ஆண்கள் ஜட்டி வாங்குவதற்கு என்று தனியாக துணிக்கடைகளுக்குச் செல்வது மிகவும் அரிதாகும். அதனால் சில ஆண்கள் கடைக்குச் செல்லும் போது அதிகளவான ஜட்டிகளை வாங்குவது உண்டு. ஆனால் அப்படி வாங்குவது நல்லதல்ல.
தினமும் அணிந்து துவைத்து பயன்படுத்தும் ஆண்களின் ஜட்டிகளின் ஆயுட்காலம் குறைந்தது மூன்று மாதங்கள் தான். அதற்கு மேல் அவற்றின் இலாஸ்டிக்குகள் பழுதடையாமல், ஜட்டியில் பெரிய ஓட்டைகள் இல்லாமல் பயன்படுத்துவது அந்த ஜட்டியின் Quality யிலேயே தங்கியுள்ளது.
அதற்காக Quality யான ஜட்டியாக இருந்தாலும் அதிகளவான ஜட்டிகளை வாங்கி பிரோவில் பூட்டி வைத்திருப்பது நல்லதல்ல. நாட்செல்ல செல்ல அவற்றின் இலாஸ்டிக்குகள் பழுதடையும். ஜட்டி புதிதாக Box உடன் இருந்தால் கூட, காலம் போகப் போக அவற்றின் துணி பழுதடைய ஆரம்பித்து விடும்.
ஆண்கள் Pack பண்ணாத(without Box) ஜட்டிகளை வாங்கும் போது அவற்றை சற்று இழுத்துப் பார்த்து, அவற்றின் இலாஸ்டிக்குள் நன்றாக உள்ளதா என்பதைப் பார்த்து வாங்க வேண்டும்.
ஆண்கள் வீட்டில் அணிந்திருக்க 2 - 3 ஜட்டிகளையும், வெளியில் செல்லும் போது அணிய மூன்று ஜட்டிகளையும் பயன்பாட்டில் வைத்திருக்க வேண்டும். ஆனால் அதற்காக வீட்டில் அணிந்திருக்க புது ஜட்டிகள் வாங்க வேண்டும் என்று அவசியமில்லை. அப்படி வாங்கினாலும் தவறில்லை.
வெளியில் செல்லும் போது அணியும் ஜட்டிகள் வாங்கி மூன்று மாதங்கள் ஆனதும், அவற்றை வீட்டில் அணிவதற்கு பயன்படுத்த ஆரம்பிக்கலாம். அவ்வாறு வெளியில் செல்லும் போது அணியும் ஜட்டிகளை வீட்டில் பயன்படுத்தும் போது, வீட்டில் பயன்படுத்திய ஜட்டிகளின் இலாஸ்டிக் பழுதடைந்திருந்தால் எறியலாம். அதே நேரம் வெளியில் செல்லும் போது அணிவதற்கு புதிதாக மூன்று ஜட்டிகளை வாங்க வேண்டும்.
குறிப்பு: புது ஜட்டியாக இருந்தாலும் ஒரு முறை நீரில் அலசி, காய வைத்த பின்னர் அணிவது நல்லது. சில ஜட்டி கம்பெனிகள் ஜட்டியின் துணிக்குப் போட்ட நிறச்சாயங்களை ஒழுங்காக கழுவாமல் இருக்கலாம். அதே நேரம், ஜட்டிகளை Store பண்ணி வைத்திருந்த இடத்தில் தூசுக்கள் படித்திருக்கலாம். அவற்றை சுத்தம் செய்யாது அணிந்தால், அந்தரங்கப் பகுதிகளில் சருமப் பிரச்சனை ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. இது ஜட்டிக்கு மாத்திரம் அல்ல, ஏனைய புது ஆடைகளுக்கும் பொருந்தும்.
Comments
Post a Comment