிரச்சனைகளும் தோன்ற ஆரம்பிக்கும்.
அந்தரங்கப் பகுதிகளில் முடி வளர்ச்சியும் அதிகமாக இருக்கும். அதன் காரணமாக அதிக நேரம் எடுத்து, ஒழுங்காக சுத்தம் செய்வது அவசியமாகும். தலை முடியைப் போல, ஆண்கள் தமது அந்தரங்கப் பகுதியை Hair Dryer பயன்படுத்தி உலர்த்துவது நல்லதல்ல.
ஆண்கள் குளித்த பின்னர் உடலை நன்கு துவட்ட வேண்டும். அதிலும் குறிப்பாக அந்தரங்கப் பகுதிகளில், தொடைகளில், தொடை இடுக்குகளில் உள்ள ஈரத்தை நன்கு துடைத்து உலர்த்த வேண்டும்.
அதன் மூலம் ஆண்களின் உடலில் வியர்க்கும் போது துர்வாடை ஏற்படுவதை கட்டுப்படுத்த முடியும். அதே வேளை அந்தரங்கப் பகுதிகளில் அரிப்பு ஏற்படுவதையும் கட்டுப்படுத்த முடியும்.
ஆண்கள் மலம், சலம் கழித்த பின்னர் அந்த உறுப்புகளை நீரினால் அலசி சுத்தம் செய்த பின்னர், அவற்றை உலர்த்திய பின்னரே உள்ளாடையை அணிந்து ஆடைகளை அணிய வேண்டும்.
ஆண்களின் அந்தரங்கப் பகுதிகள் ஈரமாக இருக்கும் போதே உள்ளாடையையும் ஆடைகயையும் அணியும் போது அவை சீக்கிரம் ஈரமாக அதிக வாய்ப்பு உள்ளது.
அதன் காரணமாகவும் அந்தரங்கப் பகுதியில் அரிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. அதே நேரம் அவர்களின் உடலில் வியர்க்கும் போது அந்த வியர்வையில் சீக்கிரம் கிருமித் தொற்று ஏற்பட்டு உடலில் துர்வாடை ஏற்பட வாய்ப்பும் உள்ளது.
ஆண்கள் குளித்த பின்னர் சுத்தமான உள்ளாடைகளை அணிய வேண்டும். கை வசம் சுத்தமான உள்ளாடை இல்லாவிட்டால், ஏற்கனவே அணிந்த ஜட்டி, பனியனை தயவு செய்து மீண்டும் அணிய வேண்டாம்.
ஜட்டி, பனியன் போடாமல் கூட ஆண்களால் உடைகளை அணிய முடியும். ஆனால் குளித்த பின்னர், ஏற்கனவே அணிந்த ஜட்டி, பனியன்களை தோய்த்து, உலர்த்தாமல் மீண்டும் அணிவது ஆரோக்கியமானது அல்ல. அதன் மூலம் மீண்டு உங்கள் உடலில் கிருமித் தொற்றுக்கள் வேகமாகப் பரவ வாய்ப்பு உள்ளது.
சில ஆண்கள் அந்தரங்கப் பகுதிகளை உலர்வாக வைத்திருப்பதற்காக Talcum Powder யை அந்தரங்கப் பகுதியில் விசுறுவதுண்டு.
சிறுநீர் கழித்த பின்னர் ஆண்குறியின் மொட்டை நீரில் அலசிய பின்னர், அதன் மொட்டை Toilet Paper/Tissue Paper/Kerchief கொண்டு உலர்த்தலாம். ஆண்குறியின் மொட்டு உலர்ந்து விட்டதை உறுதி செய்த பின்னரே, ஆண்குறியில் முன் தோல் இருக்கும் ஆண்கள், ஆண்குறியின் மொட்டை முன் தோலால் மூட வேண்டும்.
பொதுக் கழிப்பறைகளில்(Public Toilets, Rest Rooms, Office Rest Room) மலம் கழிக்கும் போது, சுத்தம் செய்வதற்கு Adults Wet Wipes பயன்படுத்தலாம். இவற்றில் Alcohol பயன்படுத்தப்பட்டுள்ளதால் சீக்கிரம் சுத்தமும் ஆகிடும், விரைவில் சூத்தோட்டை பகுதியும் உலர்ந்தும் விடும்.
Comments
Post a Comment